சங்கீத சக்கரவர்த்தியின் சரித்திர பாதை

Added : ஜூலை 19, 2014 | கருத்துகள் (8)
Advertisement
"சின்னக் கண்ணன் அழைக்கிறான்; செல்லக் கண்ணன் அழைக்கிறான்; ராதையை, பூங்கோதையை...'' இந்த பாடலை கேட்கும் பலருக்கு இசை அமைப்பாளர் இளையராஜா ஞாபகத்துக்கு வந்தாலும், பாடலை பாடிய அந்த கம்பீர குரலுக்கு சொந்தக்காரரை மறக்க முடியாது.இந்திய இசையை வெளிநாட்டவர் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாக்கிய கர்நாடக இசை சக்கரவர்த்தி. இவர் பாடகர் மட்டுமல்ல, சிறந்த பாடலாசிரியர்.அவர்,
சங்கீத சக்கரவர்த்தியின் சரித்திர பாதை

"சின்னக் கண்ணன் அழைக்கிறான்; செல்லக் கண்ணன் அழைக்கிறான்; ராதையை, பூங்கோதையை...'' இந்த பாடலை கேட்கும் பலருக்கு இசை அமைப்பாளர் இளையராஜா ஞாபகத்துக்கு வந்தாலும், பாடலை பாடிய அந்த கம்பீர குரலுக்கு சொந்தக்காரரை மறக்க முடியாது.
இந்திய இசையை வெளிநாட்டவர் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாக்கிய கர்நாடக இசை சக்கரவர்த்தி. இவர் பாடகர் மட்டுமல்ல, சிறந்த பாடலாசிரியர்.
அவர், கஞ்சிரா, மிருதங்கம், வயோலா மற்றும் வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைக்க தெரிந்த இசைக்கருவி வல்லுனர்.
"பத்ம ஸ்ரீ”, "பத்ம பூஷன்”, "பத்ம விபூஷன்” மற்றும் "சங்கீத கலாநிதி” போன்ற இசையுலகின் உயரிய விருதுகள் பெற்றவர், பாலமுரளிகிருஷ்ணா. தன்னுடைய வசீகரக்குரலால் சிறு வயதிலேயே 'இசைமேதை' என புகழப்பட்டவர்.


கர்நாடக இசை குறித்து அவரது எண்ண வெளிப்பாடுகள்:


இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பலரும் கர்நாடக இசைக்கு பதிலாக மேற்கத்திய இசையை கற்கவே அதிகம் விரும்புகின்றனரே?
இதில் தவறு ஒன்றும் இல்லை. அனைத்து இசையும் கர்நாடக இசையின் வழித்தோன்றலே, மேற்கத்திய இசையை விரும்புவதால் கர்நாடக இசைக்கு பாதிப்பு ஏற்படப்போவதில்லை. கர்நாடக இசை உலகளவில் பரந்து விரிந்துள்ளது. அதை யாரும் சின்ன பந்தில் அடைத்து விட முடியாது.
பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றுவோர் கர்நாடக சங்கீதத்தை கற்றுக்கொள்வதால் அவர்களது கலாச்சாரம் நம்மை பாதிக்காதா?
இன்று உலகம் முழுவதும் கர்நாடக இசை பரவியுள்ளது. அனைவருக்கும் இந்த இசை குறித்து தெரிந்துள்ளது. கர்நாடக சங்கீதத்தை பின்பற்றும் இளைய சமுதாயத்தினருக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளன. குழந்தைகள் சபாக்களில் பயமின்றி கச்சேரி செய்கின்றனர். இவையனைத்தும் கர்நாடக சங்கீதத்தின் வளர்ச்சியை தெரிவிக்கின்றன. கலாச்சாரம் பாதிக்கப்படாது.
சினிமா துறையில் கர்நாடக சங்கீதத்தின் வளர்ச்சி எப்படியுள்ளது?
இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் இசைக்கப்படும் அனைத்து பாடல்களும் கர்நாடக இசையில் தான் அமைக்கப்படுகின்றன. முந்தைய காலகட்டங்களை ஒப்படும் போது வளர்ச்சி அளப்பறியது.
இன்று வெளிநாட்டு குழந்தைகளுக்கு 'ஸ்கைப்' எனும் முறையில் இங்கிருந்து இசை கற்பிக்கப்படுகிறது. இது நேரடியாக கற்பிப்பதற்கு இணையாகுமா?
நிச்சயமாக இதுபோன்ற தொழில்நுட்பத்தால் குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்ளலாம்.
கர்நாடக சங்கீதம் வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே என்ற நிலை உள்ளதே, இந்நிலை தற்போது எப்படியுள்ளது?
கர்நாடக சங்கீதம் அனைத்து தரப்பு மக்களுக் கும் ஒன்று தான். அனைத்து பள்ளி, கல்லூரிகளில் இசைக்கான பிரத்யேக வகுப்புகள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதன் மூலம் நீங்கள் என்ன செய்தாலும், அது உலகம் முழுவதும் எளிதில் சென்றடைகிறது.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே கர்நாடக இசை கற்றுக்கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறதே?
தவறு. சென்னை தவிர கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இதற்கான வாய்ப்புகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. அங்கிருந்தும் பல்வேறு திறமைசாலிகள் வெளிவந்து கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatagiri Guruvaraju - Rajapalayam,இந்தியா
13-செப்-201411:21:21 IST Report Abuse
Venkatagiri Guruvaraju Our இந்தியன் கிரேட் முசிசியன் லாங் Live
Rate this:
Cancel
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
12-செப்-201400:35:55 IST Report Abuse
Neelaa இவர் ஒரு ஜீனியஸ், மாமேதை பல தலை முறைகளையும் தாண்டி நிற்கும் இவர் நிபுணத்துவம் என்பதில் சந்தேகம் இல்லை இப்படி ஒரு தலை சிறந்த பல்கலைக்கழகமாகவே இருப்பினும், தலைக்கனம் துளி கூட இல்லாமல், இறைவன் போல "சங்கீதமும் ஒன்றே" என்ற பாதையை பின்பற்றி, பிற இசை வடிவங்களாகட்டும், தொழில் நுட்பமாகட்டும், எல்லாவற்றையும் வரவேற்று, ஒருவரையும் துவேஷிக்காமல் அரவணைத்து நிற்பதில் திரு மங்களம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு நிகர் அவரே எதோ வந்தோம், பாடினோம், போனோம் என்று இல்லாமல், பல இசை வடிவங்களயும் கரைத்துக்குடித்தவர், பல இசைக்கருவிகளையும் இசைக்க வல்லவர், பல மொழிகளில் பாடல்கள் இயற்றவும், புதிய ராகங்கள் உருவாக்கவும் வல்லவர் பாடல் பாடுவதிலோ கேட்கவே வேண்டாம்.. பிருகாக்கள், சங்கதிகள், மூன்று ஸ்தாயிகளில் (3 Octaves) கங்கை, காவிரி பிரவாகமாக பெருக்கெடுத்து ஓடும்... எண்ணற்ற ஆனந்தத்தை கேட்பவர் செவிகள் வழி யாக உண்டாக்கும். இந்த மாபெரும் இசை சக்கரவர்த்தி, நல்ல ஆரோக்கியத்தோடு, நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன் பின் குறிப்பு: பாரத ரத்னா விருது, இவர் வாழும் காலத்திலேயே இவருக்கு வந்து சேர்ந்தால், விருதுக்கு பெருமை.
Rate this:
Cancel
Yegnasamy Rajagopalan - Bangkok,தாய்லாந்து
11-செப்-201408:38:47 IST Report Abuse
Yegnasamy Rajagopalan Humble pranams to Dr.M Balamuralikrishna Garu. You are the supremo classical singer in the world. Your exordinary talent, dedication to the Classical music is your alapana in any ragam especially in Janya ragams. To cite an example, the ragam "Sunada Vinodini" i.e. Mysore Vasudevacharyar's composition 'Devade Deva" can maximum 7 minutes rendition. But, you deilvered the same song in 20 minutes by elaborating the ragam. I tink nobody is that. You are always Balamurali as far as sangeetham concerned. May God bless you with good health, wealth and long liffe to serve us. Regards, Y. Rajagopalan, Bangkok
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X