புகைப்படங்களுக்கு ஏழேகால் லட்சம்ரூபாய் பரிசு

Updated : ஆக 01, 2014 | Added : ஆக 01, 2014 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தார் நடத்திய சர்வதேச புகைப்பட போட்டிகளில் கலந்து கொண்ட புகைப்படங்களில் வெற்றி பெற்ற படங்களுக்கு ஏழே கால் லட்சம் ரூபாயை பரிசாக அள்ளித்தந்து சிறப்பித்து உள்ளனர்.புகைபடக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நிறுவனம் சார்பாக டிஜே நினைவு புகைப்பட போட்டி கடந்த 2012-ல் நடந்தது.அப்போது கிடைத்த வரவேற்பை அடுத்து வருடந்தோறும் இந்த
புகைப்படங்களுக்கு ஏழேகால் லட்சம்ரூபாய் பரிசு

கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தார் நடத்திய சர்வதேச புகைப்பட போட்டிகளில் கலந்து கொண்ட புகைப்படங்களில் வெற்றி பெற்ற படங்களுக்கு ஏழே கால் லட்சம் ரூபாயை பரிசாக அள்ளித்தந்து சிறப்பித்து உள்ளனர்.
புகைபடக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நிறுவனம் சார்பாக டிஜே நினைவு புகைப்பட போட்டி கடந்த 2012-ல் நடந்தது.அப்போது கிடைத்த வரவேற்பை அடுத்து வருடந்தோறும் இந்த போட்டிகளை நடத்திவருகின்றனர்.
இந்த வருடம் இந்த நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் நிர்வாக இயக்குனருமான டி.ஜெயவர்த்தனவேலு நினைவாக நடைபெற்ற இந்த போட்டிக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.
மார்ச் ஒன்று முதல் ஜூன் 30ம்தேதி வரை படங்கள் பெறப்பட்டன.இயற்கை (பாலூட்டிகள் தவிர்த்து)என்ற தலைப்பில் படங்கள் வரவேற்க்கப்பட்டன.சர்வதேச அளவிலான புகைப்படக்கலைஞர்கள் பங்கேற்கலாம் ஆனால் படங்கள் இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களாக இருக்கவேண்டும் என்ற விதியின் அடிப்படையில் 1556 புகைப்படக்கலைஞர்கள் பங்கேற்று 3150 படங்களை அனுப்பியிருந்தனர்.
கோவை மருத்தாச்சலம் நெறிப்படுத்திய இந்த புகைப்பட போட்டியில் பங்கேற்ற படங்களை கணேஷ் சங்கர் தலைமையிலான மூத்த புகைப்படக்கலைஞர்கள் தேர்வு செய்து வழங்கினர்.
முதல் பரிசாக அரியானாவைச்சேர்ந்த சந்தீப் எடுத்த படத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் பரிசும்,பெங்களூருவைச் சேர்ந்த யாஷ்பால்ரதோருக்கு இரண்டு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாயும்,பொள்ளாச்சியைச் சேர்ந்த சிறுமி சித்தாராவிற்கு மூன்றாம் பரிசாக ஒன்றரை லட்ச ரூபாயும் மேலும் ஐந்து பேருக்கு சான்றிதழும் ஊக்கப்பரிசாக பத்தாயிரம் ரூபாயுமாக மொத்தம் ஏழேகால் லட்சம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டது.
பரிசுத்தொகையினை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும்,தலைவருமான சஞ்சய் ஜெயவர்த்தனவேலு வழங்கினார்.பரிசு பெற்ற மற்றும் தேர்வு செய்யப்பட்ட படங்களின் கண்காட்சியினை ராஜ்யலட்சுமி ஜெயவர்த்தனவேலும் துவக்கிவைத்தார்.
கண்காட்சி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ( 3ம் தேதி) வரை கோவையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் கலை அரங்கில் நடைபெறும்.கண்காட்சி தொடர்பான விசாரணைகளுக்கு எல்எம்டபூள்யூ நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜனை தொடர்பு கொள்ளவும்,தொடர்பு எண்: 9842245057.
- எல்.முருகராஜ்


குறிப்பு: பரிசு பெற்ற படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman - Porur, Chennai,இந்தியா
03-ஆக-201420:22:55 IST Report Abuse
Anantharaman நன்றி முருகராஜ் சார். படங்கள் அனைத்தும் அருமை.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
03-ஆக-201401:20:37 IST Report Abuse
மதுரை விருமாண்டி படம் ஒன்றொன்றும் மிகப் பிரமாதம். வாசகர்களுக்கு கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X