பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை- கன்னியாகுமரி இரட்டை ரயில்பாதை : அமைச்சருடன் அதிகாரிகள் ஆலோசனை

Added : ஆக 20, 2014 | கருத்துகள் (2)
Share
Advertisement

நாகர்கோவில் : மதுரை - கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை அமைப்பது தொடர்பாக நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுடன், தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆலோசனை நடத்தினார்.
தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ்மிஸ்ரா நாகர்கோவிலில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோனை நடத்தினார். அப்போது தமிழக ரயில்வே வளர்ச்சி திட்டங்கள், குமரி மாவட்டத்தில் செய்ய வேண்டிய ரயில்வே பணிகள் உள்ளிட்டவை பற்றி முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் இரண்டு கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும், நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் எக்சலேட்டர் பணிகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழத்துக்கு தேவையான பல முக்கிய ரயில் திட்டங்கள் தொடர்பாக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ்மிஸ்ராவிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தை டெர்மினல் ரயில் நிலையமாக தரம் உயர்த்துவது, கன்னியா குமரி- மதுரை இடையே இரட்டை ரயில் பாதை அமைப்பது பற்றி முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. கன்னியாகுமரி ரயில் நிலையம் ஏற்கெனவே டெர்மினல் ரயில் நிலையமாக மாற்றப்பட்டு விட்டது. இங்கு செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. திருவனந்தபுரம் கோட்டத்துடன் இருக்கும் கன்னியாகுமரியை மதுரை கோட்டத்துடன் இணைப்பது பற்றி தற்போது எதுவும் ஆலோசிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ்மிஸ்ரா கூறுகையில் மதுரை- கன்னியாகுமரி இரட்டை ரயில்பாதை ஆய்வுகள் முடிக்கப்பட்டு ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாகவும், நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sutha - Chennai,இந்தியா
20-ஆக-201406:17:09 IST Report Abuse
Sutha இரட்டை பாதையின் மூலமாக பயண நேரத்தை குறைக்கவும்,ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்து நெரிசல் குறைந்த பயணத்தையும் மேற்கொள்ள முடியும் என்று நம்பலாம்.
Rate this:
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
20-ஆக-201406:00:56 IST Report Abuse
Loganathan மற்ற எம் பி க்களும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X