ஈஸ்வரிக்கு நடந்த தாலி இழவு...

Updated : ஜூலை 16, 2014 | Added : ஜூலை 16, 2014 | கருத்துகள் (56)
Share
Advertisement
ஈஸ்வரிகோவையைச்சேர்ந்தவர்.ஏழை குடும்பத்தில் பிறந்து ,படிக்க இயலாத பாமரத்தனமான ஆயிரக்கணக்கான பெண்களில் ஒருவர்.இவருக்கு 23 வயதாகும் போது ஆறுமுகம் என்ற கூலித்தொழிலாளியுடன் திருமணமானது.இப்போது மாப்பிள்ளையின் ஜாதகத்தை அனுப்பும்போது கூடவே மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ் உள்ளீட்ட எந்த நோயும் இல்லை என்ற முழுமருத்துவ பரிசோதனை செய்த சான்றிதழும் அனுப்பச்சொல்லி பெண்ணே கேட்கும்
ஈஸ்வரிக்கு நடந்த தாலி இழவு...

ஈஸ்வரி
கோவையைச்சேர்ந்தவர்.ஏழை குடும்பத்தில் பிறந்து ,படிக்க இயலாத பாமரத்தனமான ஆயிரக்கணக்கான பெண்களில் ஒருவர்.
இவருக்கு 23 வயதாகும் போது ஆறுமுகம் என்ற கூலித்தொழிலாளியுடன் திருமணமானது.
இப்போது மாப்பிள்ளையின் ஜாதகத்தை அனுப்பும்போது கூடவே மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ் உள்ளீட்ட எந்த நோயும் இல்லை என்ற முழுமருத்துவ பரிசோதனை செய்த சான்றிதழும் அனுப்பச்சொல்லி பெண்ணே கேட்கும் காலம்.
ஆனால் அப்படி எல்லாம் கேட்கத்தெரியாத, அதுபற்றி புரியாத ஈஸ்வரிக்கு கணவராக அமைந்த ஆறுமுகம் ஒரு இருதய நோயாளி.மனைவி ஈஸ்வரிக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை கொடுத்ததை தவிர வேறு எதையுமே தராத 'நல்லவன்'.ஒரு காலகட்டத்தில் சொல்லாமல் கொள்ளாமல் மணைவி பிள்ளைகளைவிட்டு தலைமறைவாகிவிட்டான்.
சிரிப்பு,சந்தோஷம்,நல்ல உணவு என்று எதையுமே அறியாத ஈஸ்வரி பிள்ளைகளுக்காக கூலி வேலை பார்த்து குடிசை வீட்டில் பிழைப்பு நடத்திவருகிறார்.
இப்படியாக பத்து வருடம் போனது,இடைப்பட்ட காலகட்டத்தில் கட்டிய மனைவியும்,பெற்ற பிள்ளைகளும் உயிருடனாவது இருக்கிறார்களா?என்றுகூட எட்டிப்பார்க்கவில்லை.
திடீரென கடந்த வாரம் ஆறுமுகத்தின் உறவினர்கள் ஈஸ்வரியை தேடிவந்து உன் புருஷன் இறந்து விட்டான், சொக்கம்பட்டி மைதானத்தில் வந்து கடைசியாய் ஒரு முறை பார்த்துவிட்டு, ஒரு பிடி மண்ணை தள்ளிவிட்டு போய்விடு என்று சொல்லியிருக்கின்றனர்.
மனதிற்குள் வெறுப்பை சுமந்து இருந்தாலும், தாலிகட்டிய பாவத்திற்காக ஒரு பிடி மண்தானே தள்ளிவிட்டு வந்துவிடுவோம் என்று சென்ற ஈஸ்வரிக்கு அங்கே நடந்த கொடுமைதான் 'தாலி இழவு'நிகழ்வாகும்.
சொக்கம்பட்டி இடுகாட்டிற்கு வந்திருந்த பலரும் பார்த்திருக்க, ஈஸ்வரியை புதைகுழியின் பக்கத்தில் உட்காரவைத்து தாலியை அறுத்தனர், பின்னர் முகம் முழுவதும் மஞ்சள் பூசி பெரிதாக குங்குமப்பொட்டு வைத்தனர், வைத்த மஞ்சள், குங்குமத்தின் ஈரம் மாறுவதற்குள் அதை அழித்தனர், தலைநிறைய பூவை வைத்தனர் அதன் வாசம் வீசுவதற்குள் அறுத்து புதை குழியினுள் எறிந்தனர், கை நிறைய வளையல்களை அணிவித்து அடுத்த நொடியே அதை உடைத்து நொறுக்கினர்.
பின்னர் வாய்விட்டு கதறி அழச்சொன்னார்கள்.
ஈஸ்வரியும் வாய்விட்டு கதறி அழுதார்,
அது புருஷன் ஆறுமுகம் இறந்த போன துக்கத்தினால் அல்ல, பலரும் பார்த்திருக்க 'தாலி இழவு' பெயரில் தனக்கு ஏற்படுத்திய அவமானம்தாங்காமல் வந்த அழுகை அது.
