பூரண மதுவிலக்கை அமல்படுத்த கேரள அரசு முடிவு: முதல்வர் சாண்டி அறிவிப்பு

Added : ஆக 22, 2014 | கருத்துகள் (113)
Share
Advertisement
 பூரண மதுவிலக்கை அமல்படுத்த கேரள அரசு முடிவு: முதல்வர் சாண்டி அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் .இதனை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்திட முடிவு செய்திருப்பதாகவும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் காங்.தலைமையில் ஐக்கிய ஜனநாய முன்னணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக காங். கட்சியைச் சேர்ந்த உம்மன்சாண்டி உள்ளார். இம்மாநிலத்தில் லைசென்ஸ் பெற்ற மதுக்கடை பார்கள் மற்றும் மதுபான விடுதிகள் உள்ளன. தவிர 3 ஸ்டார், 4 ஸ்டார், மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கும் பார் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திட உம்மன்சாண்டி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக விவாதிப்பதற்காக கூட்டணி கட்சிகளின் உயர்மட்டக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் புதிய மது கொள்கையை அமல்படுத்திட முடிவு செய்யப்பட்டது.

2015- ஏப்ரல் முதல் அமல்

அதன்படிமுதல்கட்டமாக 3 ஸ்டார் மற்றும் 4 ஸ்டார் ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ்கள் ரத்து செய்யப்படும், இதன் மூலம் மாநிலத்தில் 730 பார்கள் இழுத்து மூடிவிடவும், 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கு மட்டும் லைசென்ஸ்கள் வழங்கிடவும், இவற்றில் 312 பார்களுக்கான லைசென்ஸ் காலம் மார்ச் 31 ,2015-ம் ஆண்டு முடிவடைகிறது. இவற்றின் லைசென்ஸ்களை மேலும் புதுப்பிக்க தடை விதித்திடவும், இத்திட்டம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்திடவும், அடுத்த 5ஆண்டுகளில் மதுபானவிடுதிகளை மூடிடவும், படிப்படியாக அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில், புதிய மதுகொள்கை மூலம் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மது பார்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சுயவேலைவாய்ப்பு மூலம் மாற்றுஏற்பாடு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu peruncode - peruncode,neyyor post,kanyakumari dt,இந்தியா
22-ஆக-201422:25:23 IST Report Abuse
muthu peruncode இது ஒரு நல்ல முயற்சியின் அடையாளம்.இந்த காலத்திற்கு இது சாத்தியமாகுமா? என்று யோசித்த வேளையில் கேரளா முதல்வரின் அறிவிப்பு ஒரு நம்பிக்கையை ஏற்படுதிள்ளது
Rate this:
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
22-ஆக-201422:18:10 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் @ C.S.R. Tirupur - தமிழர்களை ஒரேஅடியாக சிறுமை படுத்த வேண்டாம். அதிலும் மலையாளியை உயர்த்தி-தமிழனை தாழ்த்த வேண்டாம். உங்கள் ஆதங்கம் புரிகிறது. தமிழன் யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல.
Rate this:
Cancel
Manoharan Prushothaman - mayiladutharai,இந்தியா
22-ஆக-201420:11:38 IST Report Abuse
Manoharan Prushothaman ஒரு நல்ல துணிச்சலான முடிவு. குடிகாரனை டாக்டர்களே குடியை கொஞ்சம் கொஞ்சமாக தான் நிறுத்த சொல்கிறார்கள். மாநிலத்தில் செயல்படுத்தும்போது நிச்சயமாக நிதி சுமை ஏற்படும். தேர்தலை சந்திக்க எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும் கேரளா முதல்வர் உம்மன் சாண்டிக்கு பாராட்டுக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X