வாஷிங்டன் : 'இபோலா' வைரஸ் கிருமி தாக்குதலை கட்டுப்படுத்த, 1,200 கோடி ரூபாய் ஒதுக்கி, ஐ.நா., உத்தரவிட்டு உள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில், 'இபோலா' எனப்படும் கொடிய வைரஸ் நோய் தாக்குதல் காணப்படுகிறது. ஆயிரம் பேர் உயிரை பலி வாங்கியுள்ள இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல், அந்நாடுகள் தடுமாறி வருகின்றன.கடுமையான காய்ச்சல், வறட்டு இருமல், தசை வலி, தலை வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை கொண்டுள்ள இந்த நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புக்கு உள்ளாகி விடுகிறது.அமெரிக்கா மற்றும் அமெரிக்க கண்டங்களில் சில நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நோயை கட்டுப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபை, 1,200 கோடி ரூபாய் ஒதுக்கி நேற்று உத்தரவிட்டுள்ளது. நோய் தடுப்பு மருந்து தயாரித்தல், கூடுதல் மருத்துவப் பணியாளர்களை அமர்த்திக் கொள்ளுதல் போன்றவற்றிற்காக, இந்தப் பணம் செலவிடப்படும் என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE