போர்டுக்கு முடிஞ்சது நேரம்; புதுசா நடக்குது பேரம்! | Dinamalar

'போர்டு'க்கு முடிஞ்சது நேரம்; புதுசா நடக்குது பேரம்!

Added : ஆக 06, 2014
Share
வெளிச்சம் இன்னும் பரவவில்லை; குளிர் குறையவில்லை; மெதுவாய் தூறிக் கொண்டிருந்தது சாரல்...ரேஸ்கோர்ஸ் நடைபாதையில், வழக்கத்தை விட கூட்டம் குறைவாயிருந்தது. சித்ராவும், மித்ராவும் 'டிராக் சூட்', தொப்பி சகிதமாய் மெதுவாய் நடந்து கொண்டிருந்தார்கள்.''ஹைய்யோ...என்னா ஒரு சூப்பர் க்ளைமேட்...சொர்க்கமே என்றாலும், அது நம்மூரைப் போலாகுமா?,'' சத்தமாய்ப் பாடினாள் மித்ரா.''என்னடி
'போர்டு'க்கு முடிஞ்சது நேரம்; புதுசா நடக்குது பேரம்!

வெளிச்சம் இன்னும் பரவவில்லை; குளிர் குறையவில்லை; மெதுவாய் தூறிக் கொண்டிருந்தது சாரல்...ரேஸ்கோர்ஸ் நடைபாதையில், வழக்கத்தை விட கூட்டம் குறைவாயிருந்தது. சித்ராவும், மித்ராவும் 'டிராக் சூட்', தொப்பி சகிதமாய் மெதுவாய் நடந்து கொண்டிருந்தார்கள்.
''ஹைய்யோ...என்னா ஒரு சூப்பர் க்ளைமேட்...சொர்க்கமே என்றாலும், அது நம்மூரைப் போலாகுமா?,'' சத்தமாய்ப் பாடினாள் மித்ரா.
''என்னடி ஒரே குஷியா இருக்க...பாட்டெல்லாம் பலமா இருக்கு!,'' என்றாள் சித்ரா.
''மதுரையில, மே மாசத்தை விட மோசமா அடிக்குதாம் வெயிலு; ஒரு வேலையா, அங்க போன என் பிரண்ட், போன்ல புலம்புனான்...இங்க வெயிலைப் பாத்தே மாசமாச்சு; மழை பேஞ்சுட்டே இருக்கு; பில்லூர், சிறுவாணி டேம், குளங்களெல்லாம் நிரம்பிடுச்சு...அப்புறம்பாட்டு வராதா?,''
''உண்மைதான்டி...தமிழ்நாட்லயே, கோவையிலயும், தேனியிலயும்தான் அதிகமா 'சவுத் வெஸ்ட் மான்சூன்' பேஞ்சிருக்காம். பல வருஷத்துக்கு அப்புறமா, இப்பதான் கோயம்புத்தூர் க்ளைமேட் 'செட்' ஆயிருக்கு,''
இருவரும் நடந்து கொண்டிருந்தபோது, 'கேரி பேக்'குகளில் பப்பாளி, கீரை வாங்கிக் கொண்டு, பலரும் நடப்பதைப் பார்த்த மித்ரா, 'இந்த கேரிபேக் கலாச்சாரத்தை எப்பதான் ஒழிக்கப் போறாங்களோ? மழை பேஞ்சும், பல குளங்களுக்கு தண்ணி வராததுக்கு, இந்த பாலித்தீன் பைகள்தான் காரணம்கிறாங்க பி.டபிள்யு.டி., இன்ஜினியருங்க,'' என்றாள் மித்ரா.
''ஆமாடி! குறிச்சி குளத்துக்கு தண்ணி வராம, பிளாஸ்டிக் குப்பைக அடைச்சுக் கிடந்ததாம்; நம்மூரு மினிஸ்டர்தான், இன்ஜினியர்களைக் கூப்பிட்டு, அதெல்லாம் உடனே 'க்ளீன்' பண்ணி, தண்ணி விடச்சொன்னாராம்!,''
''ரேஸ்கோர்ஸ்ல கார்டன் எல்லாம் கண்றாவியாக் கெடக்குது; ஒரு 'லைட்'டும் எரியுறதில்லை; கேட்டா, 'ஸ்பான்சர்' யாருமில்லைங்கிறாங்க; விளம்பர போர்டு வச்சு, கோடி கோடியா சம்பாதிச்சாங்க; இப்போ, கம்பெனிங்களுக்கு நேரடியா கொடுத்தாலே, நல்லா மெயின்டெயின் பண்ணிட்டுப் போறாங்க; இதுல எதுக்கு இடையில விளம்பரத்துக்காரங்களை விடணும்?,''
''அதுலதான, காசு விளையாடுது; செம்மொழி மாநாடு நடந்தப்போ, இந்த 'ஷைன் போர்டு'களை வைக்கிறதுக்கு 6 வருஷ 'அக்ரிமென்ட்' போட்டு, மூணு வருஷத்துக்கு மட்டும் 'கவுன்சில்'ல 'அப்ரூவல்' வாங்குனாங்க; அது முடிஞ்சதும், பழைய கலெக்டர், எல்லாத்தையும் எடுக்கச் சொன்னாரு; இப்போ, 'அக்ரிமென்ட்'டை காரணமா வச்சு, மறுபடியும் 'போர்டு' வைக்க முயற்சி நடக்குதாம்; பெரிய அளவுல பேரம் போகுதாம்; பின்னணியில, ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி இருக்கிறதா ஒரு தகவல்,'' என்றாள் சித்ரா.
