பதிவு செய்த நாள் :
கருத்துகள் (80)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

பாரதிய ஜனதா, காங்கிரஸ் உட்பட, 11 கட்சிகள் ஆதரவுடன், லோக்சபா துணை சபாநாயகராக, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, இன்று ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

லோக்சபா துணை சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பை, லோக்சபா செயலகம், நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இதையடுத்து, நேற்று காலை, 10:45 மணிக்கு, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் புடை சூழ, தம்பிதுரை தன் வேட்பு மனுவை, லோக்சபா செயலகத்தில் தாக்கல் செய்தார். அவரின் மனுவை, திருச்சி எம்.பி., குமாரும், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி., ராமச்சந்திரனும், முன்மொழிந்தனர்.பா.ஜ., சார்பில், அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், காங்., சார்பில், மல்லிகார்ஜுன கார்கே, ஜோதிராதித்ய சிந்தியா என, 11 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள், தம்பிதுரையின் பெயரை வழிமொழிந்துள்ள ஆதரவு கடிதங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.பகல், 12:00 மணி வரை மட்டுமே, வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தம்பிதுரையை தவிர, வேறு எவரும் மனு தாக்கல் செய்யவில்லை.

ஒருமனதாக தேர்வு:
இன்று காலை கேள்வி நேரம் முடிந்ததும், லோக்சபா துணை சபாநாயகராக அ.தி.மு.க.,வின் தம்பிதுரையை முன்மொழிந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். தீர்மானத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வழிமொழிந்தார். தொடர்ந்து எம்.பி.,க்கள் தம்பிதுரைக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். இதையடுத்து, தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. எம்.பி.,க்களின் ஒருமித்த ஆதரவுடன் தம்பிதுரை, லோக்சபா துணை சபாநாயகராக தேர்வு செய்யப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து எம்.பி.,க்கள் மேஜையை தட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இணைந்து தம்பிதுரையை அழைத்துச் சென்று துணை சபாநாயகருக்கான இருக்கையில் அமர வைத்தனர். தொடர்ந்து பிரதமர் மோடி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் தம்பிதுரையை வாழ்த்தி பேசினர்.

லோக்சபாவில், இது நாள் வரை, முக்கிய விவாதங்கள் மற்றும் பிரச்னைகளின் போது, கட்சியின் குரலை ஓங்கி ஒலித்தவர் மற்றும் சபையில், அ.தி.மு.க.,வை வழிநடத்திவர் தம்பிதுரை. அவர் துணை சபாநாயகராவதால், லோக்சபாவில், அ.தி.மு.க.,வை வழிநடத்தப் போவது யார் என்ற, கேள்வி எழுந்துள்ளது.

துணை சபாநாயகர் பொறுப்பை ஏற்றால், கட்சியின் சார்பில், சபையில் பேச முடியாது. விவாதங்களிலும் பங்கேற்க முடியாது. மாநில சட்டசபைகளில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, கட்சியின் சார்பில், துணை சபாநாயகர் பங்கேற்று பேசலாம். ஆனால், லோக்சபாவில், கட்சி சாராதவராகவே துணை சபாநாயகர் செயல்பட வேண்டும். தற்போது, அ.தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் மற்றும் பார்லிமென்ட் அ.தி.மு.க., கட்சித் தலைவர் என்ற பதவிகளை வகிக்கும் தம்பிதுரை, துணை சபாநாயகரான பின், இந்தப் பதவிகளில் இருந்தும் விலகி இருக்க வேண்டும். அதனால், அ.தி.மு.க., பார்லிமென்டரி கட்சிப் பதவிகளிலும், மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது. லோக்சபாவில், அ.தி.மு.க.,வுக்கு, 37 எம்.பி.,க்கள் இருந்தாலும், இதுவரை, முக்கிய விவாதங்கள் அனைத்திலும், கட்சி சார்பில், இவரே பெரும்பாலும் பேசுவார். திடீரென, பேச வேண்டிய சூழ்நிலை வந்தாலும், இவர் மட்டுமே பேசி, நிலைமை சமாளிப்பார்.

