நான் துர்கா பேசுகிறேன்...

Added : ஆக 09, 2014 | கருத்துகள் (73)
Share
Advertisement
சமீப காலமாக சமஸ்கிருத மொழியின் மீது தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு காட்டப்படுகிறது.இந்த எதிர்ப்புக்கு அவசியம் இல்லை என்பதே எனது கருத்து நான் யார் என்பதையும் எனக்கும் சமஸ்கிருத மொழிக்குமான உறவு குறித்து முதலில் சொல்லிவிடுகிறேன்.என் பெயர் துர்காசென்னையில் கீரின்வேஸ் சாலையில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசை வீடுகளில் எங்கள் வீடும் ஒன்றாக இருந்தது.என் தாயார் ருக்மணி
நான் துர்கா பேசுகிறேன்...

சமீப காலமாக சமஸ்கிருத மொழியின் மீது தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு காட்டப்படுகிறது.
இந்த எதிர்ப்புக்கு அவசியம் இல்லை என்பதே எனது கருத்து நான் யார் என்பதையும் எனக்கும் சமஸ்கிருத மொழிக்குமான உறவு குறித்து முதலில் சொல்லிவிடுகிறேன்.
என் பெயர் துர்கா
சென்னையில் கீரின்வேஸ் சாலையில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசை வீடுகளில் எங்கள் வீடும் ஒன்றாக இருந்தது.
என் தாயார் ருக்மணி வீட்டு வேலை செய்துதான் எங்களை படிக்கவைத்தார்.என் சிறு வயதில் ஏற்பட்ட போலியோ தாக்குதல் காரணமாக ஒரு கால் ஊனமாகிவிட்டது,விந்தி விந்திதான் நடப்பேன்.
எனக்கு மூன்று வயதிருக்கும் போது என் சகோதரிதான் சுந்தரம் சாய்பாபா கோவிலுக்கு அழைத்து வந்து அங்கிருந்த சாய்பாபா படத்தை காண்பித்து இவர்தான் இனி உனக்கு கடவுள் இனி இவர் உன்னை பார்த்துக்கொள்வார் என்று சொன்னார் அது முதல் அவர்தான் என் உலகம்.
பிளஸ் டூ முடித்ததம் மேற்கொண்டு படிக்க நான் விரும்பிய போதும் போதுமான பணம் இல்லாததால் என் தாயார் என்னை ஒரு கடையில் சேர்த்துவிட்டார். அந்த கடையில் தொடர்ந்து 12 மணிநேரம் நிற்கவேண்டியிருந்தது,ஊனமான காலோடு நிற்கமுடியாததால் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் என்னால முடியலம்மா என்று சொல்லியழுதேன்.
என் கண்ணீரை துடைத்த என் அம்மா இனி நீ வேலைக்கு போகவேண்டாம் கல்லூரிக்கு போய் படி எதுவானாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார் சரி என்று நான் கல்லூரிகளுக்கு போன போது எல்லாபிரிவுகளின் சேர்க்கையுமே முடிந்து போயிருந்தது.
சென்னை ராணிமேரிகல்லூரியில் பிஏ சமஸ்கிருதம் வகுப்பில் மட்டும் இடம் இருக்கிறது என்றனர் அதுவரை நான் சமஸ்கிருதம் என்ற வார்த்தையை கேள்விப்பட்டது இல்லை இந்த நிலையில் முழுநேர படிப்பாக சமஸ்கிருதம் எடுத்து படிக்கமுடியுமா? படித்தாலும் வேலை வாய்ப்பு கிடைக்குமா? என்றெல்லாம் குழப்பமாக இருந்தது.
சுந்தரம் வந்தேன் என் குழப்பத்தை சொல்லி சீட்டு எழுதி சுவாமி முன் போட்டேன் ஒரு முறைக்கு மூன்று முறை சமஸ்கிருதம் எடுத்து படிக்கும்படியே சீட்டு வந்தது அதற்கேற்ப சுந்தரம் பெரியவர்களும் எனக்கு உதவ கல்லூரியில் சமஸ்கிருத வகுப்பில் சேர்ந்தேன்.
தமிழ் மட்டுமே எழுத படிக்க தெரிந்த எனக்கு சமஸ்கிருதம் படிக்க படிக்க சந்தோஷமாகவும் விருப்பமாகவும் இருந்தது.அதன் சிறப்புகளும் புரிந்தது.பலரும் நினைப்பது போல அது சிரமமான மொழியும் இல்லை என்பது தெரிந்தது.
