அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வரை விமர்சித்த விவகாரத்தில் விவாதம் தேவையில்லை: சபாநாயகர்

Added : ஆக 05, 2014 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : ''முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து, இலங்கை பாதுகாப்புத் துறை இணைய தளத்தில் வெளியான செய்தி குறித்து, சட்டசபையில் விவாதிக்க வேண்டாம்,'' என, சபாநாயகர் தனபால் கூறினார். சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், 'முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து, இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில், வெளியான செய்தி குறித்து, விவாதிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள்

சென்னை : ''முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து, இலங்கை பாதுகாப்புத் துறை இணைய தளத்தில் வெளியான செய்தி குறித்து, சட்டசபையில் விவாதிக்க வேண்டாம்,'' என, சபாநாயகர் தனபால் கூறினார். சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், 'முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து, இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில், வெளியான செய்தி குறித்து, விவாதிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதற்கு பதில் அளித்து, சபாநாயகர் தனபால் கூறியதாவது: இலங்கை பாதுகாப்புத் துறை இணைய தளத்தில், வெளியான செய்தி குறித்து, அனைத்து எதிர்க்கட்சிகளும், ஓரணியில் நின்று, இலங்கைக்கு, கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. அதுகுறித்து, இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுள்ளது. எனவே, இப்பிரச்னை குறித்து, விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
சொகுசாக இருக்கும் அரசு ஊழியர்கள்: அமைச்சர் ஆதங்கம்
சென்னை : ''ஆறாவது ஊதியக் குழுவின், புதிய ஊதியத்தைப் பெற்ற அரசு ஊழியர்கள் சொகுசாக உள்ளனர்,'' என, வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.சட்டசபையில் நேற்று, கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:இ.கம்யூ., உலகநாதன்: திருத்துறை பூண்டியில், அரசு ஊழியர் குடியிருப்பு கட்டித் தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் வைத்திலிங்கம்: தமிழகம் முழுவதும், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் பல, காலியாக உள்ளன. ஆறாவது ஊதியக் குழுவின், புதிய ஊதியத்தைப் பெற்ற அவர்களுக்கு, வீட்டு வாடகைப்படி கூடுதலாகக் கிடைக்கிறது. இதனால், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அவர்கள் குடியிருப்பதில்லை. வெளியில், சொகுசாக இருக்கின்றனர்.அரசு ஊழியர்கள் வெளியில் குடியேறுவதால், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகள், பல காலியாக உள்ளன. எனவே, புதிய குடியிருப்பு கட்டித் தர வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-ஆக-201416:16:04 IST Report Abuse
Pugazh V மக்களவையின் அதிமுக உறுப்பினர்கள் விவாதம் கூச்சல் அமளி எல்லாம் செய்தார்கள். ஆனால் அதே கட்சியினர் இந்த பிரச்னை பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கக் கூட அனுமதி மறுத்துவிட்டது. ஏன் இந்த இரட்டை வேடமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X