நீதிபதிகள் நியமன மசோதா எதிர்ப்பு மனு; சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்பு

Added : ஆக 21, 2014 | கருத்துகள் (9)
Advertisement
நீதிபதிகள் நியமன மசோதா எதிர்ப்பு மனு;  சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்பு

புதுடில்லி: நீதித்துறையில் நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும், இது தொடர்பான அதிகாரம் ஒரே நபரிடம் இருக்க கூடாது என்பதற்காகவும் பா.ஜ., அரசு இது தொடர்பான சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதா லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. லஞ்ச, ஊழல் புகார் நீதிபதிகள் மீது வந்ததை அடுத்தும், நியாமானவர்கள் நீதிபதியா வர வேண்டும் என்ற காரணத்திற்காகவும், மத்திய அரசு இந்த புதிய திருத்தத்தை கொண்டு வந்தது.

கொலிஜியம் என்ற அமைப்பை கலைத்து, புதிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கென தேசிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, சட்ட அமைச்சர், மற்றும் திறம் படைத்த வல்லுனர்கள் 2 பேர் என 6 பேர் அடங்குவர்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 121 ல் மாற்றம் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தம் அரசியல் சட்டத்திற்கு முரணானது. இதனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு கோர்ட் ஏற்று கொண்டது. இதன் மீதான விசாரணை வரும் ஆக. 25 ம் தேதி நடக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


நீதித்துறையை வலுப்படுத்தவும், நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படை தன்மை ஏற்படவும் இந்த மாற்றம் கொண்டு வந்துள்ளதாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராஜ்யசபாவில் தெரிவித்திருந்தார்.


266 நீதிபதிகள் உடனடியாக நியமனம் : புதிய சட்டதிருத்த மசோதா உருப்பெற உள்ளதால், சுப்ரீம் கோர்ட், ஐ கோர்ட் நீதிபதிகள் நியமனத்தை நிறுத்தி வைக்க கேட்டு கொள்ளப்படும். 21 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த இந்த நடைமுறை அதிகாரம் இனி தேசிய கமிஷனுக்கு போகும். 24 ஐகோர்ட்டுகளில் காலியாக கிடக்கும் 266 நீதிபதிகள் உடனடியாக நியமிக்கப்படுவர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh Menderkar - Chennai,இந்தியா
21-ஆக-201415:40:19 IST Report Abuse
Rajesh Menderkar நல்ல தீர்ப்பு
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-ஆக-201413:54:19 IST Report Abuse
Kasimani Baskaran மனுவின் நோக்கம் வழக்குகளை தேங்க வைக்க வேண்டும் என்பதா அல்லது பாராளுமன்றத்தை சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவா?
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
21-ஆக-201412:53:17 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. என்னது... எங்கள் "தல" மோடி அரசு கொண்டுவந்த இந்த சட்டதிருதங்களுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க போகிறதா? என்ன தைரியம்.. இன்னைக்கு நம்ம தொண்டர்கள்.. இந்த நீதிமன்றத்தின் அதிகாரத்தை பிய்த்து எறிவதோடு.. இந்த நீதிபதிகளையும் கடித்து குதற போகிறார்கள்.. அய்யய்யோ பாவம்.. யார் பெத்த பிள்ளைகளோ இந்த நீதிபதிகள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X