சிவபெருமாள் பாணியில் ஆணிவேர்களும் சல்லிவேர்களும்...

Updated : ஆக 26, 2014 | Added : ஆக 26, 2014 | கருத்துகள் (1)
Advertisement
நமது ஒவ்வொரு குடும்பத்திலும் அறுபதை தொட்டவர்களிடம் நிச்சயம் ஒரு சுவராசியமான கதை இருக்கும்.அந்தக்கதையில்,பேரக்குழந்தைகளிடம் சொல்வதற்கான மூதாதையர்களின் கதைகள் குறைவின்றி இருக்கும்,மேலும் அவர்களிடம் காட்டுவதற்காக பிறந்த கிராமம்,படித்த பள்ளிக்கூடம்,பழகிய நண்பர்கள்,வழிபட்ட ஊர்க்கோயில்,வழிகாட்டும் குலதெய்வம்,விளையாடிய மைதானம்,நீந்திவிளையாடிய
சிவபெருமாள் பாணியில் ஆணிவேர்களும் சல்லிவேர்களும்...

நமது ஒவ்வொரு குடும்பத்திலும் அறுபதை தொட்டவர்களிடம் நிச்சயம் ஒரு சுவராசியமான கதை இருக்கும்.
அந்தக்கதையில்,பேரக்குழந்தைகளிடம் சொல்வதற்கான மூதாதையர்களின் கதைகள் குறைவின்றி இருக்கும்,மேலும் அவர்களிடம் காட்டுவதற்காக பிறந்த கிராமம்,படித்த பள்ளிக்கூடம்,பழகிய நண்பர்கள்,வழிபட்ட ஊர்க்கோயில்,வழிகாட்டும் குலதெய்வம்,விளையாடிய மைதானம்,நீந்திவிளையாடிய கண்மாய்கள்,கல்லெறிந்த மாந்தோப்புகள்,அற்புதமான உறவுகள்,அழகான வயல்வெளிகள் மலை முகடுகள் என்று நிறைய, நிறையவே இருக்கும்.
இப்போது அறுபதில் இருப்பவர்களின் இந்த இனிமையான நினைவுகள் அழகானவை மட்டுமல்ல அற்புதமானவையும் கூட.
இதைப்பற்றி இவர்களிடம் கேட்டுப்பாருங்கள் அவர் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும் செல்வச்செழிப்பில் மிதந்தாலும் தனது பழைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் போது குழந்தைகயாக மாறிப்போவார்கள்,குதூகலத்தில் முழ்கிப்போவார்கள்.
ஒவ்வொருவர் மனதிலும் இதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுடன் இப்போது இதனை பதிவு செய்யவேண்டும் என்ற உணர்வும் தற்போது அதிகரித்துள்ளது,காரணம் நேற்று பார்த்த எதுவும் இன்று இருப்பதில்லை என்பதுதான்.
பகிர்ந்து கொள்வது சரி பதிவு செய்வது எப்படி என்ற கேள்விக்கு விடையாக வருகிறார் சிவபெருமாள்.
நீண்ட கால புகைப்பட மற்றும் வீடியோ அனுபவம் கொண்ட இவருக்கு பாரம்பரியமான விஷயங்களை படமாக்குவது என்பது பிடித்த விஷயம்.
தலைமுறை என்றோ பரம்பரை என்றோ,ஆணிவேர்களும் சல்லிவேர்களும் என்றோ, எங்களுடைய குடும்ப பொக்கிஷம் என்றோ எப்படி வேண்டுமானாலும் இந்த பதிவிற்கு தலைப்பு கொடுத்துக்கொள்ளலாம்.
என் குடும்பத்தை பற்றி சொல்ல என்ன இருக்கிறது என்று முதலில் தயங்கியவர்கள் கூட, ஒரு முக்கியமான விஷயம் மறந்துட்டேன் இன்னோரு விஷயத்தை மறந்துட்டேன், கட்டாயம் இந்த விஷயத்தை சொல்லியே ஆகணும் என்று மனதில் உள்ள விஷயங்களை கொட்டியதுடன் சம்பந்தபட்ட கிராமம் நகரம் வெளியூர் வெளிமாநிலம் என்று அனைத்து இடங்களுக்கும் சிவபெருமாளின் வீடியோ குழுவை அழைத்துச்சென்றிருக்கிறார் அவரால் அழைத்துச்செல்ல முடியாத போது அனுப்பிவைத்திருக்கிறார்.
இப்படி முடிந்த ஒரு குடும்பத்தின் ஆவணப்படத்தை தாத்தாபாட்டிபேரன்பேத்திகள் என்று அனைவரும் மொத்தமாக உட்கார்ந்து பார்த்துவிட்டு அடைந்த ஆனந்தத்தையும்,இதற்கு நிகராக எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடாகாது என்று சொன்ன வார்த்தையையும் கேட்டபோதுதான் இது போல் நிறைய குடும்ப கதையை படமாக்குவது என்று தீர்மானித்தேன் என்கிறார் சிவபெருமாள்.
ஒரு திரைப்படத்திற்கான உத்திகளுடனும் தொழில்நுட்ப தரத்துடனும் எடுக்கப்படும் இந்த குடும்ப ஆவண படம் எடுத்து முடிக்க மூன்று மாத காலம் முதல் ஆறு மாதகாலம் வரையாகலாம்.
நாற்பது நாற்பத்தைந்து வயதில் இருக்கும் மகன் அல்லது மகள் தன் தாய்,தந்தையின் மணிவிழாவிற்கு தரும் அற்புதமான பரிசாக இந்த ஆவண படம் இருக்கும் என்பது நிச்சயம்.இது எத்தனை ஆண்டு காலமானாலும் அழியாமல் இருந்து குடும்ப பெருமை பேசும் என்பது அதைவிட நிஜம்.
இது பற்றிய மேல்விவரத்திற்கு சிவபெருமாள்: 9444067847.
- எல்.முருகராஜ்Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman - Porur, Chennai,இந்தியா
27-ஆக-201406:45:55 IST Report Abuse
Anantharaman நல்ல முயற்சி....வாழ்த்துக்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X