தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தின் இலக்கு; 3.5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி

Added : ஆக 09, 2014
Advertisement

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில், 3.5 லட்சம் ஏக்கரில், சம்பா நெல் சாகுபடி செய்வதென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து வரும், 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படும், என்று தமிழக சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டால், 2 அல்லது 3 நாட்களில் டெல்டா பாசனத்துக்காக, கல்லணை கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு தலைமை வகித்து, கலெக்டர் சுப்பையன் பேசியதாவது: மேட்டூர் அணை திறக்கப்படவுள்ள நிலையில், கல்லணைக் கால்வாயிலும் விரைவில் தண்ணீர் திறந்துவிடப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது. கல்லணைக் கால்வாயில் விடப்படும் தண்ணீர், கடைமடை பகுதிகளுக்கு விரைவில் சென்றடையும் விதமாக கால்வாய்கள், வரத்துவாரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள், விரைவில் தூர்வாரி தயார்படுத்த பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசனத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு, பாலங்கள் கட்டும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து முடிக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை, விரைவில் மூட வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில், 3.5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 5,000 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மூலம் நெல் சாகுபடி செய்யப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடி முறைகளை பின்பற்றுமாறும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் விவசாயிகளுக்கு, வேளாண்மைத்துறையினர் அறிவுரை வழங்க வேண்டும்.
சம்பா பருவத்துக்கு ஏற்ற நீண்டகால மற்றும் மத்திய கால நெல் விதைகளான ஆடுதுறை, பி.பி.டி.,5204, சாவித்ரி, சுவர்ணா, கோ-50 உள்ளிட்ட, 11 மெட்ரிக் டன் நெல் விதைகள் விற்பனைக்காக, வேளாண்மை விரிவாக்க மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில், 2,000 மெட்ரிக் டன் தரமான நெல் விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாற்றுக்காக, நீண்டகால நெல் விதைகளை, ஆகஸ்ட் இறுதிக்குள் விதைக்க வேண்டும். மத்திய கால நெல் விதைகளை செப்டம்பர் இறுதிக்குள் விதைக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள், அதாவது அக்டோபர், 15ம் தேதிக்குள் சம்பா சாகுபடிக்கான நடவை முடித்துக்கொள்ள்ளுமாறு, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சந்திரசேகரன், வேளாண் இணை இயக்குனர் சேகர், துணை இயக்குனர் சீனிவாசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கலைச்செல்வன் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X