அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சருடன் மோதல்: சகாயம் இடமாற்றம்

Updated : செப் 06, 2014 | Added : செப் 05, 2014 | கருத்துகள் (260)
Share
Advertisement
Transfer of sagayam with the conflict

சென்னை:அமைச்சருடன் ஏற்பட்ட மோதலால், கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம், மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை திடீரென இடமாற்றம் செய்தது, ஊழியர்கள் மற்றும் நெசவாளர்களிடம், கடும் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.
கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக, கடந்த 2012 ஜூன் மாதம், சகாயம் பொறுப்பேற்றார். அதுவரை நஷ்டத்தில் இயங்கி வந்த, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தை மேம்படுத்த, சகாயம், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். இதன் பயனாக, 2012 - 13ம் ஆண்டு, 2 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.கோ - ஆப்டெக்ஸ் விற்பனை, 200 கோடியில் இருந்து, 300 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த ஆண்டு, 14 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. இதிலிருந்து ஒரு கோடியை, நெசவாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கினார். நெசவாளர்கள் புகைப்படத்தை, அவர்கள் நெய்த துணியில் இணைக்க நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில், தற்போது சகாயம் மாற்றப்பட்டு, இந்திய மருத்துவத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணமாக, அமைச்சர் கோகுல இந்திராவுடன் ஏற்பட்ட மோதல் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கூறியதாவது:சென்னையில் உள்ள, கோ - ஆப் டெக்ஸ் தலைமை அலுவலகத்தில், தனக்கு அறை ஒதுக்கி தரும்படி, அமைச்சர் கேட்டார். ஆனால் சகாயம், அறை ஒதுக்க முன் வரவில்லை. கோபமடைந்த அமைச்சர், தனக்கு அறை ஒதுக்கும்படி, கைத்தறி துணி நுால் துறை செயலருக்கு, கடிதம் அனுப்பினார்.
அவரும், உடனே அறை ஒதுக்கும்படி, சகாயத்திற்கு உத்தரவிட்டார். அதற்கு சகாயம், 'இதுவரை, அமைச்சருக்கு தனி அறை ஒதுக்கப்படவில்லை. மேலும், தற்போதுள்ள அமைச்சர், உள்ளூர் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அவருக்கு அறை ஒதுக்கினால், அங்கு கட்சிக்காரர்கள் திரள்வர். ஊழியர்கள் பணி பாதிக்கப்படும். எனவே, அமைச்சர் வரும்போது, என் அறையில் அமரலாம்' என, பதில் அனுப்பினார்.
அடுத்து, கோ - ஆப்டெக்ஸ் மண்டல விற்பனை மேலாளர்கள், 11 பேருக்கு, கார் வாங்கி, முதல்வர் கையால் வழங்க வேண்டும் என, அமைச்சர் ஆசைப்பட்டார்.இதற்கும் சகாயம் எதிர்ப்பு தெரிவித்தார்.'முன்பு, 700 கிளைகள் இருந்தபோதே, மேலாளர்களுக்கு கார் கிடையாது; தற்போது, ஒவ்வொருவரும், 15 கிளைகளை மட்டும் கவனிக்கின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது தான், அவர்கள் அதிக இடங்களுக்கு செல்ல வேண்டி வரும். அப்போது, வாடகைக்கு கார் அமர்த்தினால் போதும். தேவையின்றி கார் வாங்கி, நிதியை வீணடிக்க வேண்டாம்' எனக் கூறி, அமைச்சரின் கார் திட்டத்திற்கு, முற்றுப்புள்ளி வைத்தார்.
அடுத்து, கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்கள் இடமாற்றத்தில், அமைச்சர் தலையிட்டார். அதையும் சகாயம் ஏற்றுக் கொள்ளவில்லை.கள்ளக்குறிச்சியில், கோ - ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் சோமசுந்தரம் என்பவரை, ஆளும் கட்சியை சேர்ந்த, நகராட்சி தலைவர் மற்றும் அவரது ஆட்கள் தாக்கியது தொடர்பாக, போலீசில் புகார் செய்யும்படி, சகாயம் உத்தரவிட்டார்.
அதன்படி, அவர் புகார் செய்தார். ஆனால், போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இத்தகவலை, தலைமைச் செயலர், போலீஸ் டி.ஜி.பி., கவனத்திற்கு, சகாயம் கொண்டு சென்றார். இதுவும் அமைச்சருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.சில தினங்களுக்கு முன், தீபாவளி விற்பனை குறித்து ஆலோசிப்பதற்காக, ஊழியர்கள் கூட்டத்திற்கு, சகாயம் ஏற்பாடு செய்தார்.
கடைசி நேரத்தில், அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், அந்த கூட்டத்திற்கு, அவர் செல்லவில்லை. அதில் கலந்து கொண்ட அமைச்சர், 'எனக்கு அறை தர மறுக்கிறார். இங்கு நான் எப்படியும் அறை பெற்றே தீருவேன்' என, ஊழியர்களிடம் சபதமிட்டுள்ளார்.இதன் தொடர்ச்சியாகத் தான், சகாயம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு நஷ்டம் இல்லை. கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கும், நெசவாளர்களுக்கும் தான் இழப்பு.இவ்வாறு, ஊழியர்கள் தெரிவித்தனர்.
சகாயத்திற்காக நடைமுறை மாற்றம்:தமிழக அரசு செயல்படுத்தும், இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டத்திற்கு, நுால் கொள்முதல் செய்து, வேட்டி, சேலை தயாரிக்கும் திட்டத்தை, கோ - ஆப்டெக்ஸ் மேற்கொண்டு வந்தது.இலவச சேலை, 372 கிராம் எடை இருக்க வேண்டும் என, அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியாகி வந்த சேலைகளை, சகாயம் எடை போடும்படி கூறியுள்ளார்.
அப்போது, எடை குறைவாக இருந்த, 30 லட்சம் சேலைகளை நிறுத்தி விட்டார். அதன்பின், மேல்மட்ட தலையீடு காரணமாக, அந்த சேலைகள் வினியோகத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பு நிதியாண்டில், கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்படும், இலவச வேட்டி, சேலை கொள்முதல் திட்டப்பணி, கைத்தறி துணி நுால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Advertisement
வாசகர் கருத்து (260)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugan - Chennai ,இந்தியா
10-செப்-201404:04:55 IST Report Abuse
murugan சகாயம் அவர்கள் நாட்டை ஆள தகுதியானவர் என்று ஒரேயடியாக 'முதல்வன் சினிமா' பாணியில் சொல்லிவிட முடியாது. இவரால் எத்தனை கருணாதியை சமாளிக்க முடியும்? மிகவும் சிறந்த நிர்வாகி, பல முறை வளைந்து கொடுத்து செயலாற்றிவர் என்பது நம் முதல்வருக்கே கூட நன்கு தெரியும். சில நேரங்களில் ஈகோ பார்க்கிறார்கள். கூட்டுறவு துறை என்ன இன்னும் பல துறைகளில் வாடகை கார் அமர்த்திக்கொள்ளும் போது டெண்டரில் போட்டியினால் குறைந்த விலை புள்ளியில் ஒப்பந்தம் செய்வதினால் செலவு அதிகம் குறைந்து விடுகிறது. தேவை முடிந்தவுடன் காருக்கும் நமக்கும் உள்ள உறவு ரத்தாகிவிடுகிறது. ஒப்பந்தத்தின் போதே அழைக்கும் போது வரவேண்டும் என்ற நிலையிலும் போட்டியும் நல்ல நிலையில் உள்ள கார் நமக்கு கிடைக்கிறது. நாம் சொந்த காரை வைத்து பராமரிக்கும் போதும் வடக்கை கார் வைத்துக்கொள்ளும் போதும் வாடகை காரே போதும் என்றளவில் நிம்மதியாக உள்ளது. அமைச்சருக்கு ஒரு அனெக்சர் நல்ல வசதியுடன் செய்து கொடுத்திருக்கலாம். நஷ்டம் கூட்டுறவுத்துறைக்கு தான், அவருக்கல்ல. அவர் ஊதியத்தை தவிர வேறு எதையும் எதிபார்க்கும் அதிகாரியல்ல, சிறந்த நிர்வாகி. துரதிஷ்ட்டம்.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-செப்-201412:05:57 IST Report Abuse
Malick Rajaஎதற்கு வீணான செலவு என்பதில் நல்ல அக்கறையுடன் தானே செயல்பட்டார்.. துரதிஷ்டம் திருவாளர் சகாயத்திற்கு அல்ல... அது மற்றவர்களுக்கு மட்டுமே குறிப்பாக கைத்தறி துறைக்கும் தொழிலாளர்களுக்கும்... தான்.. அமைச்சருக்கு கல்தா சீக்கிரமே இருக்கும் பாருங்கள்.. விரைவில்... அதுவும் அதிவிரைவாகவும் இருக்கலாம்.....
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-செப்-201418:12:40 IST Report Abuse
Malick Raja அமைச்சரின் பதவி எப்போது பறி போகும் அப்புறம் காற்றுப்போன பலூன் போல் தான்... ஆனால் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் என்றும் திலங்குவர்... காலம் வரும்.. அமைச்சர் பதவி போனபின்பு எங்காவது சகாயம் கையில் மாட்டும் போது சகாயம் மிகவும் தனது நேர்மையைதான் நிலை நாட்டுவார்.. அப்போது இன்றைய அமைச்சர் வருந்துவார்.. ஆனால் பயனில்லை.. (இ.ஆ. ப.). I .A .S பதவி என்பது வற்றாத நீரோடை.. அமைச்சர் பதவி என்பது............கானல் நீர்தான்.. திருமிகு..சகாயம் அவர்கள் ஒருக்காலும் வருந்த மாட்டார்.. தனக்கு இப்போது கிடைத்திருக்கும் பதவியையும் ஜொலிக்க வைப்பார்...ஆனால் அமைச்சர் என்ற பதவி இருக்கும் வரைதான்..பெயருக்கு முன் இருக்கும் .. ஆனால் திருவாளர் சகாயம் அவர்களின் பெயருக்கு என்றென்றும் மதிப்புடனே திகழும்..
Rate this:
Cancel
Jawahar - Erode,இந்தியா
07-செப்-201404:12:13 IST Report Abuse
Jawahar சகாயம் போன்றவர்கள் தான் நாடாள வேண்டும். சகாயம் அவர்கள் அடுத்த சட்ட சபை தேர்தலில் நின்றால் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.
Rate this:
Muthusamy Thiagarajan - Coimbatore,இந்தியா
17-செப்-201406:40:32 IST Report Abuse
Muthusamy Thiagarajanஉமக்கு ஏனையா இந்த கெட்ட புத்தி?அவர் ஒழுங்கான அதிகாரியாக இருப்பது உமக்கு பிடிக்கவில்லையா?...
Rate this:
Muthusamy Thiagarajan - Coimbatore,இந்தியா
17-செப்-201406:43:06 IST Report Abuse
Muthusamy Thiagarajanகரும்பைக் கடித்து கண்துகர நூறி இடித்து நீர் கொள்ளினும் இன்சுவைத்தே ஆகும்.......சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X