அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு சார்பில், 24 கைவினைஞர்களுக்கு விருதுஅடையாளமாக 7 பேருக்கு முதல்வர் வழங்கினார்

Added : செப் 01, 2014
Advertisement

சென்னை:தமிழக அரசு சார்பில், 14 கைவினைஞர்களுக்கு, பூம்புகார் மாநில விருதையும், 10 கைவினைஞர்களுக்கு, வாழும் கைவினை பொக்கிஷங்கள் விருதுகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.இதுகுறித்த செய்திக்குறிப்பு:
கைவினைப் பொருட்களை தயாரிக்கும், கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்ட, 'பூம்புகார் விருது'க்கு, 2002 முதல், தமிழக அரசின், 'மாநில விருது' என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டு, கைவினைக் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.கடந்த,201314ம் ஆண்டிற்கான, பூம்புகார் மாநில விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட, 14 கலைஞர்களுக்கு, விருது வழங்க அடையாளமாக, ஒருவருக்கு முதல்வர் ஜெயலலிதா விருது வழங்கினார்.ஜப்பான் நாட்டில், 'வாழும் தேசிய பொக்கிஷங்கள்' என்ற விருதை,ஏழு விதமான கலைப் பொருட்களை தயாரிக்கும் கலைஞர்களுக்கு, அந்நாட்டு அரசு வழங்குகிறது. அதேபோல், தமிழகத்திலும், 'வாழும் கைவினை பொக்கிஷம் விருது வழங்கப்படும்' என, சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.இந்த அடிப்படையில், 16 விதமான கைத்திறத் தொழில்களில் இருந்து, 65 வயதுக்கு மேற்பட்ட, 10 கைவினைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில், ஆறு பேருக்கு, 'வாழும் கைவினை பொக்கிஷம்' விருதை வழங்கினார்.
சிறந்த மாநிலம்:'தி இந்தியா எஸ்.எம்.இ., போரம்' என்ற அரசு சாரா அமைப்பு, 201213ம் ஆண்டிற்கான, இந்திய அளவில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறந்த மாநிலம் எனும் விருதை, தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.இந்த விருதை, தமிழக முதல்வரிடம் அளித்து, ஊரக தொழில் துறை அமைச்சர் மோகன் வாழ்த்து பெற்றார். நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், கைத்தறித்துறை செயலர் ஹர்மந்தர் சிங், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை செயலர் சங்கர், கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழக தலைவர் ஷீலாராணி சுங்கத் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X