பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியருக்கு மீண்டும் வாய்ப்பு

Added : ஆக 07, 2014
Advertisement

நாமக்கல்: "நேர்காணலுக்கு செல்லாத ஓய்வூதியருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக, வரும், 20ம் தேதி வரை, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்' என, மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலம், ஓய்வூதியர் அலுவலகம் ஆகியவற்றில், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு, கடந்த, ஏப்ரல் முதல், ஜூலை வரை புதுப்பித்தலுக்கான நேர்காணல் நடந்தது. இருப்பினும், வரும், 20ம் தேதி வரை, மீண்டும் நேர்காணலுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ஓய்வூதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேராதவர்கள், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று, விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாத ஓய்வூதியரின் ஓய்வூதியம், ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படாது. நேர்காணலுக்கு வர முடியாதவர்கள், உரிய மருத்துவ அலுவலர் அல்லது அரசிதழில் சான்றிதழ் பெற்ற அலுவலர் மூலமாக, வாழ்வுரிமை சான்று பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X