சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபட்-பைக் மோதல் லாரி டிரைவர் பலி

Added : அக் 13, 2010
Share
Advertisement
ப.வேலூர்: வேலகவுண்டம்பட்டி அருகே மொபட் மீது பைக் மோதிய விபத்தில் லாரி டிரைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ப.வேலூர் அருகே தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (35). லாரி டிரைவரான அவர், கடந்த 9ம் தேதி வேலகவுண்டம்பட்டியில் இருந்து இரவு 9 மணியளவில்  டி.வி.எஸ்., 50 மொபட்டில் தொட்டிபாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார். மத்தாயி கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த பைக் அவர் மீது

ப.வேலூர்: வேலகவுண்டம்பட்டி அருகே மொபட் மீது பைக் மோதிய விபத்தில் லாரி டிரைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ப.வேலூர் அருகே தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (35). லாரி டிரைவரான அவர், கடந்த 9ம் தேதி வேலகவுண்டம்பட்டியில் இருந்து இரவு 9 மணியளவில்  டி.வி.எஸ்., 50 மொபட்டில் தொட்டிபாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார். மத்தாயி கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த பைக் அவர் மீது மோதியுள்ளது. அந்த விபத்தில் படுகாயமடைந்த முருகேசன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X