சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம்: மோசடி 'பெயிண்டர்' கைது

Added : ஜூலை 30, 2014 | கருத்துகள் (1)
Advertisement

கோவை : கோவையில் ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெயிண்டரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை, ம.ந.க., வீதியை சேர்ந்தவர் சக்திவேல், 37; பெயிண்டர். இவரது மனைவி மகேஸ்வரி, 25. இவர் நேற்று முன்தினம் கோவை மாநகர அனைத்து மகளிர் மேற்கு போலீசில், தனது கணவர் குறித்து புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், 'கடந்த 2013ம் ஆண்டு செப்., மாதம் எனக்கும், சக்திவேல் என்பவருக்கும் பேரூர் கோவிலில் திருமணம் நடந்தது. அதிகளவு பாலியல் தொந்தரவு கொடுத்து, சித்ரவதை செய்தார். இதனால், எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, சில நாட்களுக்கு முன் எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், தனலட்சுமி என்ற பெண்ணை எனக்கு தெரியாமல் கணவர் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, கொலை மிரட்டல் விடுக்கிறார்,' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

போலீஸ் விசாரணையில், மகேஸ்வரி, தனலட்சுமி மட்டுமின்றி, கடந்த 2002ம் ஆண்டு கோவையை சேர்ந்த கவிதா, இதற்குபின் காமாட்சி, கஜலட்சுமி ஆகிய மூன்று பெண்களை சக்திவேல் திருமணம் செய்து, வீட்டை விட்டு விரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடியாக ஐந்து பெண்களை திருமணம் செய்தது தெரியவந்தது. அதிகளவு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததால், பெண்கள் இவரை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. சக்திவேல் மீது திருமணங்களை மறைத்து பெண்களை ஏமாற்றியது, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan - Sivakasi  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூலை-201420:58:52 IST Report Abuse
kannan பெண்மைக்கு மதிப்பு கிடைக்காத வரை நம் நாடு முன்னேற போவதில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X