நம்பென்: கம்போடியாவில் இனப்படுகொலை நடத்திய மூத்த கெமர்ரூச் ஆட்சியாளர்கள் இருவருக்கு ஆயுள் வரை சிறை தண்டனை விதித்து ஐ.நா. சர்வதேச விசாரணை தீர்ப்பாயம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
1975-களில் தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் கெமர்ரூச் கொடுங்கோலன் பூல்பாட் தலைமையில், இயங்சரே,நௌவான்சியா, கெஹியூ சம்பான் ஆகிய கொடுங்கோலர்கள் 1975- 79-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர். அப்போது 17லட்சம் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். வியட்நாமில் இருந்து கம்போடியாவிற்கு பிழைப்பும், இருப்பிடமும் தேடி வந்த அவர்கள். கெமர்ரூச் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடினர். அப்பாவி மக்களான இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அவர்களை பட்டினிபோட்டும், கடும் சித்ரவதை செய்தும் கெமர்ரூச் ஆட்சியாளர்கள் கொன்று குவித்தனர்
மோசமான இனப்படுகொலை
20-ம் நூற்றாண்டில் நடந்த பெரிய இனப்படுகொலை செய்த இவர்கள் மீது ஐ.நா.முயற்சியால் கம்போடியா சர்வதேச தீர்ப்பாயத்தில் போர்க்குற்ற விசாரணை நடந்து வருகிறது. இவர்களில் பூல்பாட், இயங்சரே ஆகியோர் இறந்துவிட்டனர். எஞ்சியுள்ள நௌவான்சியா, கெஹியூ சம்பான் ஆகியோர் மீது விசாரணை நடந்து வருகிறது. நேற்று இறுதி கட்ட விசாரணை முடிந்ததையடுத்து பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.கம்போடிய மக்கள் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்தனர்.
ஆயுள் சிறை
நீதிபதி நீல்நௌன் தீர்ப்பை வாசித்தார். அதில் போர்க்குற்றவாளிகள் நௌவான்சியா (88), கெஹியூசம்பான் (83) ஆகியோர் மிகப்பெரிய ஒரு இனப்படுகொலை நடத்தி மனிதாபிமானமின்றி அடியோடு ஒழித்துக்கட்டியுள்ளனர். எனவே அவர்கள் குற்றவாளிகள் எனவும் ஆயுள் (சாகும்) வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் தீர்ப்பளித்தார்.
தீர்ப்பையடுத்து இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கோர்ட் வளாகத்தில் தீர்ப்பை கேட்க வந்திருந்தனர். கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் நேற்று நடந்த விசாரணை நாடு முழுவதும் டி.வி.க்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE