"டோர் டெலிவரியாகும் "பர்த் சர்ட்டிபிகேட்| Dinamalar

"டோர் டெலிவரி'யாகும் "பர்த் சர்ட்டிபிகேட்'

Added : ஜூலை 22, 2014 | |
"நம்ம கார்ப்ரேஷன்ல இருந்து, "பர்த் சர்ட்டிபிகேட் டோர் டெலிவரி' செய்றாங்க. தமிழ்நாட்டுல, வேறு எங்கேயும் இந்த மாதிரி வசதி இல்லீங்க,'' என்று விவாதத்தை துவக்கினாள் மித்ரா. "சர்ட்டிபிகேட்டை டோர் டெலிவரி செய்ற அளவுக்கு முன்னேறிட்டாங் களா? பரவாயில்லையே,'' என்று பாராட்டிய சித்ரா தலையில், குட்டு வைத்தாள் மித்ரா. "சொல்ல வர்றத, முழுசா கேளுங்க. போர்த் ஜோன்ல இருக்கற
"டோர் டெலிவரி'யாகும் "பர்த் சர்ட்டிபிகேட்'

"நம்ம கார்ப்ரேஷன்ல இருந்து, "பர்த் சர்ட்டிபிகேட் டோர் டெலிவரி' செய்றாங்க. தமிழ்நாட்டுல, வேறு எங்கேயும் இந்த மாதிரி வசதி இல்லீங்க,'' என்று விவாதத்தை துவக்கினாள் மித்ரா.
"சர்ட்டிபிகேட்டை டோர் டெலிவரி செய்ற அளவுக்கு முன்னேறிட்டாங் களா? பரவாயில்லையே,'' என்று பாராட்டிய சித்ரா தலையில், குட்டு வைத்தாள் மித்ரா.


"சொல்ல வர்றத, முழுசா கேளுங்க. போர்த் ஜோன்ல இருக்கற சுகாதார ஆய்வாளர் ஒருத்தரு, "பர்த் சர்ட்டிபிகேட்'டுக்கு "அப்ளை' பண்றப்பவே, விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணை வாங்கிக்கிறாரு. "சர்ட்டிபிகேட் ரெடியானதும் நானே போன் செய்றேன்... முடிஞ்சா... நேர்ல வந்து கொடுத்திடுறேன்'னு சொல்றார். "ஓகே' சொல்றவங்களா இருந்தா... உடனே... 300 ரூபா செலவாகும்னு "டீல்' பேசுறார். அலைச்சல் மிச்சமாகும்னு, பலரும் "ஓகே' சொல்லிடுறாங்க. அவரும், "சர்ட்டிபிகேட்' ரெடியானதும், வீடு தேடி போயி, "டெலிவரி' செஞ்சுட்டு, கறாரா கலெக்சன் பண்ணிட்டு வந்திடுறார்,'' என்று முடித்தாள் மித்ரா.


அப்போது, கிச்சனில் இருந்து ஸ்வீட் தட்டை எடுத்து வந்தாள் சித்ரா.


என்ன கவனிப்பு பலமா இருக்கு என மித்ரா கேட்க, "போலீஸ் கமிஷனரே, இன்ஸ்பெக்டர்களுக்கு ஸ்வீட் கொடுத்து, பழகி வெச்சுக்குங்கன்னு சொன்னாரு; அதான்,'' என்று பேச்சை இழுத்தாள் சித்ரா.


"என்னக்கா... புதுசா இருக்கு; புரியும்படி சொல்லுங்க,'' என்றாள் மித்ரா.


"நகை அடகு கடை உரிமையாளர்களுக்கான மீட்டிங், கமிஷனர் அலுவலகத்துல நடந்துச்சு. அதுல, பேசுன போலீஸ் கமிஷனர்,


"உங்க ஏரியா இன்ஸ்பெக்டருங்கள பழகி வெச்சுக்குங்க; சும்மா போயி பார்த்தா அடையாளம் வெச்சுக்க மாட்டாங்க; ஸ்வீட்டோட போய் பாருங்க, நல்லா ஞாபகம் வெச்சுக்குவாங்கன்னு வெளிப்படையா பேசுனாரு,'' என்றாள் சித்ரா.


"யதார்த்தமா பேசியிருக்காரு, ஆனா, இன்ஸ்பெக்டருங்களுக்கு சுகர் பிரச்னை இல்லாம இருக்கணுமே; இல்லேன்னா சிக்கல் ஆயிடுமே,'' என, கிண்டலடித்தாள் மித்ரா.


"சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கு, இப்பவே, தயாராக ஆரம்பிச்சிட்டாங்களாம்,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.


"சுதந்திர தினம் கொண்டாட தயாராகி, என்ன செய்றது? ராணுவத்துக்கும், முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்துக்காகவும் வசூலிக்கும் கொடி நாள் நிதியை சுருட்டிய அதிகாரிகளை என்ன செய்றது,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.


"எந்த டிபார்ட்மென்டுல சுருட்டுனாங்க. கொஞ்சம் விளக்கமா சொல்லுப்பா,'' என, துருவினாள் சித்ரா.


"ஒவ்வொரு வருஷமும், அரசாங்க அலுவலகங்கள்ல கொடி நாள் வசூலிப்பாங்க. இதுவரைக்கும் கோவை மாவட்ட படை வீரர் நல அலுவலகம் மூலமா, திருப்பூர் மாவட்டத்துல வசூல் நடந்துச்சு. துறை வாரியா நிதி திரட்ட இலக்கு நிர்ணயிச்சு கொடிகளை கொடுத்தாங்க. நிதி வசூலிச்ச பல அதிகாரிங்க, முழுமையா ஒப்படைக்காம, "டிரான்ஸ்பர்' வாங்கிட்டு போய்ட்டாங்க. பல பேரு, வசூலிச்ச நிதியை இன்னும் முழுசா ஒப்படைக்காம இருக்காங்க. திருப்பூர்ல புதுசா அமைச்சிருக்கிற, படை வீரர் நல அலுவலகம்தான், இனிமே இதை கவனிக்கணும்,'' என்றாள் மித்ரா.


"பொதுவா அரசியல்வாதிகதான், கூட்டம் போடுறதுக்கும்; விழா நடத்துறதுக்கும் வசூல் பண்ணுவாங்க; இப்ப, அதிகாரிகளும் ஆரம்பிச்சுட்டாங்க,'' என, புலம்பிக்கொண்டே, காபி டம்ளரை நீட்டினாள், சித்ரா.


காபியை வாங்கி உறிஞ்சிய மித்ரா, ""ஏன், புலம்பிக்கிட்டே இருக்குற, விஷயத்தை சொல்லுக்கா,'' என கேட்க, "ஆடை தயாரிக்கிற கம்பெனிகளுக்கு கவர்மென்ட் ஏகப்பட்ட சலுகை கொடுக்குது. அதை அனுபவிக்கனும்னா, ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளோட தயவு தேவைப்படுது. ஆடை அனுப்புன ஆதாரம்; மூலப்பொருள் வாங்குன பில்லுனு சகலத்தையும் கொடுக்கணும்; எல்லாத்தையும் கொடுத்தாலும், சில அதிகாரிங்க, "பாக்கெட்'டை நெறைச்சாத்தான், கையெழுத்து போடுறாங்க. இப்ப, அரசு அலுவலகத்துல மீட்டிங் ஏற்பாடு செய்ற செலவையும், ஆடை தயாரிக்கிறவங்ககிட்ட வசூலிக்கிறாங்க. இதுக்குன்னே தனியா ஆள் நியமிச்சு, கம்பெனிக்கு அனுப்பி வெக்கிறாங்க. அதிகாரி அனுப்புன ஆளாச்சே, வெறுங்கையோட அனுப்புனா, "ஆப்பு' வெச்சுடுவாங்களோன்னு பயந்து, "கவனிச்சு' அனுப்புறாங்க,'' என, ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள், சித்ரா.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X