திருவண்ணாமலை: சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர், இலங்கை காதலியை தாலி கட்டி திருமணம் செய்தவுடன் பிரிந்து சென்ற சம்பவம் நெகிழ வைத்தது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தனிச்சிறப்பு முகாமில், இலங்கை தமிழர் கிருஷ்ணலிங்கம்,35, அடைக்கப்பட்டு உள்ளார். இவர், இலங்கையில் உள்ள அவரது மாமன் மகள் வசந்தமலர்,32, என்பவரை, காதலித்து வந்தார். அவரை, திருமணம் செய்ய அனுமதி கோரி, தமிழக அரசுக்கு மனு செய்தார். அரசு அனுமதியைத் தொடர்ந்து, வசந்தமலர் மற்றும் உறவினர்கள், இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில், சென்னை வந்தனர்.செய்யாறு முகாமில் இருந்து, நேற்று முன்தினம், கிருஷ்ணலிங்கத்தை, அருகே உள்ள முருகன் கோவிலுக்கு, போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அங்கு, வசந்தமலர் மணக்கோலத்தில் காத்திருந்தார். அங்கு, உறவினர்கள் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடந்தது . தொடர்ந்து, சார்பதிவாளர் அலுவலகத்தில், திருமணத்தை பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, ஒரு மணி நேரத்தில், கிருஷ்ணலிங்கம் மீண்டும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பின், மணமகள் மற்றும் உறவினர்கள் புறப்பட்டு சென்றனர். காதலில் வென்ற மகிழ்ச்சியில், தாலி கட்டிய உடன், கண்ணீர் மல்க, தம்பதி பிரிந்து சென்றது உருக்கமாக இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE