கதை பேசப்பேச... மழை கொட்டுது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கதை பேசப்பேச... மழை கொட்டுது

Added : ஆக 14, 2014
Share
பரமக்குடி : பரமக்குடியில் மழை வேண்டி மகாபாரத சொற்பொழிவு நிகழ்த்தி வரும் நிலையில், சில நாட்களாக மழை வெளுத்துக்கட்டி வருகிறது. இங்கு மூன்று ஆண்டுகளாக மழை இன்றி, நிலத்தடி நீர் 150 அடிக்கு கீழே போய்விட்டது.மகாபாரதத்தில் "விராட பர்வம்' காதை குறித்து சொற்பொழிவு நிகழ்த்தினால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. இதன்படி சுந்தரராஜப் பெருமாள் கோயில் முன், ஆக., 7 முதல் சொற்பொழிவு

பரமக்குடி : பரமக்குடியில் மழை வேண்டி மகாபாரத சொற்பொழிவு நிகழ்த்தி வரும் நிலையில், சில நாட்களாக மழை வெளுத்துக்கட்டி வருகிறது.
இங்கு மூன்று ஆண்டுகளாக மழை இன்றி, நிலத்தடி நீர் 150 அடிக்கு கீழே போய்விட்டது.மகாபாரதத்தில் "விராட பர்வம்' காதை குறித்து சொற்பொழிவு நிகழ்த்தினால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. இதன்படி சுந்தரராஜப் பெருமாள் கோயில் முன், ஆக., 7 முதல் சொற்பொழிவு நடக்கிறது. அன்று முதல் தினமும் மழை பெய்கிறது. ஆக.,11ல் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் மழை கொட்டித்தீர்த்தது. அடுத்து இரு நாட்களும் சாரல் மழை பெய்தது. "விராட பர்வம்' காதையை ராமநாதன், ரெங்காச்சாரி ஆகியோர் இரவு 8 மணிக்கு பேசி வருகின்றனர். ஏற்பாடுகளை சுப்புராமன், சேஷய்யன் குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X