பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே மொபட் மீது டெம்போ மோதிய விபத்தில், வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார். பள்ளிபாளையம் அருகே ஆனங்கூரார் டீக்கடையை சேர்ந்தவர் குமார் (25). அவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், மனைவி சுந்தரியுடன் டி.வி.எஸ்., எக்ஸல் சூப்பர் மொபட்டில் கலியனூர் சென்றுள்ளார். சில்லாங்காடு என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த டெம்போ மொபட் மீது மோதியுள்ளது. அதில், படுகாயமடைந்த கணவன்- மனைவி இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE