ஜார்க்கண்ட் மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி...ஆலோசனை : பெரும்பான்மை பலத்துடன் அரசை தேர்ந்தெடுக்க வலியுறுத்தல்

Updated : ஆக 23, 2014 | Added : ஆக 22, 2014 | கருத்துகள் (8)
Advertisement
Prime Minister Narendra Modi for the people of Jharkhand ... advice: choose the state with the majority's assertion

ராஞ்சி:''ஜார்க்கண்டில், இந்த ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில், பெரும்பான்மை பலத்துடன் அரசை தேர்ந்தெடுக்க வேண்டும். அரசுக்கு பெரும்பான்மை பலம் இருந்தால் மட்டுமே, வேகமாக முடிவுகளை எடுக்க முடியும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில், சில திட்டங்களை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:குஜராத் மாநிலத்தைப் போல, பல மடங்கு வளர்ச்சி காண்பதற்கான வளத்தை கொண்டுள்ளது ஜார்க்கண்ட். இருந்தாலும், சட்டசபை தேர்தல்களில், மக்கள் தெளிவான தீர்ப்புகளை வழங்காததால், இதுவரை இருந்த மாநில அரசுகளால், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் செயல்பட முடியவில்லை. மாநிலம் முன்னேற்றம் அடையவில்லை.
மத்தியில் பெரும்பான்மை பலத்துடன், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்துள்ளது. அதனால், ஒவ்வொரு விஷயத்திலும், நாங்கள் விரைவாக முடிவுகள் எடுக்கிறோம். பெரும்பான்மை பலம் இல்லையெனில், என்னால், விரைவாக செயல்பட முடியாது.ஜார்க்கண்ட் மாநிலம் உதயமாகி, 14 ஆண்டுகளாகி விட்டன. அதனால், வரும் சட்டசபை தேர்தலில், முழு பெரும்பான்மையுடன், ஒரு அரசை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான், நம் நாட்டில், ஜார்க்கண்ட் மாநிலம், தலை நிமிர்ந்து நிற்க முடியும்.
தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மக்களின் உள்ளங்கைக்கு அரசு நிர்வாகத்தை கொண்டு வர முடியும். அந்தப் பாதையில் செல்வதற்கான ஒரு நடவடிக்கையே, நேற்று முன்தினம், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
டில்லியிலோ அல்லது ராஞ்சியிலோ அரசு இருக்கக் கூடாது; மக்களின் உள்ளங்கையில் இருக்க வேண்டும். அதுவே, நம் கனவு. இதுபோன்ற தொழில்நுட்பம், பல நாடுகளில் உள்ளது. ஆனால், இந்தியா, இந்த விஷயத்தில் பின்தங்கி உள்ளது. எனவே, அந்த நிலைமையை உருவாக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு, நரேந்திர மோடி கூறினார்.
முதல்வர் ஹேமந்தை அவமதித்த கூட்டத்தினர்
l கடந்த, 16ம் தேதி சோலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடியுடன், மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவிராஜ் சவான் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில், சவான் பேசும் போது, மோடியின் பெயரை, கூட்டத்தில் பங்கேற்றவர்கள், தொடர்ந்து உச்சரித்து குழப்பம் ஏற்படுத்தியதால், தன் பேச்சை பாதியிலேயே முடித்துக் கொண்டு சவான் வெளியேறினார்.l அதனால், நாக்பூரில், பிரதமர் மோடி நேற்று பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றை, முதல்வர் சவான் புறக்கணித்தார்.l கடந்த செவ்வாயன்று, அரியானாவில், நெடுஞ்சாலை திட்ட துவக்க விழா ஒன்று நடைபெற்றது. இதில், பிரதமருடன், அம்மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவும் பங்கேற்றார். விழாவில், ஹூடா பேசும் போது, கூட்டத்தில் பங்கேற்றவர்கள், மோடியின் பெயரை உச்சரித்தும், அரியான காங்கிரஸ் அரசை விமர்சித்தும், கோஷங்கள் எழுப்பினர்.l இந்தப் பிரச்னையால் எரிச்சல் அடைந்த ஹூடா, 'இனி, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், கலந்து கொள்ளப் போவதில்லை' என, அறிவித்தார்.l அதேபோல், ராஞ்சியில், பிரதமர் மோடி நேற்று பங்கேற்ற நிகழ்ச்சியில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனும் கலந்து கொண்டார். அவர் பேசத் துவங்கிய போதும், கூட்டத்தில் இருந்தவர், 'மோடி, மோடி' என, கோஷமிட்டனர். அவர்களை அமைதி காக்கும்படி, பிரதமர் மோடி கைகாட்டியும், கேட்கவில்லை. சோரன் பேச்சை முடிக்கும் வரை, கோஷங்கள் தொடர்ந்தன.l ஜார்க்கண்டில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரான ஹேமந்த் சோரன், காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன் இணைந்து, கூட்டணி அரசை நடத்தி வருகிறார்.
திட்டமிட்டு அரங்கேற்றப்படும் சதி:''நாக்பூரில், பிரதமர் நரேந்திர மோடி, பங்கேற்ற நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவிராஜ் சவான் கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சி முதல்வர்களுக்கு எதிராக, திட்டமிட்ட சதிச் செயல்கள், மோடி பங்கேற்கும் கூட்டத்தில் நிறைவேற்றப்படுவதால், சவான் பங்கேற்காததில் தவறு எதுவும் இல்லை,'' என, அகில இந்திய காங்., பொதுச் செயலர் அம்பிகா சோனி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை, ஆதரவாளர்களை துாண்டி விட்டு, அவமானப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை. எனவே, பா.ஜ., அல்லாத முதல்வர்களை, அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை, பா.ஜ., தொண்டர்கள் கைவிட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொள்ள வேண்டும்.பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டங்களில், முதல்வர்கள் அவமரியாதையாக நடத்தப்படுவது, திட்டமிட்டு அரங்கேற்றப்படும் சதியாகும். 'மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில், இனி காங்கிரஸ் முதல்வர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது' என, எங்கள் கட்சி மேலிடம், உத்தரவு பிறப்பித்துள்ளதா என, எனக்குத் தெரியாது.
