இருப்பது ஏதோ இருக்கிறது... வருவதாவது வாய்க்குமா? தரமான விரிவான 'ரிங் ரோடு' வேண்டும்

Added : ஆக 20, 2014 | |
Advertisement
மதுரை ரிங் ரோடு பராமரிப்பு படுமோசமாக இருக்கும் நிலையில் தொடங்க உள்ள அதன் விரிவாக்க பணியாவது வாகன ஓட்டிகளின் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக இருக்க வேண்டும்.இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் மதுரையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக நகரைச் சுற்றி 27.2 கி.மீ.,க்கு ரூ.47.35 கோடியில் ரிங் ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.47.35 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு

மதுரை ரிங் ரோடு பராமரிப்பு படுமோசமாக இருக்கும் நிலையில் தொடங்க உள்ள அதன் விரிவாக்க பணியாவது வாகன ஓட்டிகளின் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக இருக்க வேண்டும்.

இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கும் மதுரையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக நகரைச் சுற்றி 27.2 கி.மீ.,க்கு ரூ.47.35 கோடியில் ரிங் ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.47.35 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ரூ.14 கோடி அரசுமானியமும், தமிழ்நாடு நகர் மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.33.35கோடி கடன் பெற்று திட்டம் நிறைவேற்றப்பட்டது.திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது என்னவோ வட்ட வடிவில். பணி நடந்ததோ அரை வட்ட வடிவில். சோழவந்தான் வரை ரிங் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டும் இதுவரை பணி நடைபெறவில்லை.


நடந்த பணிக்கு பெற்ற கடன் தொகையை 6 மாதத்திற்கு ஒரு முறை வீதம் 15 ஆண்டுகளில் திருப்பிச்செலுத்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. சுங்க வசூல் மூலம் கடனை செலுத்த மாநகராட்சிக்கு அனுமதியளிக்கப்பட்டது.


கடன் எவ்வளவு?: ரிங்ரோடு பணிக்காக வெளிச்சந்தையிலிருந்து பெற்ற கடன் பத்திரங்களின் மதிப்பு ரூ.29 கோடி. செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.17கோடியே 77 லட்சத்து 80 ஆயிரத்து 870. அதற்கான வட்டி ரூ.7 கோடியே 84லட்சத்து 23 ஆயிரத்து 46.ரிங் ரோடு வசூலை முறையாக செலுத்தியிருந்தால் இந்நேரம் கடனை அடைத்து ரிங் ரோடு மேல் மேம்பாலமே அமைத்திருக்கலாம். ஆனால் ஆளாளுக்கு போட்டி போட்டு ரிங் ரோடு வசூலை சூறையாடியதால் இன்னும் மாநகராட்சி கடனை செலுத்தாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் கொஞ்சமல்ல ரூ.25 கோடியே 62லட்சத்து 8 ஆயிரத்து 916.


2015 அக்.,31 உடன் மாநகராட்சியின் ரிங் ரோடு வசூல் உரிமம்நிறைவு பெறுகிறது. ஆனாலும் அதை விட்டுத்தர மாநகராட்சிக்கு மனமில்லை. கடனை காரணம் காட்டி தங்களுக்கு வசூல் செய்யும் உரிமையை நீட்டிப்பு செய்யுமாறு கடிதங்கள் பறந்து கொண்டிருந்த வேளையில் அரசு தரப்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியானது. ரிங் ரோட்டை விரிவாக்கம் செய்யவிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு ஆய்வுகளும் நடந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை மூலம் இப்பணி நடைபெற இருப்பதாக தெரிகிறது. விரிவாக்கம் அவசியமானது தான்.


அதே நேரத்தில் தற்போது அமைந்துள்ள ரோட்டின் தரத்தையும் ஆய்வு செய்து அதற்கேற்ப மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. ஆண்டு தோறும் ரிங் ரோடு பராமரிப்பு பணி நடப்பதாக ஆவணங்களில் கூறப்படுகிறது. ஆனால் ரோட்டின் லட்சணத்தை பார்த்தால் பராமரிப்புக்கும் அதற்கும் தொடர்பில்லை.அவ்வப்போது வி.ஐ.பி.,கள் வருவதால் மதுரையை ஒட்டிய ரோட்டில் மட்டும் மராமத்து செய்து வைத்துள்ளனர். புளியமரம் ஸ்டாப், சம்பக்குளம் பகுதியை நெருங்கிவிட்டால் அங்குள்ள பள்ளங்களால் வாகனங்கள் நொறுங்கிவிடுகின்றன. 'கேப்' இல்லாமல் வசூல் செய்யும் 'டோல் கேட்' இருக்கிறது. அதே அளவிற்கு 'கேப்' இல்லாமல் சேதமும் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்கட்டும்; இருக்கும் ரோட்டை விரிவாக்கம் செய்வது சரி, ஏற்கனவே பாதியில் நிற்கும் ரோட்டை முழுமை செய்வது எப்போது?


