ஒரே ஒரு பெட்டி... உள்ளுக்குள்ளே 20 பெட்டிஷன்!| Dinamalar

ஒரே ஒரு பெட்டி... உள்ளுக்குள்ளே 20 பெட்டிஷன்!

Added : ஆக 26, 2014
Share
முகநூலில், நண்பிகளோடு 'சாட்டிங்' செய்து கொண்டே, பள்ளிக் காலத்துத் தோழிகளை மித்ரா தேடிக்கொண்டிருந்தபோது, சித்ராவிடமிருந்து 'சிக்னல்' வர, மற்றவர்களுக்கு விடை கொடுத்து விட்டு, முகம் பார்க்காமலே இருவரும் விரல்களில் பேச ஆரம்பித்தார்கள்...சித்ரா: என்னடி! 'பேஸ்புக்'ல யாரடி தேடிட்டு இருக்க...?மித்ரா: யாரையும் தேடலைக்கா... நம்ம ஊரைப் பத்தி, நம்ம ஊரு வி.ஐ.பி.,க்களைப் பத்தி,
ஒரே ஒரு பெட்டி... உள்ளுக்குள்ளே 20 பெட்டிஷன்!

முகநூலில், நண்பிகளோடு 'சாட்டிங்' செய்து கொண்டே, பள்ளிக் காலத்துத் தோழிகளை மித்ரா தேடிக்கொண்டிருந்தபோது, சித்ராவிடமிருந்து 'சிக்னல்' வர, மற்றவர்களுக்கு விடை கொடுத்து விட்டு, முகம் பார்க்காமலே இருவரும் விரல்களில் பேச ஆரம்பித்தார்கள்...
சித்ரா: என்னடி! 'பேஸ்புக்'ல யாரடி தேடிட்டு இருக்க...?
மித்ரா: யாரையும் தேடலைக்கா... நம்ம ஊரைப் பத்தி, நம்ம ஊரு வி.ஐ.பி.,க்களைப் பத்தி, யார் யாரு என்ன 'கமென்ட்' போடுறாங்கன்னு பாக்குறேன்.
சித்ரா: நம்ம ஊரு வி.ஐ.பி.,களைப் பத்தி, 'பேஸ்புக்'ல கமென்ட் போட்டா, பிரச்னை ஆகுதுன்னு, இப்போ 'வாட்ஸ் ஆப்'லதான் மெசேஜ் போடுறாங்க...தெரியுமா?
மித்ரா: ஆமாக்கா! அதுலதான் ஒரு 'மெசேஜ்' வந்துச்சு...பழைய வி.ஐ.பி., ஒருத்தரைப் பத்தி. அவரோட கையில இருக்கிற ஒரு பெட்டிக்குள்ள 20 அமைப்புகளோட 'லெட்டர் பேடு' இருக்காம்; அதுலயிருந்து, தெனமும் நாலஞ்சு பெட்டிஷனாவது கார்டனுக்குப் போகுதாம்; புதுசா பொறுப்புக்கு வந்தவரோட, பதவியைப் பறிக்கிறதோட, மேயருக்கு அவரை வேட்பாளரா அறிவிக்க விடக்கூடாதுங்கிறதுதான் ஒரே இலக்குன்னு கரை வேட்டிங்க பேசிக்கிறாங்க.
சித்ரா: மேயர் தேர்தலுக்கு அறிவிப்பு வெளியிடுவாங்கன்றது முதல்லயே தெரிஞ்சிருச்சு; ஆனா, மேயர் கேண்டீடேட் யாருங்கிறதுதான் இன்னும் சஸ்பென்சாவே இருக்கு...மேயர் தங்கச் சங்கிலி யாருக்கோ?
மித்ரா: சங்கிலின்னு ஞாபகப்படுத்துனதுக்கு தேங்க்ஸ்....நம்ம ஊர்ல 'செயின் ஸ்நாச்சிங்' அநியாயமா நடக்குதுன்னு, அதைத் தடுக்கிறதுக்குன்னே ஒரு 'டீம்' புதுசா 'ஃபார்ம்' பண்ணுனாங்க தெரியுமா?