முதல்வர்கள் அவமானப்படுத்தப்படும் செயலை, ஒட்டு மொத்த காங்கிரசாரும் ஏற்க மாட்டார்கள். இந்த விஷயத்தில், முதல்வர்கள் என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு, காங்., தலைவர்கள் அனைவரும், முழு ஆதரவு தருவர்.மோடி பங்கேற்கும் கூட்டத்திற்கு, காங்கிரசார், 500 பேரை அனுப்பி, அவரை அவமரியாதை செய்வது ஒன்றும், பெரிய விஷயமல்ல. அப்படிச் செய்தால், பிரதமர் பதவிக்கு உரிய கவுரவம் பாதிக்கப்படும்.இவ்வாறு, அம்பிகா சோனி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-ஆக-201422:51:58 IST Report Abuse
Pugazh V // அரசுக்கு பெரும்பான்மை பலம் இருந்தால் மட்டுமே, வேகமாக முடிவுகளை எடுக்க முடியும்,'' // - ரொம்ப சரி - இவரது பெரும்பான்மை அரசு ரயில் கட்டணத்தை உயர்த்தியது, உர விலைகளை உயர்த்தியது, ரயில்வே முதல் ராணுவம் வரை தனியார் முதலாளிகளுக்கு கதவு திறந்தது, இன்ஷூரன்சிலும் தனியார் முதலாளிகளுக்கு அனுமதி வழங்கியது - எல்லாம் எத்தனை விரைவாக நடைமுறைப்படுத்தி இருக்கிறது. ஆனால், தமிழக மீனவர் பிரச்னை, காவிரி நீர் பங்கீடு பிரச்னை, மின் விநியோகப் பிரச்னைகளில் மட்டும் எந்த வேகமும் இருக்காது, ஏன் எனில் அது தமிழ்நாடு சார்ந்த அதாவது மோடி அடிமை கும்பல் சார்ந்த ப்ரச்னை எனவே மோடி கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வாய் மூடி இருந்தால் கூட அடிக்கிற ஜால்ராவில் கொஞ்சமும் குறைவிருக்காது. இந்த வலைப் பக்கக் கருத்துக்க்லைஅய் எபாருங்கள். காரணமே இன்றி காவடி தூக்கியிருக்கிறார்கள். பாகிஸ்தானை எச்சரிக்கிற மோடி, கொஞ்சமாவது இலங்கையை எச்சரிக்க முயல்வாரா? அதெல்லாம் கேட்கக் கூடாது. மோடி என்றதும் கண்ணை மூடிக் கொண்டு காவடி ஆட வேண்டும் என்பது தமிழர்கள் பலரின் தலைவிதி. ஜார்க்கண்ட் மாநிலத்தை வரை படத்தில் கூடப் பார்க்காதவர் எல்லாம் ஜார்கண்ட் முன்னேற பா ஜ க ஜெயிக்க வேண்டும் என்று எழுதுவது ஓவராக இருக்கிறதல்லவா?
Rate this:
Share this comment
rajangam ganesan - lalgudi,இந்தியா
24-ஆக-201414:20:20 IST Report Abuse
rajangam ganesanஉளுத்து போன திமுகவை நீ தலையில் தூக்கி ஆடும்போது நாங்கள் மோடியை காவடி தூக்கி ஆடுவதில் தப்பே இல்லை...
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
22-ஆக-201411:00:22 IST Report Abuse
P. SIV GOWRI ஜார்கண்டில் பிரதமரின் கனவு நனவாகும் . வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-ஆக-201422:53:37 IST Report Abuse
Pugazh V@ கௌரி - பிரதமரின் கனவு ஜார்கண்டில் இல்லை, அமெரிக்காவில் இருக்கிறது. எப்படியோ அடித்து பிடித்து விசா வாங்க தடையில்லை என்று ஆகிவிட்டது. சீக்கிரமே அமெரிக்க செல்லப் போகிறார்....
Rate this:
Share this comment
rajangam ganesan - lalgudi,இந்தியா
24-ஆக-201414:17:48 IST Report Abuse
rajangam ganesanமோடி அமெரிக்க செல்ல மட்டுமே பிரதமர் ஆனாரா ?? மஹா மட்டமான கருத்து...
Rate this:
Share this comment
Cancel
japaankaaran - Tokyo,ஜப்பான்
22-ஆக-201407:19:31 IST Report Abuse
japaankaaran காஷ்மீர், அருணாச்சல் பிரதேஷ் போன்ற மாநிலங்களை சீனா கேட்பதற்கு பதில், பீகார், ஜார்கண்ட், உத்தர் பிரதேஷ் போன்ற மாநிலங்களை கேட்கலாம். இந்த 3 மாநிலங்களால் இந்தியாவிற்கே கேவலம். முக்கால்வாசி கொலை மற்றும் கொள்ளை கும்பல்கள் இங்கேதான் உள்ளன. மொள்ளமாரி அரசியல் வாதிகளும் இங்கேதான். சாரி, நான் பபேர்ல படிச்சவெச்சி சொல்றேன். உண்மைலேயே இந்த மாநிலத்தவர்கள் நல்லவர்கள் என்றால் மன்னிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X