சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

Updated : ஆக 18, 2014 | Added : ஆக 17, 2014
Advertisement
சொல்கிறார்கள்

'தீமை செய்யும் பூச்சிகளும் நல்லது தான்!'
வயல்களில் நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிக்கப்பதற்கான வழிமுறைகளை கூறும், பூச்சியியல் வல்லுனர் செல்வம்: வயல்களில், 25 சதவீதம், பயிர்களையே உணவாக உட்கொள்ளும் தீமை செய்யும் பூச்சிகளும்; தீமை செய்யும் பூச்சிகளை தேடி, அதை பிடித்து உணவாக உட்கொள்ளும், 75 சதவீதம் நன்மை செய்யும் பூச்சிகளும் உள்ளன. தீமை செய்யும் பூச்சிகளைத் தேடி, பயிர்களின் மேல்பகுதியில் நன்மை செய்யும் பூச்சிகள் இருக்கும். தீமை செய்யும் பூச்சிகள், பயிர்களின் உட்பகுதியில் இருக்கும்.பழங்காலங்களில் விவசாயிகள் இயற்கையான பூச்சி விரட்டிகளை பயன்படுத்தியதால், அது தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் கட்டுப்படுத்தியது. இப்போது எதற்கெடுத்தாலும் விவசாயிகள், பூச்சிக்கொல்லியை பயன்படுத்துகின்றனர். பயிர்களுக்கு பூச்சிக் கொல்லிகளை அடிக்கும்போது, முதலில் அழிவது நன்மை செய்யும் பூச்சிகள் தான். இதனால், நோய்களும் அதிகம் தாக்குகிறது; விளைச்சலும் குறைகிறது.பூச்சிக் கொல்லிகளால் பூச்சிகள் மட்டுமல்லாமல், வயலில் வாழும் பல நீர்வாழ் உயிரினங்களும் அழிந்து விட்டன. இன்றைய நிலத்தடி நீர் மாசுபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்வற்றிற்கு பூச்சிக்கொல்லிகளும் காரணம்.வரப்புகளில் தட்டைப் பயிரை பயிர் செய்தால், அஸ்வினிப் பூச்சிகள் அதிகமாக இருக்கும். இவற்றை உண்ண, நன்மை செய்யும் பூச்சிகள் வருவதால், இது தடுப்பரண் போல, வயலில் செயல்பட்டு, தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.அதேபோல், மஞ்சள் வண்ணத்தில் பூ பூக்கும் பூச்செடிகளை பயிரிட வேண்டும். எடுத்துக்காட்டாக செண்டிப்பூ, சூரியகாந்தி போன்றவற்றை வரப்புகளில் நட்டு வைத்தால், அது நன்மை செய்யும் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும்.வரப்புகளில், மக்காச்சோளத்தை ஆங்காங்கே நட்டு வைக்கலாம். இது, 'லைவ் ஸ்டாண்ட்' போல செயல்பட்டு, பறவைகள், ஆந்தைகள் அமர்ந்து, தீமை செய்யும் பூச்சிகளைப் பிடித்துத் தின்ன உதவும்.வரப்புகளில் பொறிப்பயிராக ஆமணக்கு செடியை, எட்டு அடிக்கு ஒன்றாக நட்டு வைக்கும் போது, இந்தச் செடியின் மூலமாக, வயலில் எந்தப் பூச்சி உள்ளது எனக் கண்டுப்பிடிக்கலாம்.மேலும், வயலை கசப்பாக மாற்ற வேப்பங்கொட்டையை அரைத்து, பயிர்களில் தெளிக்கலாம். இந்தக் கசப்பானது தீமை செய்யும் பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மை, பக்கவாதம் போன்ற நோய்களை உண்டு பண்ணி, பூச்சிகளை அழித்துவிடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X