சித்ரா: ஆமா...ஞாபகமிருக்கு!
மித்ரா: அந்த 'டீம்' என்ன பண்ணுதுன்னு தெரியலை; சங்கிலித்திருட்டு, சங்கிலித்தொடரா நடந்துட்டேதான் இருக்கு.
சித்ரா: வண்டியில சுத்துறதுக்கு பெட்ரோலுக்குக் காசில்லையோ என்னவோ?
மித்ரா: அதெல்லாம் கொடுக்குறாங்க; ஆனா, அந்த 'டீம்'ல இருக்கிற ஆளுங்க, ஏரியாவுல இருக்கிற ஏதாவது ஒரு பேக்கரியில, ஓட்டல்ல உக்கார்ந்தே பொழுதைக் கழிச்சிட்டுப் போயிர்றாங்க. நம்ம உப்பிலிப்பாளையம் சிக்னல்ட்ட இருக்கிற பெட்டிக்கடையில பார்த்தா, அந்த 'டீம்' ஆளுங்க, ஊதி ஊதி உழைக்கிற உழைப்பு தெரியும்.
சித்ரா: மித்து! செயின் ஸ்நாச்சிங்காவது, ஒரு 'செகண்ட்'ல அடிச்சிட்டுப் போயிர்றாங்க. கண்டு பிடிக்க முடியலைன்னு சொல்லலாம். ஆனா, காம்பவுண்டுக்குள்ள நிறுத்திருக்கிற காரை அப்படியே அலாக்கா கொண்டு போயிர்றாங்கன்னு சொன்னா, நம்ப முடியுதா?
மித்ரா: என்னக்கா சொல்ற...காரை தூக்கிட்டுப் போறாங்களா....?
சித்ரா: அட ஆமாடி...! சிட்டிக்குள்ள மட்டும் ரெண்டு வருஷத்துல, 12 குவாலிஸ் வண்டிங்க திருடு போயிருக்கு. என்னன்னா, ஒரு திருட்டுல கூட துப்பு கண்டுபிடிக்க முடியலையாம்.
மித்ரா: அப்படின்னா, மாய மந்திரம் ஏதும் பண்றாங்களா?
சித்ரா: உண்மைய சொல்லணும்னா, வண்டியைப் பறி கொடுத்தவுங்க, போலீஸ்காரங்க எல்லாருமே அப்படித்தான் சந்தேகப்படுறாங்க. ஏன்னா, நாய்களை வாயைக் கட்டிப்போட்டு, சத்தமில்லாம பூட்டைத் திறந்து, 3 வண்டிங்க நிக்கிற இடத்துல, இந்த 'குவாலிஸ்' வண்டிங்களை மட்டும் நகர்த்திட்டுப் போறாங்கன்னா...வேற என்ன நினைக்கச் சொல்ற?
மித்ரா: கொள்ளைக்காரங்க, போலீசுக்கு தண்ணி காட்டுறாங்களா...இல்லை...பொது மக்களை போலீஸ்காரங்க தவிக்க விடுறாங்களா...என்னமோக்கா...எனக்கு ரொம்பவே 'டவுட்'டா இருக்கு.
சித்ரா: தண்ணி காட்டுறதுன்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது; கார்ப்பரேஷன்ல புதுசா சேர்ந்த ஏரியாக்கள்ல, எலக்ஷனுக்கு முன்னால அவசர அவசரமா 'தண்ணி' கனெக்ஷன் திருட்டுத்தனமா கொடுத்ததைப் பத்தி ஐகோர்ட்ல கேசு போட்டாங்களே; அதுக்கு நடவடிக்கை எடுக்கச் சொல்லி, கோர்ட் உத்தரவு போட்ட பிறகு, வேற மாதிரி வேலை நடக்குதாம்.
மித்ரா: கோர்ட்டையும் ஏமாத்தப் போறாங்களா? அப்படி என்னதான் பண்றாங்க?
சித்ரா: நேத்துலயிருந்து மறுபடியும் புது வாட்டர் கனெக்ஷனுக்கு அப்ளிகேஷன் வாங்க ஆரம்பிச்சிட்டாங்கள்ல...அதுல இந்த திருட்டு கனெக்ஷன்களுக்கும் சேத்து அப்ளிகேஷன் வாங்கி, புதுசா போட்டது மாதிரி கணக்குல காமிக்கிறதுக்கு ஏற்பாடு நடக்குது.
மித்ரா: செம்ம ஐடியாவா இருக்கே...! யாரு இந்த வேலையப் பண்றது...?
சித்ரா: வேற யாரு? கடமை தவறாத நம்ம கவுன்சிலர்கதான்...பிளம்பர்களை இதுக்காக 'டார்ச்சர்' பண்ணிட்டு இருக்காங்க; அவுங்க என்ன பண்ணப்போறாங்க. கமிஷனர் மேடம் எப்படி இதைத் தடுக்கப் போறாங்கன்னு தெரியலை.
மித்ரா: இப்பல்லாம் எல்லாத்துக்கும் கோர்ட்ல போய்தான் தீர்வு காண வேண்டியிருக்குக்கா. கோவையில கமர்சியல் பில்டிங்குகளுக்கு இ.பி.,கனெக்ஷன் கொடுக்கிறதுல ஏகப்பட்ட முறைகேடு நடக்குற விவகாரமும் கோர்ட்டுக்குப் போச்சே; அதுல சில அதிகாரிங்களாவது, வசமா மாட்டுவாங்கன்னு நினைச்சா, 'கிரேட் எஸ்கேப்' ஆயிட்டாங்க.
சித்ரா: கார்ப்பரேஷனுக்கு புதுசா 108 துப்புரவுப் பணியாளர்களை நியமிக்கிறதுக்கும் கோர்ட்ல போய் தடை வாங்கிருக்காங்க பார்த்தியா...?
மித்ரா: ஆமாக்கா! எம்பிளாய்மென்ட் மூலமா 480 பேருக்கு நேர்காணல் நடத்தக் கூப்பிட்டு இருக்காங்க; முதல் நாளு 240 பேருக்கு முடிஞ்சிருச்சு; அடுத்த நாளுக்குள்ள 'ஸ்டே' வாங்கிட்டாங்க.
சித்ரா: கான்ட்ராக்டல இருக்கிறவுங்களை 'பர்மெனன்ட்' பண்ணனும்கிறது நியாயமான விஷயம்தான்; ஆனா, அது இல்லாம, 108 பேரைப் போடுறதுக்கு, ஒரு ஆளுக்கு ரெண்டு லட்ச ரூபா கேக்குறாங்களாம்.
மித்ரா: இதுக்கெல்லாம் யாராவது ஒருத்தர் பொறுப்பா இருப்பாங்களே...யாருக்கா அது?
சித்ரா: துப்புரவுப் பணியாளர்களுக்கான சொசைட்டியில முக்கியப் பொறுப்புல இருக்கிற ஆளும்கட்சிக்காரர் ஒருத்தர்தான், இந்த வேலையப் பண்றாரு; நிஜமாவே, அவர் துப்புரவுப் பணியாளரே இல்லையாம்.
மித்ரா: மங்காத்தாவுல அஜித் சொல்ற 'மணி மணி மணி...' டயலாக்தான் ஞாபகத்துக்கு வருது.
சித்ரா: காந்திபுரம் பாலம் வேலைய ஒரு வழியா ஆரம்பிச்சிட்டாங்க போலயிருக்கு.
மித்ரா: கூடவே, இன்னொரு வேலையும் ஆரம்பிச்சிடுச்சு. அங்க இருந்த ரெண்டு கோவிலையும் இடம் மாத்துறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்க. ஆனா, கடை, காம்ப்ளக்ஸ்களை காலி பண்றதுல, இடத்தைக் குறிக்கிறதுக்கு, பேரம் நடக்குதாம்; அதனாலதான், பாலத்தோட டிசைன், 'லேண்ட் அக்யூசேஷன்' பண்ற இடம் எதைப்பத்தியும் ஹைவேஸ்காரங்க வாயையே திறக்க மாட்டேங்கிறாங்களாம்.
