பொது செய்தி

தமிழ்நாடு

மரபணு மாற்று பயிர் வயல்வெளி ஆய்வுக்கு தடை : பிரதமரை வலியுறுத்த முதல்வருக்கு கோரிக்கை

Added : ஆக 07, 2014
Advertisement

சென்னை : 'மரபணு மாற்று பயிர்களுக்கு, வயல்வெளி ஆய்வு நடத்த வழங்கிய அனுமதியை, ரத்து செய்ய வலியுறுத்தி, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுத வேண்டும்' என, விவசாய சங்கங்களும், சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆலோசனை : தமிழ்நாடு இயற்கை விவசாயி கள் கூட்டமைப்பு, தாளாண்மை உழவர் அமைப்பு, ஐக்கிய விவசாயி கள் சங்கம், இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு, தமிழக விவசாயிகள் சங்கம், உழவர் உழைப்பாளர் கட்சி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள், சென்னையில் நேற்று, ஆலோசனை நடத்தினர்.பின், அவர்கள் கூறியதாவது: இந்தியாவில், மரபணு மாற்று பயிர்களுக்கு வயல்வெளி ஆய்வு நடத்த, மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்தியாவில், உணவு தானிய உற்பத்தி போதுமான அளவிற்கு உள்ளது. மத்திய, மாநில அரசுகளிடம், பல லட்சம் டன் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளன. இவற்றில், 20 சதவீதம் அளவிற்கு, ஆண்டுதோறும் வீணாகி வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது, உணவு உற்பத்திக்காக, மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதி வழங்கு வதாகக் கூறுகின்றனர். ஒருவேளை, உணவு தானிய பற்றாக்குறை ஏற்பட்டால் கூட, மரபணு மாற்று பயிர்களை அனுமதிக்கக் கூடாது.

ரத்து செய்ய வேண்டும் : தமிழகத்தைப் பொறுத்தவரை, மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதி இல்லை என்பதில், அரசு திட்டவட்டமாக உள்ளது. ஆனால், அண்டை மாநிலங்களில், இதை அனுமதித்தால், மகரந்த சேர்க்கை, பூச்சிகள், பறவைகளின் எச்சங்கள் மூலம், அவை தமிழக பயிர்களுக்கும் பரவிவிடும். எனவே, மரபணு மாற்று பயிர்களுக்கு வயல்வெளி ஆய்வு நடத்த வழங்கிய அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக, பிரதமர் மோடியை, கடிதம் மூலம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X