மூன்று வருட படிப்பை முடித்த போது அவுட் ஸ்டேண்டிங் மாணவியாக தங்க மெடல் பெற்றேன் பின் பிரசிடெண்ட் கல்லூரியில் சமஸ்கிருதம் முதுகலை முடித்து சிறப்பு மாணவியாக தேர்வானேன் தொடர்ந்து சமஸ்கிருதத்தில் எம்பில் செய்தேன்.எம்பில் முடித்த கையோடு கன்னிகா பரமேஸ்வரி கல்லூரியில் சமஸ்கிருத பேராசிரியை வேலை கிடைக்க இப்போது நான் கல்லாரி பேராசிரியை.
இப்படி எனக்கு எல்லாமும் சமஸ்கிருதமாகிப்போனது என் வாழ்க்கையே சமஸ்கிருதத்திற்கு மாறிப்போனது.இதன் உச்சமாக சமஸ்கிருத பண்டிதர்கள் பலர் இருக்கும் புட்டபர்த்தியில் சுவாமி முன் சமஸ்கிருதத்தில் பேசுவதற்குமான வாய்ப்பும் கிடைக்கப்பெற்றது.
இப்போது நான் வேலை பார்க்கும் கல்லூரியில் என் வகுப்பில் பயிலும் மாணவ,மாணவியர் மற்ற படிப்புகளில் எப்படியோ ஆனால் சமஸ்கிருதத்தில் எப்போதுமே அதிக மார்க்குகள் எடுத்துவிடுவார்கள்.
அவ்வளவு ஏன் தமிழ் மட்டுமே தெரிந்த ஒரு பத்து பேரை என்னிடம் கொடுங்கள் அவர்களை பத்து நாளில் சமஸ்கிருதம் சொல்லிக்கொடுத்து பேசவைக்கிறேன் இது என் மேல் உள்ள நம்பிக்கை இல்லை சமஸ்கிருத மொழியின் மீதுள்ள நம்பிக்கை,ஆகவே பல்வேறு இதிகாசங்களின் மூல மொழியும் தெய்வீக மொழியுமான சமஸ்கிருதத்தை கூடுதலான ஒரு மொழியாக விருப்பமுள்ளவர்கள் கற்றுக்கொள்ள வழிகாண்பதே விவேகமானதாக இருக்கும்.
துர்காவிடம் சமஸ்கிருதம் தொடர்பாக பேசவிரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9551451622.(கல்லூரியில் வேலையில் இருக்கும் போதும், சுந்தரத்தில் பூஜையில் இருக்கும் போதும் போனை எடுக்கமாட்டார் என்பதை நினைவில் கொள்ளவும்)
- எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jothi - Pondicherry,இந்தியா
05-செப்-201400:36:33 IST Report Abuse
jothi மொழிக்கு இப்படியா அக்கபோரு
Rate this:
Cancel
Krishnamoorthy - erode,இந்தியா
02-செப்-201406:47:27 IST Report Abuse
Krishnamoorthy சமஸ்கிருத எழுத்துக்களும் ஹிந்தி எழுத்துக்களும் ஒரே மாதிரி இருப்பதாலும் சமஸ்கிருதத்துக்கு வடமொழி என பெயர் வந்ததாலும் சமஸ்கிருதத்தை வடஇந்திய மொழி என நம்மவர்கள் நினைக்கிறார்கள் அவர்களுக்கு சமஸ்கிருதம் யாருடைய தனிமொழி இல்லைஎன்றும், அது இந்திய பொது மொழி என்றும் தெரியாது. துர்க்கா போன்றவர்கள்தான் தீவிரமாக நம்மவர்களுக்கு புரியவைக்க வேண்டும். (அறிஞர் அண்ணா எப்பொழுதுமே ஒரு விசயத்தை கரைத்து குடித்துவிட்டுத்தான், அதைப்பற்றி விமர்சிப்பார்கள். ஆனால் நம்மவர்கள் எதுமே தெரியாமல் போர்க்கொடி தூக்குவார்கள். என்ன செய்ய)
Rate this:
Cancel
Se Thamizhselvan - Chennai,இந்தியா
16-ஆக-201404:03:05 IST Report Abuse