சித்ரா: வெஸ்டர்ன் பை-பாஸ்லயும் இதே வேலைதான் நடக்கும் போலிருக்கு. புது 'அலைன்மென்ட்' போட்டு, ரோடு சேப்டி கவுன்சில் மீட்டிங்ல 'அப்ரூவல்' ஆன பிறகும், எந்தெந்த சர்வே நம்பர்கள்ல நிலம் எடுக்கிறதுங்கிறதைப் பத்தி, எதுவுமே அறிவிப்பு வெளியிடாம இருக்காங்க. இதே மாதிரி, முன்னாடி 'கம்'ன்னு இருந்ததாலதான், ரோடுக்கான இடத்துல ஏகப்பட்ட வீட்டைக் கட்டி, கடைசியில ரோடு போட விடாம போராட்டம் பண்ணுனாங்க. இப்பவாவது, அதை சீக்கிரமா பண்ணலாமே.
மித்ரா: அதை அறிவிக்கிறதுல அவுங்களுக்கு என்ன பிரச்னையாம்?
சித்ரா: பிரச்னை...பேரம்தான். நிலத்தை, கட்டடத்தைக் காப்பாத்தணும்ன்னா, எங்களைக் கவனிங்கன்னு சொல்லாம சொல்லுறாங்களோன்னு தோணுது.
மித்ரா: அப்படின்னா, இந்த கவர்மென்ட் முடியுறதுக்குள்ள அந்த வேலை ஆரம்பிக்காதுன்னு சொல்லு.
சித்ரா: அநேகமா அப்படித்தான்....
மித்ரா: புதுசா ரோடு போடுறதுமில்லை; இருக்கிற ரோடுகளையும் விட்டு வைக்கிறதில்லை; என்னதான் நினைக்கிறாங்க இந்த ஆளும்கட்சிக்காரங்க?
சித்ரா: இருக்கிற ரோட்டைஎன்ன பண்றாங்க?
மித்ரா: என்னக்கா தெரியாதது மாதிரி கேக்குற...அதுதான் 'ஆவின் பூத்' வைக்கிறோம்கிற பேர்ல, ரோடு, பிளாட்பார்ம் எல்லாத்தையும் ஆக்கிரமிச்சு வச்சிருக்காங்களே. ரெண்டு ஆவின் பூத் நடுவுல ஒரு கி.மீ., இடைவெளி இருக்கணும்னு இருக்கு. ஆனா, அரை கி.மீ.,க்குள்ள 3 பூத் வச்சிருக்காங்க.
சித்ரா: அந்த கொடுமை எந்த ரோட்டுல?
மித்ரா: மேட்டுப்பாளையம் ரோட்டுலதான்; ஏற்கனவே, அண்ணா மார்க்கெட் முன்னால, ஆளும்கட்சி ஆட்டோ தொழிற்சங்கத்தைச்சேர்ந்த ஒருத்தரு அனுமதி வாங்கி, ஆவின் பூத் நடத்திட்டு இருக்காரு. சமீபத்துல, ஒரு ஹாஸ்பிடல் பேரைப் போட்டு, ஆளும்கட்சி லேடி ஒருத்தவுங்களுக்கு அனுமதி கொடுத்தாங்க. ஆளும்கட்சிக்காரர் இன்னொருத்தரு, அனுமதி வாங்காமலே பி 11 ஸ்டேஷன்கிட்ட இன்னொரு பூத் போட்டுட்டாரு. கார்ப்பரேஷன் நோட்டீஸ் கொடுத்திருக்காங்க.
சித்ரா: ஆவின் பூத் அட்ராசிட்டியைத் தடுக்கிறதுக்கு, யாரும் கோர்ட்டுக்குப் போக மாட்டேங்கிறாங்களே?
மித்ரா: அதை அப்புறம் பார்க்கலாம். இப்போ எனக்கு கை வலிக்குது. காலையில நேர்ல பார்க்கலாம்; குட் நைட்!.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X