உலுக்கியெடுக்கும் ஆரம்பம்.| Dinamalar

உலுக்கியெடுக்கும் ஆரம்பம்.

Updated : செப் 12, 2014 | Added : ஆக 09, 2014 | கருத்துகள் (12)
Advertisement
உலுக்கியெடுக்கும் ஆரம்பம்.

காஷ்மீர் இன்று சந்திக்கும் அத்தனை பிரச்னைகளுக்குமான ஆரம்பப் புள்ளி அக்டோபர் 27, 1947. காஷ்மீருக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்கூட அது ஓர் உலுக்கியெடுக்கும் ஆரம்பம்.
அழகு கொஞ்சும் காஷ்மீர் முதல்முறையாகக் கொள்ளையை, குருதியை, படுகொலைகளை, பாலியல் பலாத்காரத்தை ஒருங்கே கண்ட தினம் அது. பாரமுல்லாவில் உள்ள செயிண்ட் ஜோசப் மடாலயத்தையும் மருத்துவமனையையும் பாகிஸ்தான் ஆதரவுடன் பதான் பழங்குடிகள் சூறையாடிய தினம். காஷ்மீர், இந்தியாவுடன் இணைந்ததை மவுண்ட்பேட்டன் அங்கீகரித்த தினம். இந்தியா, காஷ்மீருக்குத் தன் படைகளை அனுப்பி வைத்த தினம்.
சரித்திரத்தைத் திருப்பிப்போட்ட அந்த ஒற்றை தினத்தை அதிர்ச்சியூட்டும் தகவல்களோடும் திகைக்கவைக்கும் தரவுகளோடும் நேரடிச் சாட்சியங்களோடும் நமக்கு அறிமுகம் செய்கிறார் ஆண்ட்ரூ வைட்ஹைட்.
A Mission in Kashmir புத்தகத்தின் அதிகாரபூர்வமான தமிழ் மொழிபெயர்ப்பு இது. காஷ்மீர் பிரச்னையின் ஆணி வேரை, கள ஆய்வின் மூலமும் வாய்மொழி வரலாற்றின் மூலமும் சுவாரஸ்யமான முறையில் விவரிக்கும் முக்கியமான நூலும் கூட.
====
காஷ்மீர் : முதல் யுத்தம்

ஆண்ட்ரூ வைட்ஹெட்
தமிழில் : B.R. மகாதேவன்

கிழக்கு பதிப்பகம்
இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/kashmir.html
தொலைபேசி வழியாக இந்தப் புத்தகத்தை வாங்க : 094459 01234 / 09445979797வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yuvaraj - Hosur,இந்தியா
13-நவ-201408:21:22 IST Report Abuse
yuvaraj காஷ்மீர் பிரச்சனைக்கான தீர்வை கண்டிப்பாக நமது மோடிஜி அவர்கள் நிறைவேற்றுவர்
Rate this:
Share this comment
Cancel
Purushothaman Vasudevan - Villupuram,இந்தியா
31-ஆக-201407:37:29 IST Report Abuse
Purushothaman Vasudevan அன்புடைய சகோதரர்களே , காச்மீர் மட்டுமில்லை, ஈழம், நேபாளம் வென்று எல்லா பிரச்சினைகளுக்கும் neruvum, அவரின் குடும்ப உறுப்பினர்களே காரணம். கடந்த களங்களில் தொடர்ந்து காக்ராஸ் ஆட்சி செய்தும் ஆட்சி செய்ததுபோல இல்லாமல், பிரபுக்கள் ஆட்சி செய்வதுபோல கூத்தடித்து. இந்த நாட்டில் கலவரத்தை வேறுன்ற செய்தவர்கள், நாட்டை சுரண்டி இடளியிலும், ச்விச்ஸ் வங்கியிலும் செல்வங்களை பதுக்கிய நாட்டு துரோகிகள். 3 மாத ஆட்சியில், மொடிஜி தலைமையில் தினம் தினம் தீபவளிபோலே தினந்தோறும் சரவெடிகள் போல நீண்டகால முன்னேற்ற திட்டங்கள் வெடித்துகொன்டே இருக்கின்றன. காங்க்றேச்ஸ் இந்த நாட்டிலிருந்தே விரட்டியடிக்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Jayanthan - Bangalore,இந்தியா
19-ஆக-201400:53:27 IST Report Abuse
Jayanthan பிரிட்டிஷார் செல்லும்போது ஆட்சி செய்த எல்லா இடங்களிலும் இது போன்று ஏதாவது செய்துவிட்டுதான் சென்றனர். காஷ்மீர் பிரச்னை, ஈழபிரச்சனை எல்லாவற்றுக்கும் அவர்கள் தான் காரணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X