செக்போஸ்ட்டில் சிக்கல்; கோழி வியாபாரிகள் புலம்பல்

Added : ஆக 13, 2014
Share
Advertisement
"கார்ப்பரேஷன்ல பைப் ரீ-கனெக்ஷன் கொடுக்கறதுல, சில அலுவலர்களும், கவுன்சிலர்களும், "டை-அப்' செஞ்சுக்கிட்டு, மக்களிடம் பணம் கறக்கிறாங்களாம்,'' என்றவாறு, சுடச்சுட தயாரான மிளகாய் பஜ்ஜியை தட்டில் எடுத்து வந்தாள் மித்ரா."எதுக்காக ரீ-கனெக்ஷன் கொடுக்கிறாங்க. கொஞ்சம் விளக்கமா சொல்லு?'' என்று கேட்டபடி, மிளகாய் பஜ்ஜியை எடுத்து கடித்தாள் சித்ரா."குடிநீர் திட்ட
செக்போஸ்ட்டில் சிக்கல்; கோழி வியாபாரிகள் புலம்பல்

"கார்ப்பரேஷன்ல பைப் ரீ-கனெக்ஷன் கொடுக்கறதுல, சில அலுவலர்களும், கவுன்சிலர்களும், "டை-அப்' செஞ்சுக்கிட்டு, மக்களிடம் பணம் கறக்கிறாங்களாம்,'' என்றவாறு, சுடச்சுட தயாரான மிளகாய் பஜ்ஜியை தட்டில் எடுத்து வந்தாள் மித்ரா.
"எதுக்காக ரீ-கனெக்ஷன் கொடுக்கிறாங்க. கொஞ்சம் விளக்கமா சொல்லு?'' என்று கேட்டபடி, மிளகாய் பஜ்ஜியை எடுத்து கடித்தாள் சித்ரா.
"குடிநீர் திட்ட பணிகளுக்காக, அரசு தரப்புல 40 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்காங்க. பழைய ஊராட்சி பகுதியில் பதிச்சிருந்த இரண்டு இன்ச் குழாய்களை, நான்கு இன்ச் குழாயா மாத்துறாங்க. பழைய வீட்டு இணைப்புகளை "டிஸ்கனெக்ட்' பண்ணிட்டு, புது பைப் பதிச்சதும், "ரீ-கனெக்ஷன்' கொடுக்குறாங்க. ஏற்கனவே, "டிபாசிட்' கட்டியிருக்கறதால, 350 ரூபாய் செலுத்துனா, கனெக்ஷன் கொடுக்கலாம்னு, கோவை மாநகராட்சி சட்டத்துல சொல்லியிருக்கு, ஆனா, ஒரு சில கவுன்சிலர்களும், சில அலுவலர்களும் "டை-அப்' செஞ்சுக்கிட்டு, ரீ-கனெக்ஷனுக்கு 1,500 ரூபாய் வரைக்கும் மக்களிடம் கறக்குறாங்க. வீட்டு கனெக்ஷன் இல்லைன்னா, தண்ணிக்கு கஷ்டப்படணுமேன்னு, பொது ஜனங்களும், பணத்தை கொடுக்கிறாங்க,'' என விவரித்தாள் மித்ரா.
அன்றைய நாளிதழ்களை புரட்டிப்பார்த்துக் கொண்டிருந்த சித்ரா, பிரியாணிக்கடை விளம்பரத்தை பார்த்ததும், ""நா, ஒரு சம்பவம் சொல்றேன், கேளு. அம்மாபாளையம், ஆண்டிபாளையம் செக்போஸ்ட்டுல நைட் டூட்டி பார்க்குற போலீஸ்காரங்க, மிட் நைட், அதிகாலை நேரத்துல, அந்த வழியா கோழி லோடு கொண்டு போற வண்டிகளை மறிக்கிறாங்க. ஆளுக்கு தகுந்த மாதிரி, ரெண்டு, நாலுன்னு கோழிகளை வாங்கிட்டு அனுப்புறாங்க. இதை யாருகிட்ட போய் சொல்றதுன்னு, வியாபாரிங்க புலம்புறாங்க,'' என்று முடிப்பதற்குள், மாமூல் வாங்குறதுக்கு எப்படியெல்லாம், வழி தேடுறாங்க, பாருங்க என்று மித்ரா அழுத்துக் கொண்டாள்.
மித்ராவை அமைதிப்படுத்திய சித்ரா, ""இன்னொரு விஷயத்தையும் சொல்றேன் கேளு. தெனமும் அதிகாலை 4.00 மணிக்கு உழவர் சந்தை கூடுது. அந்த நேரத்துலயும், ரெண்டு போலீஸ்காரங்க, ஆஜராகிடுறாங்க. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துறாங்களோ, இல்லையோ, காய்கறி மூட்டை ஏத்திட்டு வர்ற வண்டிகளை ஓரங்கட்டி, "ஓவர் லோடு' வழக்கு போடுறாங்க. மொபட்டில், காய்கறி கொண்டு வந்தாங்கன்னா, லைசென்ஸ் இருக்கான்னு கேட்டு, 500 ரூபா வரைக்கும் கறந்திடுறாங்க,'' என்றாள்.
அந்நேரத்தில், "டிவி'யில் தீ விபத்து தொடர்பான செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. உடனே, குறுக்கிட்ட மித்ரா, ""திருப்பூர்ல அடுத்தடுத்து தீ விபத்து நடந்துச்சுல்ல. எந்த வசதியும் இல்லாம, "பயர் சர்வீஸ்'காரங்க அவதிப்பட்டாங்க. ஆனா, தீ விபத்து ஏற்பட்டுச்சுன்னா, லாரி தண்ணீர் விக்கிறவங்களும் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.
"ஏன்... அவுங்களுக்கு என்ன குறை... நல்லாத்தானே இருக்காங்க,'' என சித்ரா கேட்க, ""தீ விபத்து ஏற்பட்டா, இரவு - பகல் பார்க்காம, தீயணைப்பு துறைக்காரங்க போராடுறது உண்மைதாங்க. தண்ணீர் பத்தாம போச்சுன்னா. தண்ணீர் லாரிகளை வரவழைக்கிறாங்க. தீயை அணைச்சதுக்கு அப்புறம், தண்ணீர்லாரிக்காரங்க பணம் வாங்குறதுக்குள்ள தடுமாற்றம் ஏற்படுது. அவரைக்கேளு, இவரைக்கேளுன்னு இழுத்தடிக்கிறாங்க. அவசரமான நேரத்துல தண்ணீர் கொண்டு வந்தா, தீயணைப்பு துறை வண்டியோட இன்ஜினுக்கு இணைச்சு, தீயணைக்கும் பணிக்கு மணிக்கணக்கா நிறுத்திடுறாங்க. காசும் கிடைக்கலை; அடுத்த லோடும் போக முடியலைன்னு வருத்தப்படுறாங்க. தீ விபத்துன்னு கூப்பிட்டா, தண்ணீர் லாரிக்காரங்க அலறி அடிச்சிட்டுக்கிட்டு "எஸ்கேப்' ஆயிடுறாங்க,'' என்றாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X