பராமரிக்க வசதி இல்லை: திட்டத்தை நிறைவு செய்யாமல் விரிவாக்கம் செய்வதில் என்ன பயனிருக்கும்? ஏற்கனவே மாநகராட்சியில் பணியாளர் பற்றாக்குறை. இதில் ரிங் ரோட்டிற்காக சிலரை நியமித்து இருக்கும் பணியை இழுத்துப் போடுகின்றனர்.ரோட்டை பராமரிக்கும் அளவிற்கு போதிய ஆட்கள், இயந்திரங்கள் வசதி இல்லை. அப்படியிருக்கும் போது உரிய துறையினரிடம் அதை ஒப்படைப்பது தான் சரியானது.அந்த வகையில் விரிவாக்கத்திற்கு பின் நெடுஞ்சாலைத்துறையே ரிங் ரோடு பராமரிப்பை ஏற்க அரசு வழிவகை வேண்டும்.இனி வரக்கூடிய ரோடாவது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் படி ஆராய்ந்து புதிய ரிங் ரோடு அமைய நடவடிக்கை வேண்டும்.


கட்டணம் உயர்கிறது; திட்டம் நிறைவேறவில்லை : ரிங் ரோடு திட்டத்தை முழுமைபடுத்த இதுவரை முயற்சி எடுத்தார்களோ இல்லையோ, ஆண்டுக்கு தோறும் சுங்க வசூல் கட்டணத்தை உயர்த்த தவறியதில்லை.


* 2011 ஆக.,29ல்நடந்த மாநகராட்சி கூட்டத்தில் 2011நவ.,1 முதல் 2012 அக்.,31வரை 8 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.


* 2012 அக்.,31ல் நடந்த கூட்டத்தில் 2012 நவ., 1 முதல் 2013 அக்.,31வரை மீண்டும் 8 சதவீதம் உயர்த்தினர்.


* 2013 ஜூலை 26ல் நடந்த கூட்டத்தில் 2013 நவ.,1 முதல் 2014 அக்.,31 வரை மீண்டும் 8 சதவீதம் உயர்த்தப்பட்டது.


வசூல் ஓஹோ...: ரிங் ரோடு திட்டத்திற்கு ரூ.47.35 கோடி கடன் பெற்றார்கள் என்றால் இதுவரை வசூலானது எவ்வளவு தெரியுமா? 2001மார்ச் 31 முதல் 2014 ஜன.,4 வரை வசூலானது ரூ.114 கோடியே 27 லட்சத்து 78 ஆயிரத்து 775 ரூபாய் 80 காசு. ஆனாலும் கடன் அடைக்கப்படவில்லை. சரி பராமரிப்பிற்கு செலவழித்திருக்கிறார்களா என்றால் ரோட்டில் பயணிக்கும் போது அதுவும் பொய்யாகிறது. அப்படியானால் வசூல் செய்தது எங்கு தான் போனது? போகிறது?பள்ளி வளாகத்தில் ஆபத்தான மின் இணைப்பு

'பாலவேடு கிராமத்தில், பள்ளி வளாகத்தின் நடுவில் செல்லும் மின் இணைப்பை, விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஆவடி, பட்டாபிராம் அடுத்த பாலவேடு கிராமத்தில், அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. அங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியின் மைய பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து, பள்ளி மைதானத்தின் இடையே, எதிர் திசையில் உள்ள மின் கம்பத்திற்கு செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக தொங்குகின்றன. பலத்த காற்றடித்தால், அவை அறுந்து விழும் அபாயம் நிலவுகிறது. உடற்கல்வி வகுப்பின் போது, மைதானத்தில் விளையாடும் மாணவ, மாணவியர் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகளிடம், பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டது.


பள்ளிக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், இணைப்பை மாற்றி அமைக்க கணிசமான தொகை செலவாகும் என கூறி, தாழ்வான மின் இணைப்பை சரி செய்யாமல் சென்று விட்டனர். மாணவர்களின் நலன் கருதி, தாழ்வாக தொங்கும் மின் இணைப்பை சரி செய்ய, மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அபாய நிலையில் பள்ளிக்கட்டடம்

: பொள்ளாச்சியில், 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பள்ளியின் கட்டடம் போதிய பராமரிப்பின்றி, மேற்கூரைகள் எந்நேரமும் கீழே விழக்கூடிய அவல நிலையில் உள்ளது. இதனால், மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.


பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த 1859ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக துவங்கப்பட்டது; பின், 1922ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகவும்; 1978ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.இப்பள்ளியில், தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், போதிய வசதிகள் இல்லாததால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


பராமரிக்கப்படாத கட்டடம்: நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டடங்கள் கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளன. கட்டடம் கட்டப்பட்டு, 150 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், போதிய பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இக்கட்டங்கள் போதிய பராமரிப்பின்றி விரிசல்கள் விடப்பட்டு சிதிலமடைந்து காணப்படுகின்றன. மேலும், மேற்கூரைகள் பெயர்ந்து மழை நீர் வகுப்பறைக்குள் குளம் போல தேங்கி வரும் அவல நிலை நீடிக்கிறது.


