ஊட்டி : ஊட்டி ஒய்.பி.ஏ., விவகாரத்தில், மாவட்ட நிர்வாகம் தனது முடிவை தெளிவுப்படுத்தியுள்ளது.
நீலகிரி
மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வரும்,
ஊட்டி இளம் படுகர் நலச் சங்கத்தில் (ஒய்.பி.ஏ.,) நிர்வாக பொறுப்பை
ஏற்பதில், முன்னாள் எம்.எல்.ஏ., குண்டன், இன்னாள் எம்.எல்.ஏ.,
புத்திச்சந்திரன் தரப்பினருக்கு இடையே, கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.
இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் பிரச்னையால், மாவட்ட நிர்வாகம்,
ஒய்.பி.ஏ., கட்டடத்திற்கு சீல் வைத்துள்ளது."கட்டடத்தை கையகப்படுத்தும்
திட்டமும், மாவட்ட நிர்வாகம் வசம் உள்ளது' என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து,
பொரங்காடு சீமெ தலைவர் பீமா கவுடர், பொரங்காடு சீமெ படுகர் சங்க தலைவர்
ராஜேஷ், அமைப்பாளர் பெள்ளி உட்பட நிர்வாகிகள், நேற்று மாவட்ட கலெக்டரை
சந்தித்தனர்.
பின், அவர்கள் கூறுகையில்,""ஒய்.பி.ஏ., என்பது படுகர்
சமுதாயத்துக்கு சொந்தமானது; யாரும் அதை உரிமை கொண்டாட முடியாது.
இப்பிரச்னையில், நான்கு சீமெ படுகர் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து,
வரும் 16ம் தேதி, கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் கூட்டம் நடத்தவுள்ளோம்.
அதில், எடுக்கும் முடிவுக்கு சமுதாய மக்கள் கட்டுப்பட வேண்டும்,'' என்றனர்.
இதுகுறித்து,
மாவட்ட கலெக்டர் சங்கர் கூறுகையில், ""ஒய்.பி.ஏ., விவகாரத்தை பொறுத்தவரை
எங்களுக்கு சட்டம் ஒழுங்குப் பிரச்னை தான் முக்கியம்; அதன் நிர்வாகம்
குறித்து கவலையில்லை. நான்கு சீமெ மக்களும், ஒற்றுமையுடன் இருந்து, சட்டம் -
ஒழுங்குப் பிரச்னை ஏற்படாத வகையில், செயல்படுவதாக உறுதியளித்தால்,
மேற்கொண்டு கட்டடத்தை திறந்து விடுவது குறித்து பரிசீலிக்கப்படும்,''
என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE