மீண்டும் தூசு தட்டப்படும் கொலை வழக்கு

Added : ஆக 19, 2014
Share
Advertisement
"பின்னலாடை தொழில் துறையை சேர்ந்த, "தாய்' சங்கத்துக்கு புதுசா கட்டடம் கட்டிக்கிட்டு இருக்காங்க. இதுக்காக, ஒரு கோடி ரூபாய் நிதி வசூலிக்க இலக்கு நிர்ணயிச்சிருக்காங்க,'' என்றபடி, விவாதத்தை துவக்கினாள், சித்ரா."என்னக்கா, தாய் சங்கம், கோடி, வசூல்னு சொல்ற, கொஞ்சம்புரியும்படி, சொல்லேன்,'' என, மசாலா தடவி, வறுத்தெடுத்த முந்திரி தட்டை நீட்டியபடி, விஷயத்தை துருவினாள்
மீண்டும் தூசு தட்டப்படும் கொலை வழக்கு

"பின்னலாடை தொழில் துறையை சேர்ந்த, "தாய்' சங்கத்துக்கு புதுசா கட்டடம் கட்டிக்கிட்டு இருக்காங்க. இதுக்காக, ஒரு கோடி ரூபாய் நிதி வசூலிக்க இலக்கு நிர்ணயிச்சிருக்காங்க,'' என்றபடி, விவாதத்தை துவக்கினாள், சித்ரா.
"என்னக்கா, தாய் சங்கம், கோடி, வசூல்னு சொல்ற, கொஞ்சம்புரியும்படி, சொல்லேன்,'' என, மசாலா தடவி, வறுத்தெடுத்த முந்திரி தட்டை நீட்டியபடி, விஷயத்தை துருவினாள் மித்ரா.
முந்திரி பருப்பை வாங்கிக்கொண்ட சித்ரா, "திருப்பூர்ல பனியன் உற்பத்தி செய்றவங்க எல்லோரும் ஒண்ணா சேர்ந்து, 1956ல் ஒரு சங்கத்தை உருவாக்குனாங்க; முதன்முதலா உருவான சங்கம் என்பதால், அதுக்கு, "தாய் சங்கம்'னு புனைபெயரும் உண்டு. இன்னைக்கு, "எக்ஸ்போர்ட்', "ஜாப் ஒர்க்'குனு தனித்தனியா நிறைய சங்கம் இருக்கு. இந்த சங்கங்கள்ல இருக்கறவங்க எல்லாருமே, ஒரு காலத்துல "தாய்' சங்கத்துல இருந்தவங்கதான். இந்த சங்கத்துக்கு, புது கட்டடம் கட்ட முடிவு செஞ்சாங்க. கட்டடம் கட்டுறதுக்காக, மொத்தம் ரூ.1 கோடி வசூலிக்க இலக்கு. அதேநேரம், ஒவ்வொரு மெம்பரும் விருப்பப்பட்ட அளவு பணம் தரலாம்னு அறிவிச்சாங்க. உறுப்பினரெல்லாம், தங்களால இயன்ற வரை பணம் கொடுத்துட்டு இருக்காங்க. கட்டடம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது; இதுவரை, 70 லகரம் வரை வசூலாயிருக்கு,'' என, விவரித்த சித்ரா, "புது கட்டடத்துல, ஒன்றரை அடி உயரத்துல, முன்னாள் தலைவரின் வெண்கல சிலையும் வைக்கப்போறாங்க; கும்பகோணத்துல சிலை ரெடியாகிட்டு இருக்கு. ரெண்டு மாசத்துல, திறப்பு விழா பண்ணலாம்னு, முடிவு செஞ்சுருக்காங்க. இந்த சங்கம் சார்பில் 2015 இறுதியில வைர விழா நடத்த திட்டமிட்டிருக்காங்க,'' என, ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.
"அக்கா, வாங்க, பேசிக்கொண்டே மார்க்கெட்டுக்கு போயிட்டு வரலாம்; வீட்டுல காய்கறி காலியாயிருச்சு,'' என, மித்ரா அழைக்க, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா. 10 நிமிடத்தில், இருவரும் மார்க்கெட்டை வந்தடைந்தனர்.
பார்க்கிங்' பகுதியில், வாகனத்தை நிறுத்தி, "லாக்' செய்த சித்ரா, ஒருமுறைக்கு இருமுறை "லாக்'கை சரி பார்த்தாள். அதைப்பார்த்த மித்ரா,
"ஏன், "லாக்' சரியா போடலையா,'' என கேட்டாள்.
"லாக் சரியாத்தான் இருக்கு. சிட்டியில், டூவீலர் திருட்டு அதிகமாயிடுச்சு. நம்ம வண்டியை நாமதானே பத்திரமா பார்த்துக்கணும்,'' என்றாள் சித்ரா.
"ஆமாம். நீ சொல்றதும் சரிதான். பத்திரமா பூட்டி நிறுத்தினாலும், பட்டப்பகலா இருந்தாலும், தள்ளிட்டு போயிடுறாங்க. போன வாரம், குமரன் ரோட்டுல காலையில 11.00 மணிக்கு ஒரு பைக் திருடுபோயிடுச்சு. பைக் உரிமையாளர், அதைப்பத்தி, போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துருக்காரு. அங்கிருந்த எஸ்.ஐ., ஒருத்தரு, ஏம்ப்பா... வண்டியை பத்திரமா நிறுத்த மாட்டீயா. இப்படி தொலைச்சுட்டு வந்து, எங்க உயிரை வாங்குற. என் பைக்கும் உன்னது போலத்தான். எத்தன வருஷமா வெச்சுருக்கேன். எவனாவது திருட முடிஞ்சதான்னு வெறுப்பேத்தியிருக்காரு. ரெண்டு, மூணு நாள் இழுத்தடிச்சு, புகாரை வாங்கிக்கிட்டாங்க,''
என்றாள் மித்ரா.
"டூவீலர் திருட்டுனாலே கண்டுபிடிக்கிறது சிரமமா இருக்கு. அதனால, கண்டுபிடிக்க முடியாத கேஸ் கணக்கு எதுக்கு அதிகமாகுதுன்னு போலீஸ்காரங்க யோசிக்கிறாங்க,'' என, இழுத்தடிக்கிறதுக்கு காரணத்தை விளக்கினாள் சித்ரா.
"கண்டுபிடிக்க முடியாத கேசுன்னு சொன்னதும், இன்னொரு வழக்கு ஞாபகத்துக்கு வருது. அ.தி.மு.க., கவுன்சிலர் "காட்டன்' முத்து கொலை நடந்து ரெண்டு வருஷமாகப் போகுது. புதுசா வந்துருக்கும் போலீஸ் கமிஷனர், அதைப்பத்தி கேள்விப்பட்டு, பழைய பைல்களை வாங்கி படிச்சு பார்த்துருக்காரு. ஒருநாள், "காட்டன்' முத்து வீட்டுக்குப்போய், "என்கொயரி' செஞ்சுருக்கார். உடலை அடக்கம் செஞ்ச மயானத்துக்கும் போய் பார்த்திருக்கார். அந்த வழக்கை மறுபடியும் போலீஸ் கையில் எடுத்துருக்கு. எனக்கு என்னமோ, இந்த வழக்குல பெரிய புள்ளி சிக்கியிருப்பாருன்னு நெனைக்கிறேன். ஏன்னா... ஆளுங்கட்சி கவுன்சிலர் கொலை வழக்கா இருந்தாலும், முழுசா விசாரிக்காம, வழக்கை கையில் எடுத்ததும், மூடிடுறாங்களே,'' என, சந்தேகத்தை கிளப்பினாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X