மழைக்காலங்களில், வகுப்பறையில், மழை நீர் விழாத இடத்தில், மாணவர்கள் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வகுப்பறை முன் வளாகப்பகுதியில் உள்ள மேற்கூரைகளும் விரிசல் விழுந்ததால், எப்போது வேண்டுமென்றாலும் விழக்கூடிய அவல நிலை காணப்படுகிறது. இது தவிர, பள்ளியின் தடுப்புச்சுவர்களில், செடிகள் வேருடன் வளர்ந்து கட்டடத்தை பதம் பார்த்து வருகின்றன. இதனால், மாணவர்கள் உயிர் பயத்துடன் தினமும் பள்ளிக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.


பராமரிக்கப்படுமா: பள்ளி கட்டப்பட்டு, பல ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால், இவை பராமரிக்கப்பட வேண்டும். விபத்துகள் நடைபெறுவதற்கு முன், கட்டடங்கள் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.புழுக்கள் கலந்த குடிநீரால் மாணவர்கள் பாதிப்பு:

புழுக்கள் கலந்த குடிநீரை பருகியதால், பெரியார் பல்கலை, மேட்டூர் அரசு கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து, நேற்று, சுகாதாரதுறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.


மேட்டூர் நகராட்சி, நான்கு ரோடு அருகே, பெரியார் பல்கலை, கலை அறிவியல் கல்லூரி உள்ளது. கல்லூரியில், 1,270 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கல்லூரிக்கு, மேட்டூர் நகராட்சி சார்பில், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனினும், கல்லூரியில், மேல்நிலை குடிநீர் தொட்டி கிடையாது என்பதால், வளாகத்தில் உள்ள ஒரு குழாயில், நேரடியாக வரும் குடிநீரை, மாணவர்கள் குடிக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்பு, குடிநீரில், புழுக்கள் கலந்து வருவதாக, கல்லூரி மாணவர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், சுகாதாரமற்ற குடிநீரை பருகியதால், மாணவர்கள் பலர் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோயால் பாதித்ததாக தெரிகிறது. பாதிப்பு குறித்து மாணவர்கள், கல்லூரி முதல்வர் வைத்தியலிங்கத்திடம், புகார் செய்தனர். முதல்வர், மேட்டூர் நகராட்சி மற்றும் சேலம் கலெக்டரிடம் புகார் செய்ததாக தெரிகிறது. அதனை தொடர்ந்து, சேலம் சுகாதாரத்துறை அதிகாரி உத்தரவுபடி, சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், சிவக்குமார் உள்பட சுகாதார அலுவலர்கள், நேற்று மாலை, கல்லூரியில், ஆய்வு மேற்கொண்டனர். கல்லூரி குடிநீர் குழாயை சோதனை செய்த அலுவலர்கள், குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இன்று (ஆக., 20), சேலத்தில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர், மேட்டூர் அரசு கல்லூரிக்கு ஆய்வுக்கு வர இருப்பதாக தெரிகிறது. பெரியார் பல்கலை, மேட்டூர் கல்லூரி முதல்வர் வைத்தியலிங்கத்திடம் கேட்டபோது, ""குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதாக மாணவர்கள் கூறிய புகாரை, மேட்டூர் நகராட்சிக்கு தெரிவித்த நிலையில், சுகாதார துறை அலுவலர்கள் கல்லூரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நகராட்சி வினியோகம் செய்யும் குடிநீரை பருக வேண்டாம் என எச்சரித்துள்ளனர்,'' என்றார்.இடியும் நிலையில் தொகுப்பு வீடுகள்:

மடத்துக்குளம் அருகே, இடியும் நிலையில் தொகுப்பு வீடுகள் உள்ளதால், வசிப்போரை இட மாற்றம் செய்ய வேண்டும் என, பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மடத்துக்குளம் அருகே கணியூர் ராமபட்டிணம் (ஆஸ்பத்திரிமேடு) பகுதியில், 1985-86ம் ஆண்டு, எம்.ஜி.ஆர்., ஆட்சியில், 33 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. 30 ஆண்டுகளான நிலையில், அந்த வீடுகள் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன.


இந்த வீடுகளில் வசிப்போர் கூறியதாவது: இங்குள்ள அனைவரும் கூலி வேலைக்கு செல்கிறோம். அதில் கிடைக்கும் வருவாய், தினசரி செலவுக்கே போதுமானதாக இல்லை. புதுப்பிக்கவோ அல்லது பராமரிக்கும் அளவுக்கோ வசதி இல்லை. வீடுகள் உறுதி இழந்து வருகின்றன. கடந்த மே மாதம், மேற்கூரை இடிந்து ஒரு வீடு விழுந்ததில், அதில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மழைக்காலங்களில் வீட்டின் மேற்கூரை தாக்குப் பிடித்து நிற்பது கடினம். எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் வசிப்போரை, அப்புறப்படுத்த வேண்டும். இதர வீடுகளில் உள்ளோரை, வேறு இடத்தில் தங்க வைக்க வேண்டும். ஆபத்து நேரிடும் முன், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X