Se Thamizhselvan அன்று புதுகோட்டை மற்றும் மதுரையை மையமாக கொண்டிருந்த சமண முனிவர்களில் ஒருவர்தான் நாம் இப்பொழுது "திருவள்ளுவர்" என்று அழைக்கிறோம். அந்த சமண முனிவர்தான் உபநிஷதிளிருந்து (Upanishad) திருக்குறளை பிராமிய எழுத்துகளை பயன்படுத்தி 2000ம் ஆண்டுகளுக்கு முன் எழுதினார். நாம் கூறிகொண்டிருக்கும் திருவள்ளுவர் நாம் படிக்கும் திருக்குறள் இப்போழுதிய தமிழில் எழுதவில்லை. மு.வா. அவர்கள் 'திருவள்ளுவர்' என்று நாம் கூறும் சமண முனிவர் பிராமிய மொழியில் உபநிஷயதிளிருந்து எழுதிவைத்திருந்த அருள் உரையை இப்போழுதுள்ள தமிழில் வடிவமைத்துள்ளார். புரனநூற்றிலோ, சிலபதிகாரதிலோ, கம்பர் ராமயனதிலோ, நாயன்மார்கள் பாடல்களிலோ, எந்த கல்வெட்டிலோ, எந்த அரசர்கள் உறையிலோ திருவள்ளுவரை பற்றி கூறியதில்லை. சுமார் 300 வருடங்கள் முன் நாம் இம்போழுது பெசும் தமிழோ அல்லது நாம் எழுத்தும் தமிழ் எழுத்துகளோ கிடையாது. ஆதாரம்: கோவில் கல்வெட்டுக்கள். அதாவது, 300 வருடங்களுக்கு முன்யிருந்த தமிழ் 80% சமஸ்க்ருதத்தை மையமாகக்கொண்ட மொழியாக இருந்தது .நாம் அன்றாடும் பேசும் தமிழில் சம்ஸ்க்ருதம் பரவலாக கலந்துள்ளது. தமிழ் மொழி சம்ஸ்கருத மொழியுடன் தொடர்புடைய மொழி. ஆதாரம்: தொல்காப்பியர் இல்லக்கணமும் பாணினி சம்ஸ்க்ருத இலக்கணமும் மிகுந்த தொடர்புடையவை. பாரதநாட்டியம், நாதஸ்வரம், சப்த ஸ்வரங்கள் அனைத்தும் சம்ச்க்ருததிளிருந்து வந்தவைகள். ஸம்க்ருதம் நம் தாய்மொழி. அதை புறக்கணிப்பது நம் தாயை புறக்கணிப்பது போன்றது. அறிவு உள்ளவர்கள் தாயை புறகணிக்க மாட்டார்கள்.
Rate this:
Chandru K - Paris,பிரான்ஸ்
18-ஆக-201403:25:02 IST Report Abuse
Chandru Kநீங்கள் கூறுவது முற்றிலும் தவறு. வாழும் தமிழை தமிழை தாழ்த்தி காணமல் போன சமல்கிருதத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தங்கள் கருத்தை பதிவு செய்து இருக்கிறீர்கள்........ ஆமா ஒரே ஒரு கேள்வி உங்கள் பெயர் உண்மையிலேயே தமிழ்செல்வன் தானா?????????????? ஏன் கேட்கிறேன் என்றால்.....இதுவரை தினமலரில் ஒரே ஒரு கருத்தை தான் பதிவு செய்து இருக்கிறீர்கள்....... தமிழை தாழ்த்த வேண்டும் என்பதற்காகவே தமிழ்செல்வன் என்ற பெயரில் ஒரு கணக்கை தொடங்கி...... சொல்லுங்கள்....... இது நல்லாவா இருக்கு?...
Rate this:
Kani - Tiruchy,இந்தியா
12-செப்-201409:18:15 IST Report Abuse
Kaniஉன்பெயரே - சந்துரு - ஒரு சம்ஸ்கரத பெயர், இதில் என்ன 'காணாமல் போன சம்ஸ்கரதம்..." இந்தியாவில் உள்ள அனைவரின் பெயர்களும் சம்ஸ்கரத பெயர்களே. உனக்கு தமிழும் தெரியவில்லை சம்ஸ்கரத்தை பற்றியும் ஒன்றும் தெரியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள சம்ஸ்கரதம் தெரிந்தவர்களுக்கு தமிழ் நன்றாக வரும், தெளிவாக பெசுர்வர்கள். ஆனால், தமிழ் நாட்டில் உள்ள தமிழே சரியாக தெரியாதவர்களுக்கு எந்தமொழியும் தெரியாது. இதான் உண்மை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X