''பழையபடி, கட்டடங்கள்ல 'கலெக்ஷன்' களை கட்டுதாமே; அவிநாசி ரோட்டுல, தியேட்டரை கல்யாண மண்டபமா மாத்துனதுலயும், ஏர்போர்ட் ரோடு கார்னர்ல ஒரு பெரிய பேக்கரி கட்டடத்துலயும் ஏகப்பட்ட 'வயலேஷன்' இருக்காம்; கார்ப்பரேஷன்ல 'பொறுப்பு'ல இருக்கிறவுங்க, பெரிய அமவுன்ட்டை வாங்கிட்டு, அதிகாரிகளை மெரட்டி, அப்ரூவல் கொடுத்துட்டாங்கன்னு ஒரு பேச்சு...!,'' என்றாள் மித்ரா.
''உளவுத்துறை போலீஸ், லேட்டஸ்ட்டா ஒரு 'டீட்டெயில்' கலெக்ட் பண்ணிருக்காங்க தெரியுமா''
''பெட்டிஷன்ல வர்ற தகவலெல்லாம் உண்மையான்னு விசாரிக்கிறாங்களா?''
''அதில்லடி! கவுன்சிலர்கள் சிலரோட படிப்பு, ஜாதி, பேக்ரவுண்ட், கட்சியில எப்ப சேர்ந்தாங்கன்னு விசாரிச்சிருக்காங்க. அதுலயும், மெஜாரிட்டி கம்யூனிட்டி இல்லாத, வேற கம்யூனிட்டி கவுன்சிலர்கள்ட்ட மட்டும்தான், இந்த 'டீட்டெயில்ஸ்' கலெக்ட் பண்ணிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
''யாரோ ஒருத்தரை மேயராப் போட்டாத்தான், வேலையெல்லாம் நடக்கும்னு கவுன்சிலர்க புலம்புறாங்க. முன்னாடியாவது, மேல ஒருத்தருக்குப் பயந்தாங்க. இப்போ, அதிகாரிங்க யாருமே, எந்தகவுன்சிலரையும் மதிக்கிறதில்லைன்னு ஒரே 'புலம்பல்ஸ்'சா இருக்கு,''என்றாள் மித்ரா.
''ஒரு வழியா, எந்தப் பிரச்னையும் இல்லாம, கணேஷ்வரன் 'ரிட்டயர்டு' ஆயிட்டாரு; கடைசி நாளுக்கு முத நாள்தான், அவருக்கு 'சி.இ.' புரமோஷன் கொடுத்திருக்காங்க. இப்போ கார்ப்பரேஷனுக்கு கு.உ., இ.உ., ரெண்டு போஸ்ட்டிங்குமே 'வேகன்ட்'டாதான் இருக்கு; இருக்கிறதுல சீனியர்ன்னு உ.உ.,சுகுமாருக்கு சி.இ., இன்சார்ஜ் கொடுத்துட்டாங்க,'' என்றாள் சித்ரா.
''வேலையே நடக்காத ஊர்ல, எதுக்கு இ.உ., கு.உ.,ன்னு ரெண்டு பேருக்கு வேலை கொடுக்கணும்னு விட்டுட்டாங்களோ?,'' என்று சிரித்தாள் மித்ரா.
''வழக்கமா, ஆளும்கட்சி நிர்வாகிகளைப் பத்திதான் சி.எம். மேடத்துக்கு பெட்டிஷன் பறக்கும்; ஆனா, நம்ம கார்ப்பரேஷன்ல, ஆபீசருங்களைப் பத்தி, ரெண்டெழுத்து கான்ட்ராக்ட் கம்பெனியோட லெட்டர் பேடுல, சி.எம்.,செல்லுக்கு படு டீட்டெய்லா ஒரு பெட்டிஷன் போயிருக்கு; அதுல, கமிஷனர் மேடத்தைத் தவிர, மத்த ஆபீசர்களைப் பத்தி, தாறுமாறா கம்பிளைன்ட் எழுதிருக்காம்,''
''அய்யய்யோ...அப்புறம் என்னாச்சு?,''
''இதுவரைக்கும் ஒண்ணும் ஆகலை; இனிமே, என்ன ஆகும்னு தெரியலை; ஆனா, அந்த கான்ட்ராக்ட் கம்பெனிக்காரங்க, 'நாங்க இந்த பெட்டிஷனையேபோடலை'ன்னு ஒவ்வொரு ஆபீசர்ட்டயும் போயி, விளக்கம் கொடுத்துட்டு இருக்காங்க. யாரோ ஒருத்தரு, எங்களோட 'லெட்டர் பேடு' மாதிரி ரெடிபண்ணி அனுப்பிருக்காங்கன்னு சொல்றாங்களாம்!'' என்றாள் சித்ரா.
