பொது செய்தி

இந்தியா

அலுவலக பிரிப்பில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மோதல்: ஆக்கிரமித்து கொள்வதால் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சிக்கல்

Updated : ஆக 15, 2014 | Added : ஆக 14, 2014 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஐதராபாத்: ஆந்திராவிலிருந்து, தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், அங்கு நிலவும் நிர்வாக சிக்கல்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இரு மாநிலங்களுக்கும், தனித்தனியாக பிரிக்கப்பட்ட அலுவலகங்கள் போக, பொதுவாக நிர்வகிக்க வேண்டிய அலுவலகங்கள் விவகாரத்தில், இரு மாநிலங்களும் மோதிக் கொள்கின்றன; இதனால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.ஆந்திராவை
அலுவலக பிரிப்பில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மோதல்: ஆக்கிரமித்து கொள்வதால் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சிக்கல்

ஐதராபாத்: ஆந்திராவிலிருந்து, தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், அங்கு நிலவும் நிர்வாக சிக்கல்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இரு மாநிலங்களுக்கும், தனித்தனியாக பிரிக்கப்பட்ட அலுவலகங்கள் போக, பொதுவாக நிர்வகிக்க வேண்டிய அலுவலகங்கள் விவகாரத்தில், இரு மாநிலங்களும் மோதிக் கொள்கின்றன; இதனால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். பல கட்சிகள் அந்த கோரிக்கையை, பூசி மெழுகி வந்த நிலையில், காங்., தலைமையிலான, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசு, தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியது.இதற்காக, காங்., செயற்குழு கூட்டத்தில், 2013 ஜூலை 30ல், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் சூடுபிடித்து, கடந்த ஜூன் 2 முதல், தெலுங்கானா மாநிலம் செயல்படத் துவங்கியது.அதற்கு முன், அம்மாநிலத்திற்காக நடத்தப்பட்ட சட்டசபைத் தேர்தலில், டி.ஆர்.எஸ்., கட்சித் தலைவர், சந்திரசேகர ராவ் வெற்றி பெற்று, முதல்வரானார். அது போல, தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், எஞ்சியுள்ள ஆந்திராவின் (சீமாந்திரா எனவும் அழைக்கப்படுகிறது) முதல்வராக, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றார்.

நிலைமை இவ்வாறு இருக்க, இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக, இப்போதைய தலைநகர் ஐதராபாத், 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும்; அதன்பின், தெலுங்கானாவுக்குத் தான் ஐதராபாத் சொந்தம் என, அறிவிக்கப்பட்டதால், புதிய தலைநகரைத் தேடி வருகிறது, ஆந்திரா.இதற்கிடையே, இரு மாநிலங்களுக்கும் இடையே, அரசு ஊழியர்கள் பிரிக்கப்பட்டனர். அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களில், யார் தெலுங்கானா பகுதியில் பிறந்திருந்தனரோ, அவர்கள், தெலுங்கானா மாநிலத்திற்கும், ஆந்திரா பகுதியில் பிறந்தவர்கள், ஆந்திர மாநில அரசு அதிகாரிகளாகவும் மாற்றப்பட்டனர்.அது போல, அரசு அலுவலகங்களும், அரசு கட்டடங்களும், பொது இடங்களும் பங்கீடு செய்யப்பட்டன. இதில் பிரச்னை, ஐதராபாத்தில் தான் ஏற்பட்டது. எனினும், அந்தப் பிரச்னைகள், ஆக்கிரமிப்பு மூலம் சரியானது. அதாவது, தங்களுக்கு என, விரும்பும் மாநில அரசுகள், அந்த இடங்களில் போய் உட்கார்ந்து கொண்டன. இதில் பெரிய அளவில் பிரச்னை வரவில்லை.நதிநீர் பங்கீடு மற்றும் மின்சார பங்கீடு தான், பிரச்னையை ஏற்படுத்தியது. ஆந்திராவில் உற்பத்தியாகும் நதி, தெலுங்கானாவுக்குள் பாய்ந்தது போல், தெலுங்கானாவில் உற்பத்தியாகும் நதி, ஆந்திராவில் பாய்வதால், நதிநீர் பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டது.அது போல், மின்சாரப் பங்கீடும் பிரச்னையை ஏற்படுத்தியது. அந்த பிரச்னைகளுக்கு, இப்போது தற்காலிக தீர்வு காணப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இரு மாநிலங்களுக்கும் கூட்டு பொறுப்பாக உள்ள கட்டடங்கள், நிறுவனங்கள் தான், இப்போது, இரு மாநில அரசுகளுக்கும் மோதலை ஏற்படுத்தி உள்ளது.மத்திய அரசின் உயர்கல்வி மையங்கள் உட்பட, சில கல்வி நிறுவனங்கள், சமூக தொண்டு நிறுவனங்கள், விளையாட்டு அமைப்புகள் போன்றவை, இரு மாநிலங்களும், கூட்டாக பராமரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதை மேற்கொள்ள விரும்பாத இரு மாநிலங்களும், தங்களுக்கு என தனியாக, தாங்களாகவே, சட்டவிரோதமாக பிரித்துக் கொள்கின்றன.தெலுங்கானா பகுதியில் உள்ள, மத்திய அரசின் கல்வி நிறுவனம் மற்றும் தொழில் நிறுவனத்தை, தங்கள் கட்டுப்பாட்டில், தெலுங்கானா எடுத்துக் கொண்டது. இதை அறியாத அதிகாரிகள், அந்த நிறுவனங்களுக்கு செல்லும்போது, துரத்தி அடிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.இப்படித் தான், சுற்றுலா மற்றும் ஓட்டல் நிர்வாக தேசிய கல்வி நிறுவனத்திற்குள் சென்ற, சிறப்பு தலைமை செயலர், சந்தனா கான், அங்கிருந்த தெலுங்கானா அதிகாரிகளால், உள்ளே வரக் கூடாது என, விரட்டி அடிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் தலையிட, தெலுங்கானா தலைமை செயலரும் முன்வராததால், அந்த அதிகாரியின் நிலை, மிகவும் பரிதாபமாக ஆனது. இது போல், ஏராளமான அதிகாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கூட்டாக பராமரிக்க வேண்டிய நிறுவனங்களை, தான்தோன்றித்தனமாக, இரு மாநிலங்களும் தங்களுக்கு என, தனியாக நிர்வகிப்பதால், மத்திய அரசின் அதிகாரிகளுக்கு, தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், ஆந்திர மாநில மறுஅமைப்பு சட்டத்தின், 10வது பிரிவு, செல்லாததாக ஆக்கப்பட்டு உள்ளது.


தலைநகரை தேடும் ஆந்திரா:

பத்தாண்டுகளுக்கு மட்டும் தான், ஐதராபாத் தங்கள் தலைநகராக இருக்கும் என்பதால், புதிய தலைநகரை, பிரிக்கப்பட்ட பின், எஞ்சியுள்ள ஆந்திரா தேடி வருகிறது.விசாகப்பட்டினம், குண்டூர் போன்ற பல நகரங்களில், ஏதாவது ஒன்றை, புதிய தலைநகரமாக தேர்ந்தெடுக்கலாம் என, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டால், அங்கு மனை விலை உச்சத்துக்கு சென்று விடுகிறது. இதனால், தலைநகரை ரகசியமாக தேடி வருகிறது, சீமாந்திரா.புதிய நகரங்களில் சுற்றுப்பயணம்புதிதாக தலைநகரை நிர்மாணிக்க வேண்டிய கட்டாயம், ஆந்திராவுக்கு ஏற்பட்டுள்ளதால், அந்த நகரை எப்படி அமைப்பது என்பதை ஆராய்வதற்காக, வல்லுனர் குழுக்கள், நம் நாட்டின் புதிய நகரங்களான, குஜராத்தின் காந்தி நகர், பஞ்சாபின் சண்டிகர், மகாராஷ்டிராவின் நவி மும்பை, சத்தீஸ்கரின் நயா ராய்ப்பூர் போன்ற நகரங்களுக்கு சென்றுள்ளது.அது போல், மற்றொரு குழு, புதிய நாடுகள், புதிய நகரங்களான, சிங்கப்பூர், ஹாங்காங், பிரேசிலியா, புத்ரஜயா, இஸ்லாமாபாத், துபாய் ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளன.


பிரமாண்ட ஐ.டி., நகர்:

நாட்டின், தகவல் தொழில்நுட்ப தலைநகராக, ஐதராபாத் விளங்கி வரும் நிலையில், அந்த நகரம், தெலுங்கானாவுக்கு, 10 ஆண்டுகளில் தாரைவார்க்கப்பட உள்ளதால், புதிதாக பிரமாண்ட தகவல் தொழில்நுட்ப நகரை உருவாக்கி, அதை, நாட்டின் புதிய தகவல் தொழில்நுட்ப தலைநகராக மாற்ற, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.இதற்காக விரிவான ஆலோசனையில், அவர் ஈடுபட்டு உள்ளார். உருவாக்கப்பட்ட ஐந்தாண்டுகளில், அதை நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகராக மாற்ற, அவர் உறுதி எடுத்துள்ளார். இதற்காக, பல சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை, ஆந்திரா பக்கம் ஈர்த்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan - Madurai,இந்தியா
14-ஆக-201417:34:11 IST Report Abuse
Loganathan மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா பிரிக்கப்பட்ட பொழுது இவ்வாறு பல பிரச்சனைகள் எழுந்தது. சென்னைக்கு மாறாக ஹைதராபாத் உருவானது.
Rate this:
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
14-ஆக-201415:46:35 IST Report Abuse
P. SIV GOWRI காங்கிரஸ் கட்சியின் மகிமைகளில் இதுவும் ஓன்று
Rate this:
Cancel
K.Ramesh - goa,இந்தியா
14-ஆக-201415:43:32 IST Report Abuse
K.Ramesh இதை படிக்கும் போது ஏதோ இந்தியா பாகிஸ்தான் பிரிவினை காலம் நிகழ்ச்சிகள் போல் மனதில் ஓடுகிறது. ஒரே தெலுங்கு மொழி பேசும் மக்களை வாக்கு சீட்டிற்காக பிரித்த அரசியல் கட்சிகளை என்ன வென்று சொல்வது? காலகொடுமை தெலுங்கானா மாநிலம் உருப்படாமல் போக போகிறது kcr தலைமையில். சந்திர பாபு நாய்டு திறமையான மனிதர். மாநிலத்திற்காக உண்மையாக உழைப்பவர். அவரது தலைமையில் பிரிந்த andhra முன்னேற வாய்ப்பு உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X