கிறிஸ்தவ மத போதகர் கைது

Added : ஜூலை 29, 2014 | கருத்துகள் (6)
Advertisement
 கிறிஸ்தவ மத போதகர் கைது

மூணாறு : பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்தவ மத போதகரை, போலீசார் கைது செய்தனர். கேரளா, வண்டிப்பெரியார் அருகே இஞ்சிக்காடு எஸ்டேட்டை சேர்ந்த, கிறிஸ்தவ மத போதகர் ஜோமோன், 28. இவரது முதல் மனைவி இறந்து விட்டார். அதன்பிறகு, ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஜோமோன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், இதே பகுதியில் வசிக்கும், 10ம் வகுப்பு மாணவியின் தாயுடன் ஏற்பட்ட நட்பால், அவரது வீட்டிற்கு, ஜோமோன் அடிக்கடி சென்று வந்துள்ளார். கடந்த, 6ம் தேதி, மாணவியின் வீட்டிற்கு சென்ற ஜோமோன், அங்கு தனியாக இருந்த மாணவியை, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்தார்.இதையறிந்த மாணவியின் தாயார் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாணவிக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. மாணவி வாக்குமூலத்தின்படி, போலீசார், ஜோமோனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KRK - Kumbakonam,இந்தியா
30-ஜூலை-201401:33:46 IST Report Abuse
KRK 28 வயசுக்குள்ள ரெண்டு கல்யாணம் முடிஞ்சி மூணாவதுக்கு வேற புது முயற்சி? எப்பிடிடா முடியுது உங்களால? சராசரியா 31 வயசிலதாண்டா கல்யாணமே நடக்குது இப்பல்லாம் . ஐயோ கடவுளே இப்ப நான் என்ன பண்றது? எனக்கு ஒண்ணுமே புரியலையே. இதுல இவர் ஒரு மத போதகர் வேற. எந்த வீட்டுக்குள்ளும் எளிமையா போய்டுவார் போல. பாவம் எளியவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
.Dr.A.Joseph - London,இந்தியா
29-ஜூலை-201410:49:45 IST Report Abuse
.Dr.A.Joseph அளவுக்கு அதிகமான "தசம பாகங்கள்" இவர்களை இப்படி ஏமாற்ற வைக்கிறது.இதுபோல நிறைய " பொய் வேடம்" தரித்தவர்கள் கொழுத்து அலைகிறார்கள். இந்த கபட வேடதாரிகள் கடவுளிடம் தாங்கள் நேரடியாக பேசுவதுபோல காட்டி கொள்வார்கள்.இவர்கள் வியர்வை சிந்தாமல் சம்பாதிப்பவர்கள். எப்படி வலியுறுத்தினாலும் கண்ணை மூடிக்கொண்டு பக்தன் தான் ஏமாறுகிறான்.தயவு செய்து எச்சரிக்கையாய் இருங்கள்.கடவுளுக்கு இடைத்தரகன் கிடையாது.நிறைந்த அன்புடன் ..........................................................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்
Rate this:
Share this comment
Cancel
அறிவா லயதாத்தா - Chennai,இந்தியா
29-ஜூலை-201410:37:45 IST Report Abuse
அறிவா லயதாத்தா எவேன்ஜெலிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு சொந்த வணிகமாக கிறித்தவ சபை மூலைக்கு மூலை துவக்கப்படுகிறது.ஜபம் மூலம் உங்களை பணக்கார்களாக்குகிறேன், எய்ட்ஸ் போன்ற வியாதிகளை தீர்த்துவைக்கிறேன் , திருமணம் நடக்க வைக்கிறேன் என்று கூறி ஏமாற்றுவோருக்கு மதம் ஒரு நலல் மார்க்கமாகக் கிடைதுள்ளது. இவர்களிடம் ஏமாந்தவர்கள் பல லட்சம். எல்லா மதமும் ஒன்றே என்று மதசார்பின்மை பேசும் நாட்டில் இதுபோன்ற மத மாற்ற சபைகள் எதற்கு? என் ஜி ஒ என சொல்லிக்கொண்டு அன்னியப் பணத்தின்மூலம் தவறான வழியில் செல்பவர்களை விரட்டியடித்தால் நலம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X