இந்த கையாலாகாத அப்பனால் இனி பூவும்,பொட்டும்,வளையலும் கூட அம்மா அணிய மாட்டார்கள் என்பதை அறிந்து பிள்ளைகளும் கூட அம்மாவை அந்த கோலத்தில் பார்க்கமுடியாமல் கதறி அழுதனர்.
நமது முன்னோர்கள் அந்த காலத்தில் செய்த அனைத்து சடங்கு சம்பிரதாயங்களுமே அர்த்தம் உள்ளவைதான் என்று சொல்வதற்கு இல்லை ,அப்போதும் பல தவறுகள் நடந்துதான் இருக்கின்றன, அதிலும் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும் பெண்களுக்கு ஆறுதல் தந்ததைவிட காயம் ஏற்படுத்தியதே அதிகம்.
அதில் ஒன்றுதான் உடன் கட்டை ஏறுதல், ஒரு காலகட்டத்தில் சம்பிரதாயமாக இருந்தது, பின்னர் அதைப்போல பெண்களுக்கு செய்யும் பெரும்பாவம் எதுவுமில்லை என்பதை உணர்ந்து தடை விதித்துவிட்டனர், இப்போது அதுபற்றிய பேசினாலே ஜெயில்தான்.
இப்படி பல விஷயங்களை அடுக்கலாம், அத்தனையும் பெண்களுக்கு எதிரான அவலங்களே என்று போட்டு உடைக்கலாம்.
அந்த வரிசையில் இன்னும் மீதமிருக்கும் கொடுமைதான் இந்த 'தாலி இழவு' நிகழ்வு.
அப்படியே பார்த்தாலும் தாலி மட்டும்தான் புருஷன் கொடுத்தது, பூவையும், பொட்டும், வளையலும் பிறந்த வீட்டு சீதனங்கள், அவை குழந்தை பருவம் முதல் இருந்து சுமந்திருப்பவை. அதை எடுக்கவும்,அழிக்கவும்,உடைக்கவும் இவர்களுக்கு யார் உரிமை தந்தது.
ஒரு இளம் பெண்ணை மொட்டையடித்து மூளியாக்கி வீட்டினுள் உட்காரவைப்பது மிகப்பழமையானதும்,பயங்கரமானதும் மட்டுமல்ல பைத்தியக்காரத்தனமானதும் கூட.
எப்படி இது படிப்படியாக தடுக்கப்பட்டு விட்டதோ அதே போல இந்த தாலி இழவும் தடை செய்யப்பட வேண்டும், அதற்கு பெண்ணுரிமை இயக்கம் போன்றவைகள் முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும்.
படங்கள், தகவல் உதவி: ஈரநெஞ்சம் மகேந்திரன்.
- எல்.முருகராஜ்


Advertisement


வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
10-ஆக-201408:52:05 IST Report Abuse
தாமரை கணவன் இறந்தால் அவர் கட்டிய தாலியைக் கழட்டி வைத்து விடுவதுடன் சடங்கை நிறைவு செய்து கொள்வது நல்லது பூ போட்டு வண்ண உடை இவையெல்லாம் பறிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.இவையெல்லாம் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.தாலியையுமெ பெண் விருப்பப் பட்டால் கழட்டலாம். இல்லையென்றால் தனது இறந்து போன கணவனின் ஞாபகமாக இருக்கட்டுமேன்றால் அதையும் இருக்க அனுமதிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Gajendran Gaja - Chennai,இந்தியா
26-ஜூலை-201415:37:45 IST Report Abuse
Gajendran Gaja தேவை இல்லாத காரணங்களுகாக போராடும் பெண் அமைபுகள் இதற்காக போரட வேண்டும் . மதத்தின் பெயரால் நடைபெறும் இந்த கொடுரத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்போம் . இதற்கென ஒரு அமைப்பை உருவாக்குவோம்...........
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
22-ஜூலை-201415:22:27 IST Report Abuse
Raj இந்த கொடுமை தடுக்க பட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X