அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்: கருணாநிதி கண்டனம்

Updated : அக் 14, 2010 | Added : அக் 12, 2010 | கருத்துகள் (100)
Share
Advertisement

 

சென்னை : "டிரைவர்கள் எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்' என்ற விதிமுறையை எதிர்த்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் அறிவித்திருப்பதற்கு, முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை:ஒவ்வொரு நாளும் பகல் ஒரு மணி அளவில் உணவருந்த உட்காரும்போது தான், "டிவி'யில் நெஞ்சைக் உலுக்கும் நிகழ்வுகளும், செய்திகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து போகும். அவற்றைப் பார்க்கும்போது, உணவருந்தவே மனம் இடம் தராது.எத்தனையோ முறை உணவு பரிமாறப்பட்டிருக்கிற தட்டை, அப்படியே வைத்துவிட்டு, கை கழுவிவிட்டு, அடுத்த அலுவல்களுக்குச் சென்றிருக்கிறேன். ஒரு நாள் இரு நாள் அல்ல; ஏறத்தாழ ஒவ்வொரு நாளுமே உள்ளத்தைச் சுட்டெரிக்கும் அந்தக் காட்சிகள் வரத் தவறியதில்லை.வேன் கவிழ்ந்து, குடும்பத்தார் அனைவரும் பலி என்ற செய்தியும், பலியான குழந்தைகளைப் பதறித் துடித்தவாறும், கதறி அழுதவாறும் சுற்றத்தார் சூழ்ந்து, துக்கத்தை வெளிப்படுத்தும் துயர நிகழ்ச்சிகளும், அந்த நாள் முழுவதும் என் இதயத்தை அலைக்கழிக்கச் செய்யும்.திருமணம் முடிந்து வரும் வழியில், காரில் வந்த மணமக்கள், லாரியுடன் மோதிய விபத்தில், மாண்டு போயினர் என்ற செய்தி, என்னைச் செந்தீயாகச் சுட்ட நாட்கள் எத்தனையோ. இப்படி ஒவ்வொரு நாளும் உள்ளத்தை உலுக்கும் விபத்துகள், நெஞ்சைப் பிழியும் கோரச் சாவுகள், பச்சிளம் குழந்தைகளின் பிணக் குவியல்கள். இந்த விபத்துகள் குறைய வழியே இல்லையா என ஏற்பட்ட பெருமூச்சின் விளைவாகத்தான், எட்டாம் வகுப்பு வரையிலாவது டிரைவர்கள் படித்திருக்க வேண்டும் என்றொரு நியதியை மத்திய அரசு வகுத்து, அதை ஆணையாகவும் ஆக்கியது.


அந்த ஆணையை நிறைவேற்றும் வகையில், மாநில அரசுகள் செயல்படத் துவங்கியதால், வரவர வாகனங்களின் எண்ணிக்கை சாலைகளில் அதிகமாகிக் கொண்டே வந்தால் கூட, விபத்துகளின் எண்ணிக்கை ஓரளவு குறைந்து கொண்டே வருவதைக் காண்கிறோம்.வேலைக்குப் போகிற இளைஞனுக்கு எட்டாவது வரையிலாவது படிக்க வேண்டுமென்ற ஊக்கத்தை, மத்திய அரசின் இந்த ஆணை உருவாக்குகிறது. ஆனால், மத்திய அரசையோ, மாநில அரசையோ குற்றம்சாட்டி, இளைஞர்கள் எட்டாவது வரையிலாவது படித்து, கல்வி அறிவு பெறுவதைத் தடுக்கும் வகையில், போராட்டத்தை நடத்துகிறேன் என்கின்றனர் ஒரு சிலர்.எல்லா ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்திப் பார்த்துக் களைத்தவர்களுக்கு, இந்தப் போராட்டமாவது கைகொடுக்குமா என்று தான் அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் வாயைப் பிளந்து கொண்டிருக்கின்றனர்.


பணி வாய்ப்பும் தேவை; ஓரளவு படிப்பும் தேவை எனக் கருதி, மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்கும், கல்வியை வலியுறுத்தும் இந்தச் சாதாரண நிபந்தனையைக் கூட சகிக்க மாட்டோம் என சண்டமாருதம் போல் கிளம்புகின்றவர்கள், இப்படி ஏதாவது காரணம் கிடைக்காதா என அலைந்து கொண்டிருந்தால், நாடு வாழுமா? நல்லது நடக்குமா?இவ்வாறு கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். 


Advertisement
வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முஹம்மத் KJM - மதுரை,இந்தியா
17-அக்-201002:00:47 IST Report Abuse
முஹம்மத் KJM கலைஞர் பள்ளி இறுதி ஆண்டு வரை படித்தவர், ஆங்கிலம் எழுத, படிக்க, பேச, விளங்கிக்கொள்ள தெரிந்தவர், அந்த காலத்து படிப்பு என்பது ஏறக்குறைய இப்போதுள்ள முதுநிலை பட்டப்படிப்பிற்கு சமம் என்றே சொல்லலாம். அந்த அளவு ஆங்கில அறிவாற்றல் நிறைந்தவர்கள் தான் அதிகம் அப்போதைய தலைமுறைகள். ஆகையால் அவர் முதல் அமைச்சராக வர எல்லா தகுதியும் பெற்றவர். அதற்கேற்றவாறு, பதவியையும் நிர்வகித்து வருகிறார் 69 ஆண்டிலிருந்து. அதற்கான திறமை தெளிவாக தெரிகின்றது. படிப்பு எல்லாவற்றிக்கும் நல்லதுதானே அதை ஏன் எதிர்க்கவேண்டும். மக்களை மக்கு முண்டமாக இருக்கவேண்டும் என்று நினைகிரார்களா? திருந்தாத ஜென்மங்கள். தமிழன் படித்து, தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்ல வேண்டாமா?
Rate this:
Cancel
தமிழ் - dubai,இந்தியா
16-அக்-201017:17:35 IST Report Abuse
தமிழ் விடுங்க தலைவா, இவளுக்கு பொய் நீங்க அறிக்கை விட்டுகிட்டு....... இவளுக்கு ஒரு வார்டு மெம்பெர் போதும்.
Rate this:
Cancel
விச்வசு - சென்னைதான்,இந்தியா
16-அக்-201011:24:00 IST Report Abuse
விச்வசு அப்ப, கலைஞர் என்ன சொல்லுறாரு அப்பிடின்னா, படிக்காதவங்க வண்டி ஒட்டியதாலத்தான் விபத்து ஏற்படுதுன்னு. அப்புறம் நீங்க எதுக்கு RTO ஆபீஸ்ல டெஸ்ட் எல்லாம் வெக்கறீங்க? சும்மா போக்குவரத்துக்கு மந்திரி சம்பாதிக்க தானே? 40 வருஷம் முந்தி நீங்க இப்பிடி சொன்னா ஓகே. அப்ப 40 வருஷ கழக ஆட்சில, முக்கியமா 20 வருஷ DMK ஆட்சில பகுத்தறிவு வளரல. அப்ப உங்க ஆட்சி வேஸ்டு. அப்பு, அப்ப நீ கடைய கட்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X