தமிழ்நாடு

மேட்டூர் அணை உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்ப கோரிக்கை

Added : ஆக 09, 2014
Advertisement

கரூர் : மேட்டூர் அணையில் இருந்து வரும் உபரி நீர், கடலில் கலக்காமல் ஏரி, குளங்களில் நிரப்பி, விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும், என தமிழ்நாடு விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேட்டூர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், நீர்பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதரம் பெறுகின்றன. நடப்பாண்டு, தமிழகத்தில் பருவமழை சரியாக பெய்த நிலையில் கர்நாடகாவில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் தொடர் மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இரு அணையில் இருந்து, ஒரு லட்சம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து திறந்து விடும் உபரி நீர் வீணாகி கடலில் கலப்பது விவசாயிகள் மத்தியில் வேதனை ஏற்படுத்துகிறது.மேட்டூர் அணையில் இருந்து, ஈரோடு மாவட்டம் பாசூர் வரை, ஐந்து இடங்களில் மின் உற்பத்தி தடுப்பணைகள் உள்ளன. ஒவ்வொரு தடுப்பணையிலும் அரை டி.எம்.ஸி., தண்ணீர் தேக்கி வைக்க முடியும். கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணை மூலம், 1.05 டி.எம்.ஸி., நீர் மற்றும் தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டத்தில், 3,000 ஏரி முதல், 4,000 ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீர் நிரப்பி வைக்கலாம். ஏரிகளுக்கு செல்லும் கால்வாய் ஆக்ரமிப்புகளால், தண்ணீர் செல்லாத நிலை உள்ளது.

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நல சங்க செயல்தலைவர் ராஜராம், கூறியதாவது: காவிரி ஆற்றில், ஒரு லட்சம் கன அடி உபரி நீர் மேட்டூர் அணைக்கு வர துவங்கி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து, ஆகஸ்ட், 15 தேதி முதல் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்குள் அணை நிரம்பும் என எதிர்பார்க்க முடியாது. உபரி நீர் அதிகரிக்கும் காலங்களில், கடலில் தண்ணீர் வீணாவதை தவிர்க்க, தடுப்பணைகள் மற்றும் ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்பினால் பயனுள்ளதாக இருக்கும். காவிரி ஆற்றின் மூலம் கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஏரி, குளத்துக்கு தண்ணீர் செல்லும் வசதி இல்லை. தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஏரி, குளங்களில் உபரி நீரை நிரப்ப, பொதுப்பணி துறை அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் தங்கவேல், கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் உள்ள கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி உள்பட பல்வேறு அணைகள் நிரம்பி உபரி நீராக, 80 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலை தொடருமானால், மேட்டூர் அணை, 7 நாட்களில் முழு கொள்ளளவான, 120 அடியை தொட்டுவிடும். அதன் பின், அரசு திறந்துவிடும் உபரி நீர் கடலில் கலக்காமல் தேக்கி வைத்து அருகில் உள்ள குளங்கள், ஏரிகளில் நிரப்பினால், நிலத்தடி நீரை உயர்த்த முடியும். மேலும், உபரி நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க, அரசுக்கு பல முறை கொடுமுடி வாய்க்கால் அமைக்க கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வரும் காலங்களிலாவது கொடுமுடி வாய்க்கால் வெட்டி வறட்சி பகுதியான கடவூர், மணப்பாறை வட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X