பெரியாறு அணை மூவர் குழு ஆய்வு நடத்துவது எப்போது?

Updated : செப் 05, 2014 | Added : செப் 05, 2014 | கருத்துகள் (2) | |
Advertisement
கூடலுார்:பெரியாறு அணை நீர்மட்டம், 130 அடியைக் கடந்துவிட்டதால், ஏற்கனவே முடிவு செய்தபடி, மூவர் குழு அணையை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம், முன்கூட்டியே ஏற்பட்டுள்ளது.பெரியாறு அணை நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்தவும், அணைப் பகுதியில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளவும், மூன்று பேர் கொண்ட குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது.
When Periyar dam to test the three-judge panel?

கூடலுார்:பெரியாறு அணை நீர்மட்டம், 130 அடியைக் கடந்துவிட்டதால், ஏற்கனவே முடிவு செய்தபடி, மூவர் குழு அணையை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம், முன்கூட்டியே ஏற்பட்டுள்ளது.
பெரியாறு அணை நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்தவும், அணைப் பகுதியில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளவும், மூன்று பேர் கொண்ட குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழு, ஆய்வு நடத்தி, அணையில், 13 மதகுகளையும் இறக்கி நீர்மட்டத்தை, 142 அடி அளவுக்கு உயர்த்தும் நடவடிக்கையை மேற்கொண்டது.
அதன்பின் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அணைப் பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்துவது, வல்லக்கடவில் இருந்து அணைப்பகுதி வரை, வனப்பகுதிக்குள் உள்ள சாலையை சீரமைப்பது, அணை பகுதிக்கு, மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளை துரிதப்படுத்த, மூவர் குழு முடிவு செய்தது.குழுவின் மூன்றாவது கூட்டத்தில், அணைப்பகுதியில் அடிக்கடி ஆய்வு நடத்த, ஐந்து பேர் கொண்ட மேற்பார்வை துணைக்குழு அமைக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக, வரும் 26ம் தேதி, அணையை, மூவர் குழு ஆய்வு செய்வது என்றும், அதுவரை துணைக்குழு ஆய்வு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம், 130 அடியைக் கடந்து விட்டால், முன்கூட்டியே மூவர் குழு ஆய்வு நடத்தும் என, முடிவு செய்யப்பட்டிருந்தது.அணை நீர் மட்டம், நேற்று முன்தினம் காலை, 130 அடியை தாண்டிவிட்டது.
அணைப் பகுதியில், தொடர்ந்து மழை பெய்வதால், நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால், மூவர் குழு, முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் குறித்த தகவல், மேற்பார்வை துணைக்குழு சார்பில், மூவர் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-செப்-201404:51:47 IST Report Abuse
Kasimani Baskaran நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் எந்த அளவுக்கு ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்பதை பற்றிய தகவல் இல்லாதது வருத்தமளிக்கிறது...
Rate this:
manokaran - kanchipuram,இந்தியா
05-செப்-201413:27:37 IST Report Abuse
manokaranஆக்கிரமிப்பு செய்தவர்கள் ,தமிழக மற்றும் கேரளா தொழில் அதிபர்கள், சாதாரண மக்கள் அல்ல ,எனவே இதை பற்றி தெளிவாக தினமலர் வெளியிட்டால் மக்களுக்கு புரியும் .செய்யுமா தினமலர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X