பா.ஜ., பார்லிமென்ட் போர்டில் வருகிறது மாற்றம்

Updated : ஆக 22, 2014 | Added : ஆக 22, 2014 | கருத்துகள் (6)
Advertisement
BJP Parliamentary Board is the change

புதிய நிர்வாகிகள் நியமனம் முடிந்துள்ள நிலையில், பா.ஜ.,வின் அதிகாரம் மிக்க அமைப்பான, பார்லிமென்ட்ரி போர்டு அமைப்பிலும் மாற்றம் செய்ய, கட்சித் தலைவர், அமித் ஷா தயாராகி வருகிறார். இதன் உறுப்பினர்களின் அதிகபட்ச வயதை, 75 ஆக நிர்ணயித்து, மூத்த தலைவர்கள் மூன்று பேருக்கு, இதிலிருந்து விடை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜ்நாத் சிங்கிற்கு பதிலாக, பா.ஜ.,வின் புதிய தலைவராக, அமித் ஷா சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அந்த கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.கடந்த வாரம் வெளியான, புதிய நிர்வாகிகள் பட்டியலின் படி, 11 பேர் துணைத் தலைவர்களாகவும், எட்டு பேர் பொதுச் செயலர்களாகவும், நான்கு பேர் இணைச் செயலர்களாகவும், 14 பேர் செயலர்களாகவும், 10 பேர் செய்தி தொடர்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர்; இவர்களில், 60 சதவீதம் பேர், 50 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள்.
இந்நிலையில், அடுத்த கட்ட அதிரடிக்கு, அமித் ஷா தயாராகி வருகிறார். பா.ஜ.,வில் அதிகாரம் மிக்க அமைப்பு, பார்லிமென்ட்ரி போர்டு தான். மிக முக்கிய முடிவுகளை, இந்த குழு தான் எடுக்கும். இந்த குழுவின் வார்த்தை தான் இறுதி தீர்ப்பு.பா.ஜ., விதிகளின் படி, பார்லிமென்ட்ரி போர்டை, அக்கட்சியின் தேசிய செயற்குழு தான், நியமனம் செய்யும். அதில், ஒரு தலைவரும், 10 உறுப்பினர்களும் இருப்பர். கட்சித் தலைவர் தான், இந்த போர்டின் தலைவராக இருப்பார்.
ராஜ்நாத் சிங் காலத்தில், அவர் தலைவராகவும், உறுப்பினர்களாக வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி, முரளிமனோகர் ஜோஷி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, வெங்கையா நாயுடு, தாவர் சந்திர கெலாட், அனந்தகுமார் ஆகியோரும் இருந்தனர்.இந்த குழு கூடும்போதெல்லாம், அமைப்புச் செயலர் ராம்லால், சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவது வழக்கமாக இருந்தது.
தற்போதைய போர்டில், பா.ஜ.,வின் முன்னாள் தலைவர்கள் ஐந்து பேர் இடம்பெற்றுள்ளனர். இதன் உறுப்பினர்களின் வயது உச்சவரம்பு, 75 ஆக நிர்ணயிக்கப்பட உள்ளது.அப்படியெனில், வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகிய மூன்று பேரும், பா.ஜ., பார்லிமென்ட் போர்டில் இருந்து விடுவிக்கப்படுவர். பொதுச்செயலர் என்ற வகையில், அனந்தகுமார், உறுப்பினர் பதவியில் இருந்தார். இப்போது அவர், பொதுச்செயலர் இல்லை என்பதால், அவரும் விடுவிக்கப்படலாம்.மிக முக்கியமான இந்த போர்டில், பா.ஜ., மாநிலங்களின் முதல்வர்களையும் உறுப்பினர்களாக ஆக்கலாமா என்ற யோசனையும் தீவிரம் பெற்றுள்ளது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Gomathinayagam - chennai,இந்தியா
22-ஆக-201413:59:16 IST Report Abuse
A.Gomathinayagam அரசியல்வாதிகளுக்கு ஓய்வு பெரும் வயது 75 என முடிவு செய்ததை வரவேற்கலாம்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
22-ஆக-201413:30:00 IST Report Abuse
K.Sugavanam ஆகா மூத்தோரை போற்றி பாதுகாக்காமல் இப்படி முதியோர் இல்லம் நோக்கி துறத்தலாமா? இதுதான் இந்திய கலாச்சாரமா? நாளைக்கு இவங்களும் 75 தாண்டினால் கதை கந்தல் ஆயிடும்..
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
22-ஆக-201412:10:04 IST Report Abuse
ganapati sb மாநில முதலவர்களை கொண்டு வருவது நல்ல யோசனை அவர்கள் தான் பிரச்சனைகளை சந்தித்து வளர்ச்சியை முன்னெடுக்கும் பொறுப்பில் இருக்கிறவர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X