தினமலர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, 360 டிகிரி கோணப் பகுதியில் கோயில்களின் முழுமையான தரிசனம் அனைத்து வாசகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்தப் பகுதியில் இதுவரை இந்து கோயில்கள் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. மற்ற மத வாசகர்களும் தங்களுடைய புனித தலங்கள் இதில் வெளியாக வேண்டும் என்று கோரியிருந்தனர். வாசகர்களின் கருத்துக்கு மதிப்பு தரும் தினமலர், அவர்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களை 360 டிகிரி கோணத்தில் பார்க்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு அனைத்து வாசகர்களும் முழு ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
360 டிகிரி கோணத்தில் பள்ளிவாசல், தேவாலயம் பார்க்க : http://www.dinamalar.com/360view_main.asp