''உக்கடம் பக்கத்துல, ஒருஇடத்துல பதுக்கி வச்சிருந்த பான் மசாலா பாக்கெட்களை, ஃபுட் கன்ட்ரோல் டிபார்ட்மென்ட் ஆபீசர் ஒருத்தர், பறிமுதல் பண்ணிருக்காரு. அவுங்ககிட்டயே, 3 லட்ச ரூபாயையும் பறிச்சிட்டு, சரக்கையும் எடுத்துட்டுப் போயிட்டாராம். ஆனா, அந்த சரக்கு ஆபீசுக்கும் போகலை; கேசுக்கும் கூப்பிடலை. இடையில எங்க போச்சுன்னும் தெரியலை'' என்று மேட்டரை மாற்றினாள் மித்ரா.
பேசும்போதே, இடையில் போன் வர...''யாரு...?,'' என்று ஒரு நிமிடம் குழம்பியவள், ''டேய்... 'சுருளி' வாய்ஸ்ல பேசுனா கண்டு பிடிக்க முடியாதுன்னு நினைச்சியா? சொல்லுடா கோபி!,'' என்றாள்.
அப்போது, 'ஹைவே பேட்ரோல்' வேனில் வந்த போலீஸ், 'மைக்'கில், 'தயவு செய்து, ரோட்டோரத்தில் யாரும் நடக்கவோ, ஓடவோ வேண்டாம்; ஓரமாகச் செல்லவும்' என்று அறிவித்துக் கொண்டிருந்தனர்.
''ரொம்ப நல்ல வேலையெல்லாம் போலீஸ் பண்ணுதே!,'' என்று மெச்சினாள் சித்ரா.
''இவுங்க இப்பிடிப் பண்றாங்க; இதே 'மைக்'கை வச்சு, மாசத்துக்கு பல லட்ச ரூபா, மாமூல் பாக்குறாராம் ஒரு ஆபீசர்!,'' என்று நிறுத்தினாள் மித்ரா.
''யாருடி அந்த காக்கிச்சட்டை கனவான்?,'' என்றாள் சித்ரா.
''நான் விஷயத்தைச் சொல்றேன்; ஆளை நீயே கண்டுபிடி. சிட்டியில ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, பெரிய கடை வீதி, கிராஸ்கட் ரோடு, டி.பி.,ரோடுன்னு பல இடங்கள்ல, மக்களையும், போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்துறதுக்கு, 'மைக்' வச்சு பேசுவாங்கள்ல. அதுக்காக வச்சிருக்கிற போஸ்ட்கள்ல, விளம்பரம் வைக்கிறதுக்கு மட்டும், அதுக்குப் பொறுப்பான பெரிய ஆபீசருக்கு, பல லட்ச ரூபாமாமூல் போகுதாம்,''
''இருக்கலாம்...இதுக்கெல்லாம், ரோடு சேப்டி கவுன்சில்ல பர்மிஷன் வாங்கணும்; எதுவுமே வாங்குறதாத் தெரியலை; ஒரு பஸ் ஷெல்டருக்கு அனுமதி வாங்கிட்டு, ரெண்டு மூணு ஷெல்டர் போடுறது, பஸ் ஸ்டாப்ன்னு ஒரு போர்டை வச்சு, அதுக்குக் கீழ விளம்பரம் வச்சுக்கிறது...இது எல்லாமே மாமூல் விவகாரம்தான். ஏன்...பஸ் ஷெல்டர் இருக்கிற இடம்தான், பஸ் ஸ்டாப்ன்னு மக்களுக்குத் தெரியாதா? அதுக்கு ஒரு போர்டு வைக்கணுமா?,''
''டிராபிக்கை விடு...சிட்டிக்குள்ள கிரைம் பார்க்கிற கருப்பான ஒரு சாமியைப் பத்தி, பல முறை பேசிருக்கோமே. அவரு, இன்னும் அதே பாணியிலதான், எல்லாரையும் மெரட்டிட்டுத் திரியுறாராம். என்னைய எவனும், இங்கயிருந்து அசைக்க முடியாதுன்னு தெனாவட்டா சொல்றாராம். அவருக்குயாரு சப்போர்ட்டுன்னு தெரியலை,'' என்றாள் மித்ரா.
''சாமின்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது; கோவில்களைப் பாக்குற துறைக்கு பெரிய ஆபீசரா வந்திருக்கிறவரு, 'மெட்ராஸ்' பாஷையில, எல்லாரையும் ஏக வசனத்துல திட்றாராம்,'' என்று சித்ரா சொல்லும்போதே, நடை வேகத்தைக் குறைத்த மித்ரா, 'அக்கா! ரெண்டு பப்பாளி வாங்கிட்டுப் போவோம்' என்று கூறி விட்டு, 'டிராக் சூட்'டில் கை விட்டு, எதையோ எடுத்துக் காண்பிக்க... அவள் கையில் இருந்தது, அழகான துணிப்பை.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X