அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆனைமலை - நல்லாறு திட்டம் : கேரளாவுடன் தொடர் பேச்சு

Added : ஆக 05, 2014 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : ''ஆனைமலை - நல்லாறு திட்டம் மூலம், அணையை கட்டி, நீர் மின் உற்பத்தி செய்ய, கேரள அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்படுகிறது,'' என, பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சட்டசபையில், நேற்று, கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:அ.தி.மு.க., - முத்துகருப்பண்ணசாமி: ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற அரசு முன் வருமா?துணை சபாநாயகர் ஜெயராமன்: பரம்பிக்குளம் -

சென்னை : ''ஆனைமலை - நல்லாறு திட்டம் மூலம், அணையை கட்டி, நீர் மின் உற்பத்தி செய்ய, கேரள அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்படுகிறது,'' என, பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டசபையில், நேற்று, கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - முத்துகருப்பண்ணசாமி: ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற அரசு முன் வருமா?துணை சபாநாயகர் ஜெயராமன்: பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம், கொங்கு மண்டலத்தின் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மிகவும் இன்றியமையாதது.ஆனைமலை ஆற்றில் அணையை கட்டி, நல்லாறு வழியாக அந்நீரை, திருமூர்த்திமலை அணைக்கு கொண்டு வரலாம். மேலும், நல்லாற்றுப் பகுதியில், 350 மெகாவாட் மின் உற்பத்தியையும் செய்யலாம். இதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தத்தின், துணை ஒப்பந்தமாக, ஆனைமலை ஆற்றில் அணையை கட்டி, தண்ணீரைத் திருப்பி விடும் திட்டம் அரசிடம் உள்ளது. இதற்காக, கேரள அரசிடம் துணை ஒப்பந்தம் செய்துகொள்ள, முயற்சி மேற்கொண்டு வருகிறோம். திருவனந்தபுரத்தில், 2013 ஏப்ரல், 28ம் தேதி, இரு மாநில அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த கூட்டத்தில், இத்திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டது.
ஆனைமலை ஆற்று நீரை, நீராற்றுக்கு திருப்பி விடுவதற்கான தொழில்நுட்ப சாத்திய அறிக்கையை, கேரள அரசு கொடுத்துள்ளது. இது, தமிழக அரசின் ஆய்வில் உள்ளது.அதேநேரத்தில், நல்லாறு திட்டத்தை ஏற்க, கேரள அரசு மறுத்து வருகிறது. எனினும், இத்திட்டத்தை கேரள அரசு ஏற்றுக்கொள்ள, தொடர் பேச்சு வார்த்தையை, தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selvaraj ambalam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஆக-201414:59:13 IST Report Abuse
selvaraj ambalam கேரளா அரசு மறுத்து வருகின்றது.இந்த வாக்கியத்தை எத்தனை காலம் தான் சொல்லிக்கொண்டு இருக்கப்போகின்றீர்கள்.தமிழ் நாட்டிலிருந்து கேரளாவுக்கு எதுவுமே போக வில்லையா?கேரளாவுக்கு போகும்(பொருளோ அல்லது வேறு ஏதாகிலும் சரி)மொத்தத்தையும் நிறுத்துங்கள்.தன்னாலே நம்மிடம் ஓடி வருவார்கள்.இவர்களிடம் பேசிக்கொண்டேல்லாம் இருக்கக்கூடாது.செயலில் காட்ட வேண்டும்.ஆனால்,நமது அரசியல் வாதிகள் செய்ய மறுப்பதற்கு பல காரணங்கள் உள்ளது.இவர்களுக்கு எல்லாம் அங்கு பல தொழில்கள் உள்ளது.அவர்களை,இவர்கள் எதிர்க்க முடியாது.எதிர்த்தால்,இவர்களது தொழில் பாதிக்கப்படும்.இந்த சுயநல அரசியல் வாதிகளால் நமது நலம் பாதிக்கபடுகின்றது.என்று தணியும் இந்த சுய நல கொடுமை. வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.
Rate this:
sundar - riyadh,சவுதி அரேபியா
05-ஆக-201417:04:57 IST Report Abuse
sundarகேரளா என்ன ஆப்கானிஸ்தான்னு நினைச்சுட்டிங்க போலே இருக்கு. தமிழ் நாடு இல்லேன்னா கர்நாடக கிட்டே வாங்குவான். இல்லேனாலும் கடல் வழியா பொருட்களை கொண்டு வருவான். நாம் ஒன்றும் கேரளாவுக்கு இலவச உதவி செய்யவில்லையே, அவன் காசு குடுக்கிறன் நாம் பொருளை விற்கிறோம். தண்ணீர் குறித்த தேவைகளை பேச்சு வார்த்தை மூலமாகதான் தீர்க்க வேண்டும், அதை விடுத்து பொருட்களை நிறுத்தினால் இங்கே உற்பத்தி செய்பவன் நிலை என்ன என்று யோசிக்கவேண்டும். கேரளா நமக்கு சிறந்த ஒரு சந்தையாக இருக்கிறது. தண்ணீரையும் வியாபாரத்தையும் போட்டு குழப்பி இங்கே தொழில் செய்பவர்களின் பிழைப்பில் மண்ணை போடக்கூடாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X