இந்தியாவில் புல்லட் ரயில்; ஜப்பானுடன் போட்டிபோடும் சீனா

Added : செப் 02, 2014 | கருத்துகள் (21)
Advertisement
இந்தியாவில் புல்லட் ரயில்; ஜப்பானுடன் போட்டிபோடும் சீனா

பீஜிங்: இந்தியாவுக்கு புல்லட் ரயில் வசதி வழங்க ஜப்பான் முன்வந்துள்ள நிலையில், அடுத்த ஆச்சர்யம் கிடைத்துள்ளது. ஜப்பானை விட சிறந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்ட நாங்கள், இந்தியாவுக்கு புல்லட் ரயில் தொடர்பான தொழில்நுட்பத்தை வழங்க தயார் எனக்கூறி சீனா ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு நாள் அரசு முறைப் பயணமாக, ஜப்பான் சென்றுள்ள, பிரதமர் நரேந்திர மோடி, முதல் இரண்டு நாட்கள், அங்குள்ள கியோட்டோ நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, நேற்று, தலைநகர் டோக்கியோவுக்கு வந்த பிரதமர், அங்கு, ஜப்பானைச் சேர்ந்த வர்த்தகர்கள், தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார்.

இதன்பின், ஜப்பான் பிரதமர் அபேயுடன்,பிரதமர் மோடி, விரிவான ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ராணுவம், அணுசக்தி ஒப்பந்தம், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய விஷயங்களில் இணைந்து செயல்படுவது குறித்து, இருவரும் பேசினர்.அப்போது, இரு தரப்புக்கும் இடையே, புல்லட் ரயில், நகர மேம்பாடு, உள்கட்டமைப்பு, ராணுவம் ஆகியவை தொடர்பாக, முக்கிய ஒப்பந்தங்கள்கையெழுத்தாயின.இதன்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த துறைகளில், ஜப்பான், இரண்டு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது. குறிப்பாக, புல்லட் ரயில் திட்டத்துக்கு தேவையான, நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்கவும், ஜப்பான் முன் வந்துள்ளது.

இந்நிலையில், சீன ரயில்வேத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,ரயில்வே துறையில் ஜப்பானை விட நாங்கள் வலிமையாக உள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதிவேக ரயில்கள் உருவாக்குவதில், அனைவருடனும் போட்டி போடும் திறன் உள்ளது என்றும், இந்தியாவின் உள்கட்டமைப்பு துறையில் ஜப்பான் 35 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உள்ளதாக செய்தி வந்துள்ளது. இதனை நாங்கள் ஒரு நம்பிக்கைக்குரிய வாய்ப்பாக கருதுகிறோம். இந்தியாவுக்கு தொழில்நுட்ப வசதிகளை வழங்க தயாராக உள்ளோம் என கூறினார்.

சீனா பதில்: பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் வர்த்தகர்கள்இடையே, பேசுகையில்:இந்த நூற்றாண்டு, ஆசிய நாடுகளுக்கு சொந்தமானது. உலகில் வளர்ச்சியை ஏற்படுத்துவதில், ஆசிய நாடுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், சில நாடுகள், இன்னும், 18ம் நூற்றாண்டு மனப்பான்மையில் உள்ளன. மற்ற நாடுகளை ஆக்கிரமிப்பதுடன், மற்ற நாடுகளின் கடல் பரப்புகளையும் ஆக்கிரமிக்கின்றன.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.எந்த நாட்டின் பெயரையும், வெளிப்படையாக மோடி குறிப்பிடாவிட்டாலும், சீனாவைத் தான், அவர், மறைமுகமாக சாடுவதாக, அங்குள்ளவர்களிடேயே பேச்சு எழுந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குயின் காங்க், ஜப்பானில் மோடி என்ன பேசினார் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. முன்னர் இந்தியாவும் சீனாவும் நிலையானகூட்டாளிகள் என மோடி கூறியுள்ளார். மோடியின் ஜப்பான் பயணம் குறித்து நாங்கள் கவனித்து வருகிறோம். அவர் குறிப்பிட்ட சில கருத்துக்களை வைத்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கின்றனர். ஆனால் மோடி எதை குறிப்பிட்டார் என்பது பற்றி தெரியவில்லை என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - India,சிங்கப்பூர்
03-செப்-201406:29:34 IST Report Abuse
Krish இது சீனா ட்ரைன் - நிறுத்தம் கிடையாது. பீஜிங் யில் இருந்து குஅங்ஸு வரை உள்ள புல்லட் ட்ரைன். நிறுத்ததிற்காக ஒரு சின்ன மொபைல் பெட்டி, ட்ரைன் யின் மேல். ஒரு டபுள் டெக்கர் போல. ஆடை மட்டும் ஒவ்வொரு ஸ்டேஷனில் கலட்டி விட்டு செல்லும், அல்ரெடி அந்த ஸ்டேஷனில் நிற்கும் பெட்டியை சேர்த்து கொண்டு செல்லும். அதுவும் நிறுத்தாமல். இதை முன்பு என்று ஒரு நாள் நான் பார்த்த வீடியோ .youtube.com/watch?v=p9Ig19gYP9o&gl=SG&hl=en-GB "The train that never stops at a station" என்று Youtube யில் தேடுங்கள். பாண்டியன் wuxi china அவருக்கு இதை பற்றி தெரிந்திருக்கும். சீனா கடும் உழைப்பாளி, திறைமைசாலி தான். ஜப்பான் அவனை விட கொஞ்சம் மேல்.
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
03-செப்-201406:25:18 IST Report Abuse
Divaharan சீனா புல்லெட் ட்ரைன் ஐ தந்து விட்டு நம்மிடம் தகராறு செய்து கொண்டு இருப்பார்கள். இது சரிப்படுமா?
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
03-செப்-201406:14:27 IST Report Abuse
Pannadai Pandian மொதல்ல எங்க ஊரு மாயவரம்-தரங்கம்பாடிக்கு நீராவி எஞ்சின் விடுங்கப்பா, புண்ணியமா போவும். மேலும் அதை காரைக்காளோடு இணைச்சுடுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X