தமிழ்நாடு

கூடலூரில் தி.மு.க., பிரமுகர் கொலை

Added : அக் 14, 2010
Share
Advertisement
கூடலூர் : இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற தி.மு.க., கிளைச் செயலாளர் கொலை செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் கூடலூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் நடேசன்; இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு அப்பகுதியில் 4 ஏக்கர் தேயிலை தோட்டம் உள்ளது. ஜெயலட்சுமியின் சகோதரர் சங்கரலிங்கம். சென்னையேச் சேர்ந்த இவர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். "இந்த இடம்

கூடலூர் : இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற தி.மு.க., கிளைச் செயலாளர் கொலை செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் நடேசன்; இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு அப்பகுதியில் 4 ஏக்கர் தேயிலை தோட்டம் உள்ளது. ஜெயலட்சுமியின் சகோதரர் சங்கரலிங்கம். சென்னையேச் சேர்ந்த இவர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். "இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனவும், இடத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்,' எனவும் சங்கரலிங்கம் கூறி வந்துள்ளார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலையில் சங்கரலிங்கத்தின் மனைவி மற்றும் இரு மகன்கள் உட்பட சிலர் தேயிலை தோட்டத்தில் இலை பறித்து கொண்டிருந்த போது, இவர்களுக்கும், ஜெயலட்சுமி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்களை சமரசம் செய்ய, அப்பகுதியை சேர்ந்த தி.மு.க., கிளைச் செயலாளர் கிருஷ்ணன் (48) மற்றும் சிலர் அங்கு சென்றனர். அப்போது ஒரு கும்பல் கிருஷ்ணனை கம்பியில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிலர் அழைத்து வந்தனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X