நீதிபதிகள் குழு நியமன முறை ரத்துக்கு எதிர்ப்பு:சுப்ரீம் கோர்ட்டில் 25-ல் விசாரணை

Updated : ஆக 22, 2014 | Added : ஆக 22, 2014 | கருத்துகள் (4)
Advertisement
The group is opposed to the appointment of judges Rath 
: Supreme Court hearing on the 25-in

புதுடில்லி:நீதிபதிகள் நியமனத்திற்கான, 'கொலீஜியம்' முறை (நீதிபதிகள் தேர்வுக்குழு) ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, வரும் 25ம் தேதி நடைபெறுகிறது.
ஆணையம் அமைப்பு:உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை தேர்வு செய்ய, தற்போது கொலீஜியம் என, அழைக்கப்படும், நீதிபதிகள் தேர்வுக்குழு உள்ளது. இந்த முறையை ரத்து செய்து விட்டு, நீதிபதிகள் நியமன ஆணையம் ஒன்றை அமைப்பதற்காக, 'தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணைய மசோதா - 2014'ம், அந்த ஆணையத்திற்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்க, 121வது அரசியல் சட்ட திருத்த மசோதாவும், சமீபத்தில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து, முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிஷ்வாஜித் பட்டாச்சார்யா உட்பட, நான்கு பேர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்ததாவது:தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணைய மசோதா, 2014 மற்றும் 121வது அரசியல் சட்ட திருத்த மசோதா ஆகியவை, அரசியல் சட்டத்திற்கு விரோதமானவை. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை மீறிய செயல்.நீதித்துறையும், நிர்வாகத்துறையும், தனித்தனியாக செயல்பட வேண்டும் என, அரசியல் சட்டத்தின், 50வது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பது, அரசியல் சட்டத்தின் ஒரு மாற்ற முடியாத அம்சமாகும். எனவே, நீதிபதிகள் நியமனத்திற்கான, கொலீஜியம் முறை ரத்து செய்யப்பட்டதை செல்லாது என, அறிவிக்க வேண்டும். புதிய மசோதாக்கள் நிறைவேற்றத்தையும் செல்லாது என, அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பரிசீலனை:இந்த மனுக்கள் நேற்று, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி லோடா தலைமையிலான அமர்வு முன், பரிசீலனைக்கு வந்தபோது, 'அவற்றை விரைவாக விசாரிக்க வேண்டும்' என, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, மனுக்கள் மீதான விசாரணை வரும், 25ம் தேதி நடைபெறும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
22-ஆக-201418:40:57 IST Report Abuse
Somiah M அரசியல் அமைப்பு சட்டம் என்பது மக்களின் நல்வாழ்விற்கும் பாதுகாப்பான வாழ்விற்கும் நமது தீர்க்க தரிசனம் மிகுந்த அரசியல் மற்றும் மக்கள் தலைவர்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடு .இது எத்தனையோ முறை தேவைக்கேற்ப புதுப்பிக்கப் பட்டுள்ளது .நீதிபதிகள் நியமன அமைப்பு விஷயத்திலும் அதுதான் நடந்துள்ளது .நீதித்துறை ஏதிலார் குற்றம் போல தன் குற்றத்தையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்....................நீதியும் வழங்கவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Nannisigamani Baskaran - Chennai,இந்தியா
22-ஆக-201410:30:47 IST Report Abuse
Nannisigamani Baskaran நம் நீதிமன்றங்களால் நீதியை வழங்க முடிய வில்லை ? அரசு அலுவலகங்கள் தான் ஊழலில் திளைக்கிறது என்றால் நீதி மன்றங்கள் இதை விட கேவலமாக இருக்கிறது ? வழக்கு கொடுக்க லஞ்சம், விசாரணைக்கு எடுத்து கொள்ள லஞ்சம், எத்தனை வாயுதா கொடுத்து வழக்கு போட்டவனை நோகடிக்கலாம் என்பதற்கு லஞ்சம் கடைசியாக தீர்ப்பு எப்படி சொல்லாம் அதற்கும் லஞ்சம் ? நீதிமன்ற நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும், மோடி பிரதமர் ஆனா பிறகுதான் அதற்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறார் ? அதற்கு முட்டு கட்டை போட்டு விடாதீர்கள் ?
Rate this:
Share this comment
Cancel
pazhani - KL,மலேஷியா
22-ஆக-201407:03:05 IST Report Abuse
pazhani நீதிபதிகள் வழி முறைகளை அரசு கட்டு படுத்த முடியாது, இல்லை என்றல் 68 வருடத்தில் எப்போவோ இந்திய நாடு வளர்ந்து இருக்கும். இப்படி குற்றம் அதிகரிக்க நீதி மன்றங்கள் வழி விட்டு இருக்காது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X