திருப்பூர் முருகம்பாளையத்தில் உள்ளது காது கேளாதோர் பள்ளி.சுமார் 300 படிக்கும் இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அணைவருக்கும் காது கேட்காது என்பதுடன் பெரும்பாலான பிள்ளைகளுக்கு பேசவும் வராது. மேலும் இவர்களில் பலர் ஆதரவற்ற குழந்தைகளும் கூட.
இதே குறையுள்ள கே.முருகசாமியால் நடத்தப்படும் இந்த பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு படிப்பை தாண்டி தனித்திறமை இருந்தால், அதனை ஊக்கப்படுத்தும் விதத்தில் பள்ளியின் செயல்பாடுகள் உள்ளது.
அந்த வகையில் பிளஸ் டூ முடித்த பிள்ளைகளுக்கு சேவை மனது கொண்ட புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் சொல்லித்தர முன்வந்ததை அடுத்து கடந்த ஒரு வருடமாக அவர்களுக்கு புகைப்படக்கலை சொல்லித்தரப்பட்டது.
இதில் சீனிவாசன், சந்தோஷ், செல்வகனி, மோகனபிரியா, விஜயலட்சுமி ஆகிய ஐந்து காது கேளாத, வாய் பேச இயலாத மாணவ, மாணவிகள் மிக அருமையாக போட்டோகிராபியை கற்றுக் கொண்டனர்.
கண்காட்சியை இன்றே பாருங்கள்:
இவர்கள் காங்கேயம் காளைகளையும் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நிகழும் கிராமத்து வாழ்வியலையும் ஒரு தீமாக வைத்துக்கொண்டு அருமையாக படமாக்கியுள்ளனர்.
இவர்கள் எடுத்த படங்களை தற்போது சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் நடந்துவரும் இமேஜ் புகைப்பட எக்ஸ்போவில் கண்காட்சியாக வைத்துள்ளனர்.
கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்த போது இவர்கள் பேச நினைப்பதை எல்லாம் அந்த படங்கள் பேசுவதை உணரமுடிந்தது.
இங்குள்ள படங்கள் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி தொடர்பான விசாரணைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: குமரன் 9941010115.
- எல்.முருகராஜ்
குறிப்பு:இவர்களின் புகைப்படங்களை சிவப்பு பட்டையில் போட்டோ கேலரியை கிளிக் செய்து பார்க்கவும்.