பொது செய்தி

தமிழ்நாடு

நீரின்றி வறண்ட ஸ்ரீபெரும்புதூர் ஏரி

Added : ஆக 11, 2014
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஏரி, தண்ணீர் இன்றி வறண்டு போனதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. ஸ்ரீபெரும்புதுார் ஏரி, கம்பவர்மனால் வடிவமைக்கப்பட்டது. 340 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் கரை 3,600 மீட்டர் நீளம். நான்கு மதகுகள் மூலம், 1,427 ஏக்கர், நன்செய் நிலங்கள் பாசன வசதி பெற்று உள்ளன. ஏரியில், 17.9 அடி உயரத்திற்கு, 174.2 கன மில்லியன் லிட்டர் கொள்ளளவு

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஏரி, தண்ணீர் இன்றி வறண்டு போனதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

ஸ்ரீபெரும்புதுார் ஏரி, கம்பவர்மனால் வடிவமைக்கப்பட்டது. 340 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் கரை 3,600 மீட்டர் நீளம். நான்கு மதகுகள் மூலம், 1,427 ஏக்கர், நன்செய் நிலங்கள் பாசன வசதி பெற்று உள்ளன. ஏரியில், 17.9 அடி உயரத்திற்கு, 174.2 கன மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்த ஏரியின் மூலம், ஸ்ரீபெரும்புதுார், பீமன்தாங்கல், சிவன்தாங்கல், பக்தவத்சல நகர், கச்சிப்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன் அடைந்து வந்தனர்.

இந்நிலையில், ஏரியன் கீழ் பகுதியில், 100 ஏக்கர் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளாக மாறின. இதனால், இப்பகுதிவாசிகளுக்கு, குடிநீர் வழங்கும் நீர்நிலை ஆதாரமாக, ஏரி விளங்கி வருகின்றது. இந்நிலையில், பருவ மழை பொய்த்து போனதால், ஏரியில் தண்ணீர் இன்றி, வறண்டு போனது. இதனால், பகுதிவாசிகளுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது.எனவே, ஆண்டு முழுவதும், ஏரியில் தண்ணீர் சேமித்து வைக்கும் விதத்தில், ஏரியை ஆழப்படுத்தி, துார் வாரவும், வரத்து கால்வாய்களை சீரமைக்கவும், பொதுப்பணி துறையினர் நடவடிக்கை வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X