அவர் தற்போது துணை சபாநாயகர் ஆகியுள்ளதால், அவரது இடத்தை நிரப்பி, விவாதங்களில் பங்கேற் றுப் பேசி, லோக்சபாவில், அ.தி.மு.க.,வை வழிநடத்தப் போவது யார் என்ற பரபரப்பும், கேள்வியும் எழுந்துள்ளது.சமீபத்திய தேர்தலில், கரூர் தொகுதியில் இருந்து, லோக்சபாவுக்கு தேர்வான தம்பிதுரை, ஏற்கனவே, 1985 முதல், 1989 வரை, லோக்சபா துணை சபாநாயகராக பதவி வகித்துள்ளார். தற்போது, இரண்டாவது முறையாக, துணை சபாநாயகராகியுள்ளார்.

கிடைக்கும் சலுகைகள்என்னென்ன?
*துணை சபாநாயகர் பதவி, மத்திய இணை அமைச்சர் அந்தஸ்து உடையது.
*பார்லிமென்டில், துணை சபாநாயகருக்கென தனி அலுவலகம் உண்டு.

Advertisement

*தனக்கென ஒரு அதிகாரி மற்றும் ஐந்து அலுவலர்களை பணி அமர்த்திக் கொள்ளலாம்.
*சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட காரில் பயணிக்கலாம்.
*தனி பாதுகாப்பு அதிகாரி எப்போதும் உடன் இருப்பார்.
*சபாநாயகர் இல்லாத நேரங்களில் சபையை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு தான் மிக முக்கியமானது.
*பார்லிமென்டின் இரண்டு முக்கிய குழுக்களுக்கு துணை சபாநாயகர் தலைமை வகிப்பார். அதில், முக்கியமானது நூலக கமிட்டி. மற்றொன்று, எம்.பி.,க்களை உறுப்பினர்களாக கொண்டதும், பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதுமான, டில்லி கான்ஸ்டிடியூஷன் கிளப் தலைவர் பதவி.
*அரசியல் சட்ட விதிகளின்படி, துணை சபாநாயகர் பதவி, அதிகார வரிசையில், 10வது இடம் வகிக்கிறது.

- நமது டில்லி நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (80)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - chennai,இந்தியா
13-ஆக-201421:57:24 IST Report Abuse
Natarajan Ramanathan ஐநா சபையின் செயலர் பதவியே கிடைத்தாலும் அம்மா காலில் விழ வேண்டும். என்ன கன்றாவியோ இது.
Rate this:
Share this comment
Cancel
vasu v - tuticorin,இந்தியா
13-ஆக-201421:39:27 IST Report Abuse
vasu v 37 மாங்காய்களால் ஒரு பயனும் தமிழ் நாட்டுக்கு விளையப்போவதில்லை அம்மா பஜனையை தவிர
Rate this:
Share this comment
Cancel
Aswaththaamaa - Varanasi,இந்தியா
13-ஆக-201420:33:20 IST Report Abuse
Aswaththaamaa வாழ்த்துக்கள். பாக்கியம் ராமசாமியின் ''ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள்'' என்ற நகைச்சுவை கதையில், அரேபிய நாட்டின் சுல்தானின் அமைச்சரான ஜாஃபார், சுல்தான் ஒவ்வொருமுறை கேள்வி கேட்கும் போதும் ''இறைவனின் கருணைக்கு பாத்திரமான் பெரிய கோட்டைகதவுகளைக் கொண்ட அல்ஜுமாயின் அரசவையில் வீற்றிருக்கும் என்று தொடங்கி மூச்சுவிடாமல் பேசி மும்முறை வணங்கி பதில் சொல்வார்..பொறுக்க முடியாத சுல்தான் ஒரு சமயத்தில் நீள நீளமான வசனங்களை பேசும் இந்த சைத்தானின் நாக்கையறுத்து முதலைக்கு போட்டு அந்த முதலையையும் கொன்று விடுங்கள் என்பார். அது கேட்டு ஜாஃபார் ''மன் தப் பிழை பொறுத் பிள் குட் காரன் என்று புலம்புவார்.அது போல இவர்கள் அம்மா புராணம் பாடி மேட்டருக்கு வரும் வழக்கத்தைவிட்டு, தெளிவாக திடமாக பேசி தமிழருக்கு மரியாதை சேர்த்தால் நலம்.
Rate this:
Share this comment
Cancel
bhagyaraj - Madurai  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201420:13:09 IST Report Abuse
bhagyaraj வாழ்த்துக்கள் சார்
Rate this:
Share this comment
Cancel
shivaram - madurai,இந்தியா
13-ஆக-201419:33:08 IST Report Abuse
shivaram அன்பு நண்பர்களே : தமிழ் நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த மகத்தான பதவி அதை ஏற்றுக்கொண்டு திறமையாக சபை வழிநடத்த வாழ்த்துக்கள். அ.தி.மு.க உறுப்பினர்கள் தமிழ் நாட்டுக்கு தேவையான விசயங்களை பேசி அது கிடைக்கபெற பாடுபட வேண்டுகிறோம் ....நன்றி தினமலர்.
Rate this:
Share this comment
Cancel
Ootai Vaayan - Kovai,இந்தியா
13-ஆக-201419:19:43 IST Report Abuse
Ootai Vaayan துணை சபாநாயக்கர் என்பது தம்பிதுரைக்கு போட்ட எலும்புத்துண்டு. சபாநாயக்கர் பதவி என்பது நடுநிலையானது. இனிமேலாவது வாய் மூடி பேசாமல் இருக்க வேண்டுகிறேன். புரட்சிதலைவி, அம்மா என்று கூவுவதை விட்டுவிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
13-ஆக-201419:02:50 IST Report Abuse
Mahendran TC திரு. தம்பிதுரை கூடுதலாக இன்னும் எத்தனை பள்ளிகள் , கல்லூரிகள் தொடங்கப் போகிறாரோ ?.
Rate this:
Share this comment
Cancel
கீரன் கோவை - Coimbatore,இந்தியா
13-ஆக-201418:56:00 IST Report Abuse
கீரன் கோவை அரசியல் சட்ட விதிகளின்படி, துணை சபாநாயகர் பதவி, அதிகார வரிசையில், 10வது இடம் வகிக்கிறது. இந்தியாவின் 10 ஆவது அதிகார மையம் ஜெயலலிதா காலில் விழத் தயாராக இருப்பதால் ஜெயலலிதா இந்தியாவின் ஒற்றை இலக்க அதிகார மையமாகிறார்.
Rate this:
Share this comment
Cancel
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
13-ஆக-201418:54:19 IST Report Abuse
Mahendran TC அ.தி.மு.க.வின் வாலை ஓட்ட நறுக்கவேண்டும் என்ற நோக்கிலேயே இந்த துணை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுத்திருக்கிறது பி.ஜே.பி.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
13-ஆக-201418:31:14 IST Report Abuse
spr துணை சபாநாயகர் பொறுப்பை ஏற்றால், கட்சியின் சார்பில், சபையில் பேச முடியாது. விவாதங்களிலும் பங்கேற்க முடியாது - இதுவும் ஒருவகை லஞ்சமே பாஜக அதிமுகவிற்கு கொடுத்தது. ஆனால் யார் தண்டனை தருவது. கொடாக்கண்டனும் விடாக்கண்டனும் போல தன் மீதுள்ள லஞ்ச வழக்குகள் நலமே முடிய அம்மா செய்த தியாகம் பாஜகவிற்கு லாபம். அவையில் சற்று நன்றாகப் பேசத்தெரிந்த ஒருவரை பாஜக விலைக்கு வாங்கி விட்டது. இனி அந்த நிலைக்கு இன்னொரு திறமைசாலியை அம்மா கண்டெடுக்க வேண்டும். இந்த லஞ்சத்தால் மேலவையில் பாஜகவை ஆதரிக்க வேண்டும். 38 ல் ஒன்று பறிபோய்விட்டது. தனிப்பட்ட முறையில் அவருக்கும் ஆதாயம் தமிழகத்தில் அவரைச் சார்ந்து நிற்கும் கல்விநிறுவனங்கள் பயம் பெறுமாம் - சொல்கிறார்கள்.. இதில் வென்றது யார் பாஜகவா? இல்லை அதிமுகவா? (என்று அதிமுக அதிகாரத்திலும் அ இ தி மு க - அகில இந்திய திராவிட முன்னேற்றக் கழகம் (தென்னிந்தியாவிற்காவது - (தென்னிந்தியாதான் அன்றைய திராவிடம்) முன்னேற்றக் கழகமாகிறதோ அன்றுதான் அதற்கு உண்மையிலேயே நல்ல காலம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X