சென்னை தினம்- 375: இப்படிதான் இருந்தது ஐஸ் அவுஸ்| Dinamalar

சென்னை தினம்- 375: இப்படிதான் இருந்தது ஐஸ் அவுஸ்

Updated : ஆக 19, 2014 | Added : ஆக 19, 2014 | கருத்துகள் (2)

சென்னை நகரம் பிறந்த நாள் கொண்டாடப்போகிறது.

சென்னை நகரத்தின் நிறுவன நாள் ஆகஸ்டு 22 , 1639 என கருதப் படுகிறது.


-தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள சிறிய நிலப்பகுதி அன்று தான் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கை மாறியது. பிரான்சிஸ் டே, அவருடைய துபாஷி (இரு மொழி பேசுபவர்) மற்றும் அவர்களுடைய மேலதிகாரி அண்ட்ரூ கோகன் விஜய நகர நாயக்கர்களுடன் இந்தப் பரிமாற்றத்தை நடத்தினர்.


பிறகு, கோட்டையைச் சுற்றி குடியிருப்புகள் உருவாகத் தொடங்கின. அருகருகே இருந்த கிராமப் பகுதிகள் இணைக்கப் பட்டன. பழைய, புதிய சிறு நகரங்கள் இணைந்து சென்னை மாநகரமாக உருவாகியது.இன்று சென்னை மாநகரம் கல்வி,மருத்துவம், ஆட்சித்துறை, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு எனப் பல துறைகளில் சிறப்புப் பெற்ற நகரமாகத் திகழ்கிறது.
இப்படி தான் இருந்தது ஐஸ் அவுஸ்

சென்னையை எத்தனை முறை, எத்தனை புகைப்படங்கள் வழியாக பார்த்தாலும், அது, காஞ்சி பெரியவர் சொன்னதுபோல, யானையையும், ரயிலையும் பார்க்க பார்க்க சலிக்காதது போல, சலிக்காது தான். இந்த பகுதியில்,
சென்னையின் பழைய புகைப்படங்களை, நீங்கள் இதுவரை பார்த்திராத, பார்த்திருந்தாலும் மனதில் பட்டிராத புகைப்படங்களை பார்க்க போகிறீர்கள்!


இங்கு இடம் பெற்றிருப்பது, சென்னை மெரீனா கடற்கரையில் இன்று பிரமாண்டமாய் காணப்படும் விவேகானந்தர் இல்லத்தின், 1880ம் ஆண்டு தோற்றம்.


அப்போது, சென்னையில் இருந்த வெளிநாட்டவரின், ஐஸ் தேவைக்காக, பிரடெரிக் தியோடர் என்பவர் கட்டிய கட்டடம் இது. அதனால், இது ஐஸ் அவுஸ் என அழைக்கப்பட்டது. இன்றும் அந்த பெயர் தான் நின்று நிலவுகிறது.


பின்னாளில், இந்த கட்டடத்தை, பிலிகிரி அய்யங்கார் வாங்கி, விதவைகள் மற்றும் ஏழைக் குழந்தைகளுக்கான கருணை இல்லமாக்கினார்.


கடந்த, 1897ம் ஆண்டு, சென்னை வந்த, சுவாமி விவேகானந்தர் இந்த கட்டடத்தில், ஒன்பது நாட்கள் தங்கியிருந்தார். அப்போது இந்த பகுதியில் ஆள் நடமாட்டமே இருக்காதாம். உணவு வாங்கித் தரக்கூட ஆள் இல்லாமல், விவேகானந்தர், பல நாட்கள் பட்டினி இருந்திருக்கிறார்.


தற்போது, ராமகிருஷ்ண மடம், இந்த கட்டடத்தை, விவேகானந்தர் இல்லமாக ஆக்கி பராமரித்து வருகிறது. கட்டடம் தொடர்பான, பழைய புகைப்படங்களையும், அங்கு வைத்துள்ளனர். சென்னையின் ஒரு பகுதியை, அங்கு நாம் காணலாம்.


- எல்.முருகராஜ்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X