பாலமேடு : பாலமேடு சாத்தையாறு அணையின் உட்புறம் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அணையின் நீர்பிடிப்பு கொள்ளவு 29 அடி. மீன் துறைக்கு நான்கு அடி நீர் வழங்க வேண்டும். மீதமுள்ள 25 அடியில் எர்ரம்பட்டி, கீழச்சின்னனம்பட்டி, ஆதனுார், கோவில்பட்டி, முடுவார்பட்டி, தேவசேரி உட்பட 11 கண்மாய் பாசனத்திற்கும், புதிய ஆயக்கட்டு பகுதியான கோணப்பட்டி உட்பட 2000 ஏக்கர் பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விட வேண்டும். பத்தாண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித் துறையினர் நடத்திய ஆய்வில் 11 அடி வரை மண் மகுளம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சமீபத்திய ஆய்வில் மேலும் நான்கு அடி மண் மேவி இருப்பதும் தெரிந்தது.இந்நிலையில் அணையின் உட்புறம் நீர் ஆதாரத்தை பாதிப்பதாக கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் அணையின் நீர் பிடிப்பு பகுதி குறைவதுடன் பாலமேட்டிற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து கருவேல மரங்களை அகற்றி நீர் ஆதாரத்தை உயர்த்த வழி செய்ய வேண்டுமென கண்மாய் பாசன விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE