திண்டுக்கல் : மேலவை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவ. 6 வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வள்ளலார் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் மேலவை தேர்தலுக்காக பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் பெயர் சேர்த்தல் குறித்த சர்வ கட்சி கூட்டம் நடந்தது. கலெக்டர் வள்ளலார் தலைமை வகித்தார். நாகராஜன்(தி.மு.க.,), ஜெயபால் (அ.தி.மு.க.,), கோபால்(பா.ம.க.,) உட்பட பலர் பங்கேற்றனர்.
தெற்கு மத்திய பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதியில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் அடங்கியுள்ளது.
மதுரை டி.ஆர்.ஓ., வாக்காளர் பதிவு அலுவலராவார். திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, கொடைக்கானல் ஆர்.டி.ஓ.,க் கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாவார்கள். பட்டதாரி மற்றும் ஆசிரியர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவ. 6 வரை தாலுகா அலுவலகங்களில் தனித்தனியாக விண்ணப்பிக்கலாம். வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE