பணம் பறிக்கும் அரசு டாக்டர்; கர்ப்பிணிகள் கண்ணீர்!

Added : ஆக 06, 2014
Share
Advertisement
"மனுஷங்க உயிரை காப்பாத்துற மருத்துவ துறையில, இரக்கம், கருணை எல்லாம் செத்துப் போச்சு டீ, ஒடம்புக்கு முடியாம வர்றவங்ககிட்ட கூட காசு பறிக்கறதுல சில டாக்டருங்க குறியா இருக்காங்க,'' என எரிச்சலாய் பேசிய மித்ராவை, ஆச்சரியமாக பார்த்த சித்ரா, "என்னடி, இன்னைக்கு ரொம்ப சூடா இருக்கே, யார் மேல இத்தன கோபம்?'' என்றாள்."திருப்பூர் அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் பக்கத்துல,
பணம் பறிக்கும் அரசு டாக்டர்; கர்ப்பிணிகள் கண்ணீர்!

"மனுஷங்க உயிரை காப்பாத்துற மருத்துவ துறையில, இரக்கம், கருணை எல்லாம் செத்துப் போச்சு டீ, ஒடம்புக்கு முடியாம வர்றவங்ககிட்ட கூட காசு பறிக்கறதுல சில டாக்டருங்க குறியா இருக்காங்க,'' என எரிச்சலாய் பேசிய மித்ராவை, ஆச்சரியமாக பார்த்த சித்ரா, "என்னடி, இன்னைக்கு ரொம்ப சூடா இருக்கே, யார் மேல இத்தன கோபம்?'' என்றாள்.
"திருப்பூர் அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் பக்கத்துல, மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை இருக்கு. அங்க இருக்கற ஒரு டாக்டரு, பிரசவத்துக்கு வர்ற கர்ப்பிணி பொண்ணுங்களை, தன்னோட "கிளினிக்'குக்கு வந்தாதான் "ட்ரீட்மென்ட்' தருவேன்னு, "ஸ்ட்ரிக்' டா சொல்றாரு. பக்கத்துல இருக்கற ஒரு "லேப்'ல ஸ்கேன், எக்ஸ்ரே டெஸ்ட் எடுக்கணுமாம்; வேறஎங்காவது எடுத்துட்டு போனா, "ரிசல்ட் சரியா தெரியலை, நா சொன்ன லேப்புல ஏன் டெஸ்ட் எடுக்கலே?,'ன்னு திட்டுறாராம். தனியார் "கிளினிக்'ல "ட்ரீட்மென்ட்' எடுக்க வசதியில்லாம தானே, மாநகராட்சி மருத்துவமனைக்கு வர்றோம். கூலி வேலை செய்ற எங்களால, அஞ்சாயிரம், பத்தாயிரம் ரூபா செலவழிக்க முடியுமான்னு, கர்ப்பிணி பொண்ணுங்க புலம்புறாங்க,'' என்று ஆவேசமாக முடித்தாள் மித்ரா.
இஞ்சி டீயும், நெய் முந்திரி பக்கோடாவும் கொடுத்து உபசரித்தாள் சித்ரா.
முந்திரி பக்கோடாவை "ருசி'த்தபடி, "வந்திருக்கிற புது எஜூகேசன் ஆபீசரு, வித்யாசமானவர்ன்னு சொல்றாங்க. அவரைப்பத்தி கேள்விப்பட்டதுல இருந்து, பல பேரு கலங்கி போயிருக்காங்க,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
"டிவி'யை "ஆன்' செய்த சித்ரா, மித்ரா பக்கம் திரும்பி, "அப்படியா?' என ஆச்சரியமாக வினவினாள்.
"ஆமாக்கா, "ஆனந்த'மான பெண் ஆபீசர் இருந்தவரைக்கும், எஜூகேசன் டிபார்ட்மெண்டுல பெருசா எந்த பிரச்னையும் வரலை. புதுசா வந்திருக்கிற ஆபீசர் எப்படீன்னு தெரிஞ்சுக்க, ரொம்ப பேருக்கு ஆர்வம். இவர் மூணு வருஷத்துக்கு முன்னாடி, கோயம்புத்தூருல கல்வி அதிகாரியா இருந்துருக்காரு. அதனால, அங்க இருக்கிற தங்களோட நட்பு வட்டாரத்துல விசாரிச்ச சில பேருக்கு, தலை "கிறுகிறு'ன்னு சுத்திருச்சாம்,'' என்று நிறுத்தினாள் மித்ரா.
"ரொம்ப "சஸ்பென்ஸ்' வைக்காம சீக்கிரமா சொல்லுடி; விளம்பரம் முடியப்போது, சீரியல் வந்துடும்,'' என்று பரபரத்தாள் சித்ரா.
"அவசரப்படாம கேளுங்க, கோயம்புத்தூருல இவரு இருந்தப்போ, "எக்ஸாம் பேப்பர்' திருத்துறது சம்பந்தமா ஒரு மீட்டிங் போட்டிருக்காரு. அப்போ, "பேப்பர் திருத்த விருப்பம் இருக்கறவங்க எல்லாம் கை தூக்குங்க,'ன்னு சொன்னாராம். கொஞ்சம் பேரு கை தூக்கியிருக்காங்க; கொஞ்சம் பேரு கை தூக்கலை. கை தூக்குனவங்க வீட்டுக்கு போங்க; கை தூக்காதவங்க பேப்பர் திருத்தப் போங்கன்னு சொல்லிட்டாராம். மீட்டிங்குக்கு வந்தவங்க ஆடிப்போயிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
"இவரு வித்யாசமான ஆபீசர் மட்டுமில்ல; "வில்லங்க'மான ஆபீசராவும் இருப்பார் போலிருக்கே,'' என்று சிரித்தபடி சேனலை மாற்றினாள் சித்ரா.
"டிவி' செய்திகளில், சாலை விபத்தில் இருவர் இறந்ததாக தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
அதைக்கேட்ட மித்ரா, ""நம்மூர்ல, ரோடும் மோசமா இருக்கு; டிராபிக்கும் படுமோசமா இருக்கு. அதே நேரத்துல, "சிக்னல் ஜம்பிங்'ன்னு கேஸ் போடுறாங்க,'' என புலம்பினாள்.
"ஏன்... ஸ்கூட்டர்ல வரும்போது, மாட்டிக்கிட்டீயா,'' என சித்ரா கிண்டலடிக்க, "தாராபுரம் ரோடு சிக்னல் ஒழுங்கா வேலை செய்யாம இருந்துச்சு. ஒருத்தரு பைக்ல நேரா போனாரு. ஓரமா ஒதுங்கியிருந்த டிராபிக் போலீஸ் அவரை தடுத்து நிறுத்தி, அதை கொண்டா, இதை கொண்டான்னு பேஜார் பண்ணியிருக்காங்க. கடைசியில, வண்டியை பறிமுதல் செஞ்சு வெச்சுக்கிட்டு, 1,500 ரூபாய் கொடுத்தா கொடுப்போம்னு சொல்லியிருக்காங்க. வண்டியில
வந்தவர், கமிஷனர்கிட்ட புகார் செய்யலாம்னு போனார். அங்கிருந்தவங்க, கமிஷனர் பிஸியா இருக்கார். நாளைக்கு எழுத்துப்பூர்வமா புகார் கொண்டு வாங்கன்னு திருப்பி அனுப்பிட்டாங்க. நொந்துபோன அவர், பேரம் பேசி, 1,200 ரூபாய் கொடுத்து, வண்டியை வாங்கிட்டு போயிருக்கார்,'' என்றாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X