பதிவு செய்த நாள் :
கருத்துகள் (6)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

மரபணு மாற்று பயிர்களை, சோதனை முறையில் பயிர் செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், இத்திட்டத்தை, மாநில முதல்வர்கள் மூலம் எதிர்க்க, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

'மரபணு மாற்று பயிர்களை, பரிசோதனை முறையில் சாகுபடி செய்யலாம்' என, மத்திய அரசு அனுமதி வழங்கிஉள்ளது. இது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக விவசாயிகள் பலரும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக, மிகப்பெரிய அளவில், போராட்டங்களை நடத்தவும் தயாராகி வருகின்றனர்.

அவசர அனுமதி:இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அளித்த பேட்டி:விருத்தகிரி, பொதுச் செயலர், இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு: மரபணு மாற்று பயிர்களை சாகுபடி செய்ய எந்த நாடும், இதுவரை, 100 சதவீத அளவிற்கு அனுமதி அளிக்கவில்லை. அப்படி இருக்கும் போது, மத்திய அரசு, இவ்விஷயத்தில் அவசர அவசரமாக அனுமதி வழங்கியது, யாரை திருப்திப்படுத்துவதற்கு என்று தெரியவில்லை.மரபணு மாற்று பயிர்கள் மூலம் உற்பத்தியான பொருட்களை கொண்டு, விலங்குகளுக்குத்தான் சோதனை நடத்தப்பட்டது. இப்போது, மனிதர்களுக்கு சோதனை நடத்தும் வகையில், வயல்வெளி பரிசோதனைக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு உற்பத்தி

செய்த பொருட்களை சாப்பிட்டால், பெண்களுக்கு குறை பிரசவம் நேர வாய்ப்பு உள்ளது. மலட்டுத் தன்மை ஏற்படவும், கர்ப்பத்திலேயே குழந்தை கள் இறக்கவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, மனிதனுக்கு கேடு விளைவிக்கும் மரபணு மாற்று பயிர்களை, இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது. இவ்விஷயத்தை, அனைத்து மாநில முதல்வர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம்.அவர்கள் மூலம், எம்.பி.,க்களிடம் பேசி, பார்லிமென்டில், இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளோம். எங்கள் கூட்டமைப்பு, இந்த மரபணு மாற்று பயிர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடுமையாக போராட்டம் நடத்தும்.

பரிசோதனை:அரச்சலூர் செல்வம், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு: 'மனிதர்கள், கால்நடைகள், இயற்கைக்கு பாதிப்பு இல்லை என்பதை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படும்' என, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.இப்போது, திடீரென மரபணு மாற்று பயிர்களை வயல்வெளி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு, ஆய்வு நடந்தால், காற்று, நுண்ணுயிரிகள், பூச்சிகள், மகரந்தத் தூள் மூலம், அவை மற்ற பயிர்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த 2006ல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மரபணு மாற்று நெல் உற்பத்தி செய்யப்பட்டு, ஜப்பானுக்கு அனுப்பப்பட்டது. அங்கு, ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த வயல்வெளி பரிசோதனை மூலம், இந்த கலப்படம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

வல்லுனர் குழு:இதனால், அமெரிக்காவில் உற்பத்தியான நெல் தடை செய்யப்பட்டு, அந்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதால், இந்தியாவிற்கும், வரும் காலத்தில் இதே நிலை ஏற்படும்.மரபணு மாற்று பயிர்கள் தொடர்பாக, அறிக்கை தயாரிப்பதற்காக,

Advertisement

தலை சிறந்த உயிரியல் விஞ்ஞானிகள் அடங்கிய தொழில்நுட்ப வல்லுனர் குழுவை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது.ஓராண்டுக்கு முன், இக்குழு தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், 'இந்தியாவில், மரபணு மாற்று பயிர்களை சோதனை செய்வதற்கு தேவையான ஆய்வுக் கூடமும், நுணுக்கமாக சோதிக்க, வல்லுனர்களும் இல்லை. எனவே, 10 ஆண்டுகளுக்கு, இந்தியாவில், மரபணு மாற்று பயிர்களை அனுமதிக்கக் கூடாது' என, தெரிவிக்கப்பட்டது. 'உலகின் பல நாடுகளில் நடத்தப்பட்ட வயல்வெளி சோதனை மூலம், மற்ற பயிர்களில் கலப்படம் நடந்துஉள்ளது. எனவே, இந்தியாவில் வயல்வெளி சோதனைக்கு அனுமதிக்கக் கூடாது' என, இறுதி அறிக்கையும், கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பானவழக்கு, தற்போது கோர்ட்டில் உள்ளது.

தேர்தல் அறிக்கை:தற்போது அனுமதி வழங்கியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. 'தமிழகத்தை பொறுத்தவரை, மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதியில்லை' என, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போது, அக்கட்சி பல போராட்டங்களையும் நடத்தியுள்ளது. இருப்பினும், அண்டை மாநிலங்கள் மூலம், தமிழகத்தில் மரபணு மாற்று கலப்படம் ஏற்பட வாய்ப்புள்ளது.இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட, முதல்வர் வலியுறுத்த வேண்டும். தமிழக அரசியல் கட்சிகளும், இதற்கு ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.இது தொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு, தமிழக விவசாயிகள் மட்டுமின்றி, அனைத்து மாநில விவசாயிகளும், 'பேக்ஸ்' அனுப்பும் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.மத்திய அரசு இதற்கு இணங்காவிட்டால், கோர்ட்டை அணுகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RPS - USA,யூ.எஸ்.ஏ
27-ஜூலை-201401:33:21 IST Report Abuse
RPS இந்த GMO Foods ஆல் அமெரிக்கா மற்றும் வெளி நாடுகளில் மக்கள் வயிறு சம்மந்தப்பட்ட மற்றும் பல auto immune disorders என்று சொல்லப்படும் கொடிய நோய்களினால் அவதி படுகிறார்கள். இதை தவிர்க்க மக்கள் Organic என்னும் இயற்கை உணவு வகைகளுக்கு மாறுகிறார்கள். நம்ம ஊரில் இதை அறிமுகபடுத்தி எல்லாருடைய உடல் நலத்தையும் கெடுக்காதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
26-ஜூலை-201410:22:27 IST Report Abuse
Divaharan எதிர்கட்சியாக இருக்கும் பொது எதிர்க்க வேண்டும் ஆளும் கட்சியானவுடன் நிலையை மாற்றி கொள்ள வேண்டும். இவர்களுக்கு என ஒரு கொள்கை கிடையாதா?
Rate this:
Share this comment
Cancel
S. Dhanasekaran - Aktau,கஜகஸ்தான்
26-ஜூலை-201409:22:18 IST Report Abuse
S. Dhanasekaran மாற்றங்கள் என்னவோ இன்றைய நடைமுறை வாழ்வியலில் அவசியம் என இருந்தாலும், இது போன்ற கேடு விளைவிக்கும் செயற்கைமிகு அழிவுபாதைகளுக்கு நடுவண் அரசு ஒருபோதும் துணை போககூடாது, மேலும் மறைமுகமாக அந்நிய ஆதிக்கத்திர்க்கும், அவர்களிடம் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு வெகு விரைவில் தள்ளப்படுவோம் என்பது முற்றிலும் உண்மை, சமீபத்தில் கூட மறைந்த திரு, மணிவண்ணன் (திரைப்பட இயக்குனர்) ஒரு காணொளி ஊடாக இந்த பரப்புரையை எடுத்துரைத்தார் என்பதுவும் இந்த இடத்தில பதிவு செய்ய வேண்டிய தருணம். சுப.தனசேகரன்.
Rate this:
Share this comment
Cancel
srini - chennai,இந்தியா
26-ஜூலை-201408:48:26 IST Report Abuse
srini பாஜக தனது நரி புத்தியை ஆரம்பித்து விட்டது. இது தொடர்ந்தால் அடுத்த எலக்ஷனில் எதிர் வரிசைதான். இதை எல்லாம் பார்க்கும்போது பாஜக மீதும் மோடி மீதும் எரிச்சல் தான் வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
Periyabalan - Chennai,இந்தியா
26-ஜூலை-201407:51:34 IST Report Abuse
Periyabalan அரச்சலூர் எத்தனை ஏக்கரில் என்ன விவசாயம் செய்கிறார்?
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-ஜூலை-201404:36:54 IST Report Abuse
Kasimani Baskaran மரபணு படித்தவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு அந்தத்துறை வளர்க்கவேண்டும் என்றால் எப்படி முடியும்? bio technology இன்னும் வருடங்களின் அதி முக்கியத்துவம் பெரும் குறிப்பாக் மரபணு ஆராய்ச்சி... இந்தியா தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்தால் - இன்னும் பின் தங்கிவிட வாய்ப்பு அதிகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X